வ. முல்லைவேந்தன்

வ. முல்லைவேந்தன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சராவார். இவர் ஆசிரியராக தன் வாழ்வைத் துவக்கியவர்.

அரசியல் வாழ்க்கை தொகு

இவர் தன் அரசியல் வாழ்வில் முதலில் அ.இ.அ.தி.மு.க பேச்சாளராக இருந்தவர். பின் தி.மு.கவில் இணைந்து தருமபுரி மாவட்ட தி. மு.க. செயலாளராக ஆனார்.

சட்டமன்ற உறுப்பினர் தொகு

தமிழக சட்டமன்ற உறுப்பினராக1989, 1996, 2006 ஆம் ஆண்டுகளில் மொரப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமைச்சர் தொகு

தி.மு.க. அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பர அமைச்சராக 1996இல் நியமிக்கப்பட்டார்.

2001ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் தர்மபுரியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதியில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்புமணி கடுமையாகத் தாக்கப்படுவதற்குக் காரணமாக இருந்ததாலும் அமைச்சர் தமிழ்க்குடிமகன் பொறுப்பிலிருந்த அறநிலையத்துறை யில் தலையிட்டு ஆலயத்திற்குச் சொந்தமான நிலங்களை ஏலம்விடுவதற்குத் தடையாக இருந்ததாலும் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதியால் அமைச்சரவையில் இருந்து விலகுமாறு 2001 மார்ச் 8 ஆம் நாள் கேட்டுக்கொள்ளப்பட்டார்.[1][2]

== தேர்தல்==

2001 ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். மீண்டும் 2006 ஆண்டைய தேர்தலில் வெற்றி பெற்றார். 2014 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு விளக்கம் கேட்டு, அப்போது தர்மபுரி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த முல்லைவேந்தன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியது கட்சி தலைமை, பிறகு முல்லைவேந்தன் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி 2015 ஆண்டு சூலை மாதம் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

தே.மு.தி.க.வில் தொகு

தே.மு.தி.கவில் இணைந்தார்,[3][4] என்றாலும் தீவிரமாக செயல்படாமல் ஒதுங்கி இருந்தார்.

மீண்டும் தி.மு.க.வில் தொகு

இந்நிலையில் கருணாநிதியின் மறைவையடுத்து திமுக தலைவராக மு. க. ஸ்டாலின் ஆன பிறகு 2018 ஆகத்து 31 அன்று மீண்டும் திமுகவில் இணைந்தார்.[5]

மீண்டும் அ.தி.மு.க.வில் தொகு

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், சமயத்தில் எடப்பாடி க. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. தினமணி, மதுரை, 2001 மார்ச் 9
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. "10,000 பேருடன் விரைவில் தே.மு.தி.க.வில் ஐக்கியம்... மாஜி முல்லைவேந்தன் அறிவிப்பு". ஒன்இந்தியா. http://tamil.oneindia.com/news/tamilnadu/mullaivendhan-plans-join-dmdk-234153.html. பார்த்த நாள்: 28 மார்ச் 2016. 
  4. "தே.மு.தி.க. சார்பில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் போட்டி?". மாலை மலர். http://www.maalaimalar.com/2016/03/28151853/Former-minister-Mullaivendhan.html. பார்த்த நாள்: 28 மார்ச் 2016. 
  5. "கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தன் மீண்டும் திமுகவில் இணைந்தனர்". செய்தி (இந்து தமிழ்). 31 ஆகத்து 2018. https://tamil.thehindu.com/tamilnadu/article24830127.ece. பார்த்த நாள்: 2 செப்டம்பர் 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._முல்லைவேந்தன்&oldid=3588101" இருந்து மீள்விக்கப்பட்டது