சக்தோ ராசா ( ஷக்தா ராசா, ஷாக்தா ராஷ், ஷாக்தா ராசா or ஷாக்தோ ராஸ் ; வங்காள மொழி: শাক্তরাস ) இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள நபத்விப்பில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த விழா இலையுதிர்கால துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு முப்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு அல்லது கார்த்திக பூர்ணிமாவில் நடைபெறும் காளி பூஜைக்குப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. நபத்வீப் மக்களுக்கு ராஷ் திருவிழாமிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒட்டுமொத்த நபத்விப் மக்களும் ஆண்டு முழுவதும் இவ்விழாவிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.[1]

சக்தோ ராசா
நப்தீப் ராஷ் யாத்திரையில் டுமுரேஸ்வரி மாதா
பிற பெயர்(கள்)ராஷ் காளி, பூஜை ராஷ் யாத்திரை
கடைப்பிடிப்போர்வங்காள ஷக்தா இந்துக்கள்
வகைவங்காள இந்துக்கள் [1]
நாள்30 November (2020)
19 November (2021)

நபத்வீப் ராஷின் முக்கிய அம்சங்கள் களிமண்ணால் பெரிய மூர்த்திகளை உருவாக்குவதும் சக்தியை வழிபடுவதும் ஆகும். ஒவ்வொரு மூர்த்தியும் வித்தியாசமான் கலை வடிவமைப்பு, பலவிதமான கற்பனை, மத சொற்பொழிவு மற்றும் அறிஞர்களைப் பற்றிய ஆழமான புரிதல் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. இது எண்ணற்ற மக்களை மகிழ்வூட்ட உதவுகிறது.[2] கார்ட்டூன் சித்திரக் கலைஞர் சண்டி லஹிரி கூறுகையில், களிமண் மூர்த்திகளின் பிரமாண்டம் மற்ற பண்டிகைகளிலிருந்து வேறுபடுவதற்காண காரணம் நபத்வீப்பின் மூர்த்திகள் குறைந்த எடை மற்றும் மகத்தான விகிதாச்சாரம் கொண்ட வடிவங்களாகவும் சமச்சீராகவும் இருப்பதேயாகும்.

வரலாற்று அடிப்படைகள்

தொகு

ராஸ் திருவிழா வைணவத்தின் ஒரு பகுதியாகும். இது நபத்விப்பில் சைதன்யா தேப் காலத்தில் அல்லது அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் சைதன்யா தேப் வைணவப் பண்டிகையே ஆகும். ஷக்தா ராஸ் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. சாக்த ராஸ் திருவிழா வைஷ்ணவத்தை விட பழமையானதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏனெனில் ஆரம்பத்தில், படச்சித்திரத்தில் சிலைகள் வழிபாடு செய்யப்பட்டன. கிருஷ்ணச்சந்திரா மற்றும் முக்கியமாக கிரிஷ்சந்திரா காலத்தில், நபத்வீப் ராஷ் யாத்திரை பிரபலமானது. கிருஷ்ண சந்திரா மற்றும் கிரிஷ்சந்திரா ஆகியோர் திருவிழாவை பிரபலப்படுத்த அதிக பணம் செலவழித்தனர். அதன் பின்னரே களிமண் சிலை மூலம் வழிபாடு செய்வது தொடங்கியது. [3]

நபத்வீப் ராஸின் முதல் காட்சியை கிரீஷ் சந்திர பாசு எடுத்துக்காட்டினார். 1853-1860 இல், அவர் நபத்வீப் - சாந்திபூர் மற்றும் கிருஷ்ணாநகர் ஆகியவற்றின் தரோகாவாக இருந்தார். அவரது புத்தகமான சேகலர் தரோகா கஹினி (கி.பி. 1888 இல் வெளியிடப்பட்டது), அவர் அக்கால நபத்வீப்பின் புவியியல் இருப்பிடத்துடன் பல்வேறு சமூக-கலாச்சார அறிக்கைகளை எழுதினார்.[4]

காளி பூஜை மற்றும் ராஸ் திருவிழா

தொகு

நபத்வீப் தந்திரத்தின் சரணாலயம் என்று அறியப்படுகிறது. பல சாக்த மற்றும் தந்திர தத்துவவாதிகள் சாக்த ராஸ் திருவிழா தொடங்குவதற்கு முன்பே தேவி காளியை வழிபட்டனர். பின்னர் இந்த காளி சிலைகள் ராஸ் திருவிழாவில் வழிபாடு செய்யப்பட்டன. பன்னிரண்டாம் அல்லது பதினான்காம் நூற்றாண்டிலிருந்து, தந்திரம் வங்காளத்தில் உள்ள தந்திர தத்துவஞானிகளின் போக்கால் வளப்படுத்தப்பட்டது.

வைண்வத்துடன் மோதல்

தொகு

16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சில வைணவ அறிஞர்கள் வைணவ இயக்கத்தைத் தொடங்கினர். எனவே இது தந்திரத்தை வழிபடும் சாக்த ஆதரவாளர்களுடன் ஒரு வெளிப்படையான மோதலாகவே இருந்தது.

ஆரம்ப காலத்தில் ஷக்தா ராஸ்

தொகு

பல முறை வெள்ளம் மற்றும் பூகம்பம் ஏற்பட்டதால் ஷக்தா ராஸின் ஆரம்ப கால ஆவணங்கள் மிகவும் அரிதானவையாகிவிட்டன. கிரிஷ் சந்திர பாசு மற்றும் காந்தி சந்திர ராரி ஆகியோர் ஆரம்ப நாட்களில் ஷக்த ராஸின் பார்வையை தன்கள் எழுத்துகள் மூலமாக வழங்கியுள்ளனர்.

கிரிஷ் சந்திர பாசு

தொகு

கிரிஷ் சந்திர பாசு, நபத்வீப்-சாந்திபூர்-கிருஷ்நகரின் தரோகா, "செகலேர் தரோகா கஹானி’யில், நாடியாவின் சமூக-கலாச்சார பார்வையை விவரித்துள்ளர்ர்.

காந்தி சந்திர ராரி

தொகு

வரலாற்றாசிரியர் காந்தி சந்திர ராரியும் நபத்வீப் மஹிமா என்ற புத்தகத்தில் நபத்வீப் ராஸ் பற்றி எழுதியுள்ளார். ஷக்த ராஸ் ஜாத்ரா நீண்ட வருடத்திற்கு முன்பு கொண்டாடப்பட்டது என்பதை அங்கு அவர் உறுதிப்படுத்தினார்.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nabadwip Shakta Ras Jatra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 "রাসে পরিবর্তনের ছোঁয়া, খুশি নবদ্বীপ" (in bn). Anandabazar Patrika. https://www.anandabazar.com/district/nadia-murshidabad/%E0%A6%B0-%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%9B-%E0%A7%9F-%E0%A6%96-%E0%A6%B6-%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%A6-%E0%A6%AC-%E0%A6%AA-1.84818. 
  2. "About Rash/History - Nabadwip, oxford of old east". sites.google.com. Archived from the original on 2020-10-10. பார்க்கப்பட்ட நாள் 2017-12-22.
  3. Nadia Kahini, addition, pg-372
  4. Basu, Girish Chandra (1960). সেকালের দারোগা কাহিনী (Sekaler Daroga Kahini).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷக்தா_ராஷ்&oldid=3703313" இலிருந்து மீள்விக்கப்பட்டது