ஷாகி, அசர்பைஜான்
ஷாகி (Shaki) 1968 வரை நுகா என்ற பெயரில் அழைக்கப்பட்ட இது, காக்கேசியாமலைத்தொடரின் தெற்குப் பகுதியில், வடமேற்கு அசர்பைஜானிலுள்ள ஒரு நகரமாகும்.
ஷாகி | |
---|---|
குடியரசின் துணை நகரம் | |
நாடு | அசர்பைஜான் |
பிராந்தியம்]] | ஷாகி-ஜக்கதலா |
அரசு | |
• தலைமை நிர்வாகி | எல்கான் உசுபோவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 9 km2 (3 sq mi) |
ஏற்றம் | 700 m (2,300 ft) |
மக்கள்தொகை (2017)[2] | |
• மொத்தம் | 68,360 |
• அடர்த்தி | 7,600/km2 (20,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+4 |
இணையதளம் | sheki-ih |
தலைநகர் பக்கூவிலிருந்து 240 கி.மீ (150 மைல்) தொலைவில் உள்ளது. இதன் மக்கள் தொகை 63,000 பேர் என்ற ஆவில் இருக்கிறது.
சொற்பிறப்பியல்
தொகுஅசர்பைஜானின் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, கிமு 7 ஆம் நூற்றாண்டில் நவீன அசர்பைஜானின் நிலப்பரப்பை அடைந்து பல நூற்றாண்டுகளாக மக்கள் வசித்த சகர்களின்இனப்பெயருக்கு இந்த நகரத்தின் பெயர் செல்கிறது. [3] இடைக்கால ஆதாரங்களில், நகரத்தின் பெயர் ஷேக், ஷேக்கி, ஷாகா, ஷக்கி, ஷக்னே, ஷேக்கன், ஷக்கான், ஷெக்கின் போன்ற பல்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.
வரலாறு
தொகு1 ஆம் நூற்றாண்டில் அல்பேனிய மாநிலங்களின் மிகப்பெரிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும். பண்டைய அல்பேனியர்களின் பிரதான கோயில் இங்கு அமைந்துள்ளது. ஷாகி இராச்சியம் 11 நிர்வாக மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அரபு படையெடுப்பிற்கு முன்னர் இது முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார நகரங்களில் ஒன்றாகும். ஆனால் படையெடுப்பின் விளைவாக, நகரம் மூன்றாவது அமீரகத்துடன் இணைக்கப்பட்டய்ஜு. அரேபிய கலிபா பலவீனமாக இருந்த காலங்களில் ஒரு சுயாதீன சியார்சியா அரசாங்காம் நிறுவப்பட்டது. [4] மங்கோலிய படையெடுப்பிற்கு முன்னர் இந்த நகரம் அசர்பைஜானின் அட்டாபெக்ஸ் மற்றும் குவாரசமிய பேரரசால் ஆளப்பட்டது. [4]
பழங்காலம்
தொகு2700 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பெரிய அளவிலான குடியேற்றங்கள் இருந்தற்கான தடயங்கள் உள்ளன. சகர்கள் ஒரு ஈரானிய மக்களாக இருந்தனர். அவர்கள் கருங்கடலின் வடக்குப் பகுதியிலிருந்து டெர்பெண்ட் பாதை வழியாகவும், தெற்கு காக்கேசியா வழியாகவும், கிமு 7 ஆம் நூற்றாண்டில் அங்கிருந்து ஆசியா மைனருக்கும் அலைந்து திரிந்தனர். தெற்கு காக்கேசியாவில் சாகசேனா என்ற பகுதியில் வளமான நிலங்களை அவர்கள் நன்றாக ஆக்கிரமித்தனர். சகர்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் ஷாகி நகரம் ஒன்றாகும். அசல் குடியேற்றம் வெண்கல யுகத்தின் பிற்பகுதியில் உள்ளது.
நவீன சகாப்தம்
தொகுநிலவியல்
தொகுநகரம் காக்கேசிய பனி சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. இது சில இடங்களில் 3000–3600 மீட்டர் வரையிலும் உயரம் கொண்டது. இதன் காலநிலையில் சூறாவளிகள், உயர் காற்றழுத்தப் பகுதி, காற்று நிறை உள்ளூர் காற்றுகள் போன்றவை காணப்படுகின்றன. நகரத்தில் சராசரி ஆண்டு வெப்பநிலை 12. C ஆகும். சூன் மற்றும் ஆகத்து மாதங்களில், சராசரி வெப்பநிலை 20 முதல் 25 ° C வரை மாறுபடும்.
இப்பகுதியைச் சுற்றியுள்ள மலைக் காடுகள் நகரத்தை வெள்ளம் மற்றும் கோடை காலத்தில் வெப்பமடைவதைத் தடுக்கின்றன. கிஷ், குர்ஜானா ஆகிய ஆறுகள் நகரத்தின் முக்கிய ஆறுகளாகும் . அசர்பைஜானின் சோவியத் ஆட்சியின் போது, பலர் நகரத்தின் அதன் மதிப்புமிக்க கனிம நீரூற்றுகளில் குளிக்க வருகை புரிந்தனர்.
புள்ளிவிவரங்கள்
தொகுநகரின் மக்கள் தொகை 174.1 ஆயிரமாகும். இதில், கிராமப்புற மக்கள் தொகை 105.7 ஆயிரமாகவும், நகர்ப்புற மக்கள் தொகை 66.9 ஆயிரமாகவும் இருக்கிறது. மக்கள் தொகை அடர்த்தி 1 சதுர கிலோமீட்டருக்கு 72 பேர் என்ற அளவில் இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில், 86.4 ஆயிரம் அல்லது 49.6% ஆண்களும், 87.7 ஆயிரம் அல்லது 50.4% பெண்களும் இருக்கின்றனர். மக்கள் தொகையில் 38.4 சதவீதம் பேர் நகரத்திலும் 61.6 சதவீதம் பேர் கிராமத்திலும் வாழ்கின்றனர். [5]
மதம்
தொகுபண்டைய காக்கேசிய அல்பேனிய தேவாலயங்களுக்கு ஒரு இருப்பிடமாக இருந்தது. நகரில் பல தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உள்ளன. நகர்த்தின் அருகிலுள்ள கிஷ் தேவாலாயம் போன்ற சில தேவாலயங்கள் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது. கான் பள்ளிவாசல், உமர் எபெண்டி பள்ளிவாசல், கிலிலி மினாரட்டு ஆகியவை நகரத்தின் முக்கியமான வழிபாட்டுத் தலங்களாகக் கருதப்படுகின்றன. [6]
பொருளாதாரம்
தொகு1850-70 காலப்பகுதியில், நகரம் சர்வதேச பட்டு உற்பத்தி மையமாக மாறியது. 200க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நிறுவனங்கள் நகரத்தில் அலுவலகங்களைத் திறந்தன. அதே நேரத்தில் ஒரு வருடத்தில் 3 மில்லியன் ரூபிள் அளவுக்கு பட்டுப்புழுக்கள் விற்கப்பட்டன. [7]
நகரம் ஒரு சிறிய பட்டுத் தொழிலைக் கொண்டுள்ளது. மேலும் அதன் விவசாயத் துறையை நம்பியுள்ளது. இது புகையிலை, திராட்சை, கால்நடைகள், கொட்டைகள், தானியங்கள், பால் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. நகரத்தின் முக்கிய உற்பத்தி வசதிகள் பட்டு தொழிற்சாலை, எரிவாயு மின் உற்பத்தி நிலையம், செங்கல் தொழிற்சாலை, வைன் தொழிற்சாலை, தொத்திறைச்சி தொழிற்சாலை, பாதுகாப்பு தொழிற்சாலை மற்றும் அதன் ஒருங்கிணைந்த பெரிய அளவிலான பெடிகிரீ பால் பண்ணை கொண்ட ஒரு பால் ஆலை போன்றவை.
புகைப்படத் தொகுப்பு
தொகு-
ஷாகியில் ஒரு பண்டைய வீடு
-
ஷாகி கலாச்சார மாளிகை
-
அல்பேனிய தேவாலயத்தின் முன் பார்வை
-
ஷாகியின் பழைய தெருக்களில் ஒன்று
-
ஷாகி கான் அரண்மனையின் கதவு
-
6 ஆம் நூற்றாண்டு காக்கேசிய அல்பேனிய தேவாலயம்
-
ஷாகியின் கேரவன் பயணிகள் மாளிகையின் காட்சி
-
ஓமர் எபெண்டி பள்ளிவாசல்
-
ஷாகி கோட்டை
-
கானின் அரண்மனை ஷாகி
-
ஷாகிக்களின் வீடு
-
பயணியர் மாளிகை]]
-
ஆஷாகி பிரயாண மாளிகை
-
பர்ஹத்பாயோவ்களின் வீடு
-
அலிஜன்பயோவ்களின் வீடு
-
வெள்ளிக்கிழமை பள்ளிவாசலின் மினாரெட்
-
ஓமர் எபெண்டி பள்ளிவாசல்
-
அக்வான்லர் குளியல் அறை
-
ஷாகியில் நிலத்தடி குளியல் அறை
-
ஷாகியில் உள்ள பழைய அல்பேனிய தேவாலயம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shaki, Azerbaijan Page". பார்க்கப்பட்ட நாள் 3 July 2008.
- ↑ World Gazetteer: Azerbaijan[தொடர்பிழந்த இணைப்பு] – World-Gazetteer.com
- ↑ "Narinqala: Shaki's History". Archived from the original on 9 July 2011. பார்க்கப்பட்ட நாள் 6 December 2010.
- ↑ "Sheki history". Azerbaijan Tour Agency. Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 7 December 2010.
- ↑ belediyye.io.ua General information about Shaki
- ↑ "Azerbaijan24: Sheki". Archived from the original on 13 December 2010. பார்க்கப்பட்ட நாள் 6 December 2010.
- ↑ Aliyarli, Suleyman. "The Great Silk Road and trade between the Caspian and Europe". www.visions.az. பார்க்கப்பட்ட நாள் 13 November 2014.
வெளி இணைப்புகள்
தொகு- சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Shaki (as Şəki)
- Azerbaijan Development Gateway – Sheki