ஷிகா பாண்டே

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ஷிகா பாண்டே (Shikha Pandey) (பிறப்பு மே 12, 1989) இந்திய துடுப்பாட்ட வீரர்.இவர் வங்காளதேச "ஷேக் கமல் சர்வதேசாரங்கம், காக்ஸ் பஜார் துடுப்பாட்ட அரங்கத்தில் 2014, மார்ச்சு 9இல் நடைபெற்ற பெண்கள் இருபது-20 போட்டியில் அறிமுகமானார். அதில் வங்காளதேச பெண்கள் அணிக்கு எதிராக விளையாடினார்.[1][2] அதே வருடம், ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற பெண்கள் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். இதுவரை இரண்டு தேர்வு போட்டிகள், இருபத்தி ஏழு ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபத்திரண்டு இருபது.20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக விளையாடியுள்ளார்.[3]

ஷிகா பாண்டே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஷிகா சுபாஷ் பாண்டே
பிறப்புவார்ப்புரு:பிறந்த தேதி மற்றும் வயது
கரீம்நகர், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவகதுகை மிதவேகம்
பங்குAll rounder
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்13 ஆகஸ்டு 2014 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு16 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம்21 ஆகஸ்டு 2014 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப24 சனவரி 2019 எ. நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்12
இ20ப அறிமுகம்9 மார்ச்சு 2014 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப10 சூன் 2018 எ. பங்களாதேஷ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே து ஒபது ப இ20
ஆட்டங்கள் 2 32 22
ஓட்டங்கள் 37 59 140
மட்டையாட்ட சராசரி 37.00 24.71 14.00
100கள்/50கள் 0/0 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 22* 59 26*
வீசிய பந்துகள் 159 1410 288
வீழ்த்தல்கள் 4 45 12
பந்துவீச்சு சராசரி 20.00 19.46 25.16
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/33 4/34 3/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 5/- 6/-
மூலம்: ESPNcricinfo, 24 சனவரி 2019

இளமைப்பருவம் தொகு

பாண்டே தனது பள்ளிக் கல்வியினை மத்திய வழி கல்வி வாரியத்தில் முடித்தார். தனது 15வது வயதில் மாநில அளவில் விளையாடுவதற்கு,முதல் விளையாட்டு வீரராக இந்திய அணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] மும்பையின் முன்னாள் விளையாட்டு வீரர் சுரேகா பாந்தரே அவரின் விளையாடும் திறனைப் பாராட்டி இந்திய அணியில் விளையாடுவதற்குரிய தகுதிகளைப் பாண்டே பெற்றிருக்கிறார் என்று கூறியுள்ளார்..[4] பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பாண்டே மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அடுத்த மூன்று வருடங்களில் படிப்பிலும், துடுப்பாட்ட விளையாட்டிலும் கவனத்தை செலுத்தினார். கல்லூரியில் படிக்கும் போது விளையாட்டுப் பயிற்சியில் தீவீரக் கவனம் செலுத்தினார்..[4] காலையில் உடற்பயிற்சி, மற்றும் படிப்பிற்காகவும், மாலையில் முன்னாள் கோவா விளையாட்டு வீரர் நிதின் வர்னேக்கரிடம் துடுப்பாட்ட பயிற்சிக்காகவும் தனது நேரத்தை செலவிட்டார்.

2010இல் கோவா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவுடன், மூன்று சர்வதேச நிறுவனங்களில் அவருக்கு வேலை வாய்ப்பு வந்தது. பாண்டே அதை விடுத்து ஒரு வருடம் துடுப்பாட்ட விளையாட்டில் தீவீரக் கவனம் செலுத்தினார்.[4] சூலை 2011இல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். சூன் 2012இல் விமான போக்குவரத்து கட்டுப்படுத்துனராக நியமிக்கப்பட்டார்.[5][6]

தொழில் தொகு

2004இல் கோவா துடுப்பாட்ட சங்கம், கோவாவில் விளையாடுவதற்கு தனது 15வது வயதில் தேர்வு செய்யப்பட்டார். 17ம் வயதில் கோவா மூத்த மகளிர் அணி சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு நாட்கள் நடைபெற்ற ராணி ஜான்சி கோப்பை போட்டியில் 4 இலக்குகளை வீழ்த்தினார். சர்வதேச போட்டியாளரான திருஷி காமினி இவரது முதல் இலக்காகும்.பிறகு, மண்டல அளவிலான, 19 வயதிற்கு உட்பட்ட போட்டியில் கோவா அணியில் பங்கேற்று மூன்று அரை-சதங்கள் அடித்தார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "India recall Latika Kumari, Sravanthi Naidu for Women's WT20". ESPN Cricinfo. 21 February 2014. http://www.espncricinfo.com/women/content/story/721183.html. பார்த்த நாள்: 27 November 2014. 
  2. "गोव्याची शिखा पांडे भारतीय क्रिकेट संघात" (in Marathi). Tarun Bharat. 21 February 2014 இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141205070443/http://www.tarunbharat.com/?p=39089. பார்த்த நாள்: 27 November 2014. 
  3. "Shikha Pandey". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 July 2017.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Hard-working Shikha Pandey lives her dream". ESPNcricinfo (in ஆங்கிலம்). 20 August 2017. பார்க்கப்பட்ட நாள் 15 December 2018.
  5. "Shikha, and engineering cricket dreams". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. Archived from the original on 5 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Shikha Pandey LT interview October 2017 Lucknow Show". LT Media. பார்க்கப்பட்ட நாள் 21 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷிகா_பாண்டே&oldid=3772866" இலிருந்து மீள்விக்கப்பட்டது