ஷீலா சிறீ பிரகாஷ்
ஷீலா ஸ்ரீ பிரகாஷ் (Sheila Sri Prakash) (பிறப்பு: ஜூலை 6, 1955) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓர் கட்டிடக் கலைஞரும், நகர்ப்புற வடிவமைப்பாளருமாவார் [2] [3] இவர்ட், "ஷில்பா ஆர்கிடெக்ட்" என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார். இந்தியாவில் தனது சொந்த கட்டடக்கலை பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கி இயக்கிய முதல் பெண்மணியுமாவார்.[4] [5] [6]
ஷீலா சிறீ பிரகாஷ் | |
---|---|
பிறப்பு | ஷீலா சிறீ பிரகாஷ் 6 சூலை 1955 போபால், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | அண்ணா பலகலைக்கழக கட்டிடக்கலைப் பள்ளி |
பணி | ஆர்கிடெக்ட் நகர்ப்புற வடிவமைப்பாளர் நிர்வாகி |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் ஷில்பா அறக்கட்டளை நிர்மானா இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஷில்பா ஆர்கிடெக்ட்[1] |
பிள்ளைகள் | பார்கவ் சிறீ பிரகாசு (son) பவித்ரா சிறீ பிரகாசு (மகள்) |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஷீலா ஸ்ரீ பிரகாஷ் இந்தியாவின் போபாலில் 1955 ஜூலை 6 ஆம் தேதி இராணுவ அதிகாரியான ஜி. கே. எஸ். பதி - எஸ். தங்கம்மாள் ஆகியோரின் மகளாகப் பிறந்தார். [7]
ஒரு குழந்தையாக, பாரம்பரிய இந்திய நடனம், இசை, கலைகளில் பயிற்சி பெற்றார். தனக்கு நான்கு வயதாக இருந்தபோது பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். மேலும் 1961 ஆம் ஆண்டில் முதல் அரங்கேற்றம் நடந்தது. பத்ம பூசண் தன்வந்தி ராமராவ் இவரை ஒரு குழந்தை அதிசயம் என்று அழைத்தார்.[8] இவர், பரதநாட்டியம், குச்சிப்புடி நடனக் கலைஞராக [9] மேலும், கோட்டு வாத்தியக் கருவியையும் வாசித்தார். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக, [10] இவர் பல நடன நிகழ்ச்சிகளை வழங்கினார். பாரம்பரியக் கலைகளில் அதிக வாய்ப்புகளைப் பெறவும், தண்டாயுதபாணி பிள்ளை அவர்களிடம் பரதநாட்டியத்தில் மேலதிகப் பயிற்சி பெறவும் இவரது குடும்பத்தினர் சென்னைக்கு சென்றனர். வேம்பதி சின்ன சத்யத்தின் மாணவராக இருந்த இவர், அவரது பல நடன நாடகங்களில் கதாநாயகியாக இருந்தார். பரதநாட்டியம், குச்சிபுடி, கோட்டு வாத்தியம் தவிர, செம்மொழி இந்திய இசை, ஓவியக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றிலும் பயிற்சிப் பெற்றார்.[11]
வீணைக் கலைஞராக, வீணை இசைக்கலைஞர் சிட்டி பாபுவுடன் "இராதா மாதவம்", "சிவலீலா விலாசம்" போன்ற நாட்டிய நிகழ்ச்சிகளில் நடித்து, இசையமைத்து பதிவு செய்தார்.[12] [13] [14]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ministry of Corporate Affairs, இந்திய அரசு (24 May 2017). "Board positions". Indian Company Info. Archived from the original on 23 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 9 ஜூலை 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "100 Che Contano in Architettura (Top 100 Most Influential Architects in the World)". it:Il Giornale dell'Architettura.
- ↑ Cătălin Ştefănescu (23 April 2017). "Sustainable architecture: An interview with Sheila Sri Prakash". Romanian Television.
- ↑ Role of Women in The Profession of Architecture (pg 311). Human Rights International Research Journal ISSN (Print) : 2320 – 6942; Volume 1 Issue 1.
- ↑ "Women Leaders at Work Series". https://blogs.wsj.com/indiarealtime/2013/12/10/women-not-aware-of-their-rights-at-work/.
- ↑ "India's 1st Woman To Establish Her Own Architectural Practice". Rethinking the Future. https://www.re-thinkingthefuture.com/know-your-architects/a648-sheila-sri-prakash-indias-first-woman-to-establish-her-own-architectural-practice/.
- ↑ Desai 2016.
- ↑ S. Mitchell 2016.
- ↑ "A Good Kuchipudi Recital". Movieland. 13 February 1970.
- ↑ NMN (20 April 1974). "Sweet and Graceful Natya Recital". தி இந்து Shilpa Architects web archive.
- ↑ Indian Council for Cultural Relations (1978). Cultural News from India, Volume 19. Indian Council for Cultural Relations, digitized by University of California (2010).
- ↑ "Chitti Babu Musings of a Musician (Volume 2) Accompanied by his Disciples". Columbia Records. 1972.
- ↑ Of matters spatial.
- ↑ "Architect Sheila Sri Prakash, Shilpa Architects Planners Designers". mgsarchitecture.in.
பொது ஆதாரங்கள்
தொகு- McCann, Michelle Roehm (October 2017). More Girls Who Rocked the World (pg 120) (in English). Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1582706412.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Srinivas, Daketi (March 2013). Role of Women in The Profession of Architecture (pg 308) (in English). Human Rights International Research Journal ISSN (Print) : 2320 – 6942; Volume 1 Issue 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81583-98-2.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Mitchell, Saundra (2016). 50 Impressive Kids and Their Amazing (and True!) Stories (in English). Puffin Books; Dgs Rep edition. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0147518132.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Desai, Madhavi (2016). Women Architects and Modernism in India: Narratives and contemporary practices (Visual and Media Histories) (in English). Routledge India; 1st edition. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1138210691.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
தொகு- Shilpa Architects – Official web site of architect's firm.