ஷீலா பாலாஜி
ஷீலா பாலாஜி (Sheela Balaji) சுவாமி தயானந்த சரஸ்வதியால், கிராமப்புற மக்களுக்கான கல்வி, கலை, மருத்துவநல தொண்டுகளுக்காக, 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இயக்கமான[1][2] தொண்டுக்கான அகில இந்திய இயக்கம் என்ற அரசு சாரா, இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நாரி சக்தி விருது பெற்ற இவர் தி. வே. சுந்தரம் ஐயங்காரின் பேத்தியாவார்.
ஷீலா பாலாஜி Sheela Balaji | |
---|---|
தேசியம் | இந்தியா |
கல்வி | இசுடெல்லா மேரிக் கல்லூரி |
பணி | அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் நிர்வாக அறங்காவலர் |
பணியகம் | தொண்டுக்கான அகில இந்திய இயக்கம் |
அறியப்படுவது | பாரம்பரிய அரிசி வகைகளை பாதுகாத்தல் |
பெற்றோர் | டி. எஸ். சீனிவாசன், பிரேமா சீனிவாசன் |
வாழ்க்கைத் துணை | டி. கே. பாலாஜி |
உறவினர்கள் | டிவிஎஸ் குழுமம் வேணு சீனிவாசன் (தொழிலதிபர்) (சகோதரர்) தி. வே. சுந்தரம் (தாத்தா) |
வாழ்க்கை
தொகுதொண்டுக்கான அகில இந்திய இயக்கத்தின் நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைவராக]] இருக்கிறார். இந்த மையம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடி கிராமத்தில் ஒரு பெரிய பள்ளியை நடத்தி வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் 100 விடுதிகளையும் கொண்டுள்ளது.[3] சீலா பாலாஜி சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளையின் பொறுப்பாளராகவும் உள்ளார்.[4]
2011 ஆம் ஆண்டில், சுவாமி தயானந்த சரஸ்வதி: பங்களிப்புகள் மற்றும் எழுத்துக்கள் என்ற இவரது புத்தகம் வெளியிடப்பட்டது.[5]
ஷீலா பாரம்பரிய உள்நாட்டு அரிசி வகைகளை பயிரிடத் தொடங்கினார்.[6] 2013 ஆம் ஆண்டில், மஞ்சக்குடியில் தானியங்களைக் கொண்டாட ஒரு திருவிழாவை ஏற்பாடு செய்தார். இது பழைய அரிசி வகைகளை மீண்டும் கண்டுபிடிக்க வழிவகுத்தது.
2018 ஆம் ஆண்டில், இவருக்கு நாரி சக்தி புரஸ்கார் வழங்கப்பட்டது.[7][8] இந்த விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் வழங்கினார். இவ்விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார். இந்த ஆண்டு சுமார் 40 நபர்கள் அல்லது அமைப்புகள் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் விருதுடன் ரூ 100,000 பரிசையும் பெற்றனர்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aim for Seva sets up 100th free student home". பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2015-12-04.
- ↑ "Meet Ms. Sheela Balaji, #NariShakti Puraskar 2017 awardee". PIB India. 7 March 2018. Archived from the original on 14 January 2021. பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.
- ↑ "Our Chairperson & Managing Trustee". sdet.in. Archived from the original on 12 April 2021. பார்க்கப்பட்ட நாள் 12 April 2021.
- ↑ "Pre-publication notice for Swami Dayananda Saraswati: Contributions & Writings" (PDF).
- ↑ "This Woman's Preserved 30 Indigenous Rice Varieties & Is Making Sure You Get a Grain of History Too!". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 21 July 2017. Archived from the original on 14 January 2021. பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.
- ↑ "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. Archived from the original on 2021-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
- ↑ "Meet Ms. Sheela Balaji, #NariShakti Puraskar 2017 awardee". PIB India. 7 March 2018. Archived from the original on 14 January 2021. பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.
- ↑ "International Women's Day: President Kovind honours 39 achievers with 'Nari Shakti Puraskar'". The New Indian Express. 9 March 2018. Archived from the original on 2021-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.