ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரி

கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி

ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரி (Stella Mary's College of Engineering) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறுதெங்கன்விளையில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும். [1] இந்த கல்லூரி 2012 ஆம் ஆண்டில் தொழில்முனைவோரும், நோவா கல்வி அறக்கட்டளையின் நிறுவனரான திரு நசரத் சார்லசால் நிறுவப்பட்டது. இக்கல்லூரி பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது. [2] [3] [4]

ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரி
குறிக்கோளுரைExperience Excellence
வகைதனியார்
உருவாக்கம்2012
தலைவர்திரு நாசரேத் சார்லஸ்
முதல்வர்ஆர். சுரேஷ் பெமெல் குமார்
துணைத் தலைவர்சுமித்ரா சா,்ரஸ் ஜுடிசன்
அமைவிடம்
ஆழிக்கல், கன்னியாகுமரி
, ,
8°8′0.7″N 77°20′32″E / 8.133528°N 77.34222°E / 8.133528; 77.34222
வளாகம்நாட்டுப்புறம்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.stellamarys.in

சேர்க்கை

தொகு

கல்லூரியியல் அனைத்து படிப்புகளுக்கான சேர்க்கையானது தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழக ஒற்றை சாளர அமைப்புக்கு (AU SWS) சென்று அதன்வழியாக நிரப்பப்படுகின்றது. மீதமுள்ள இடங்கள் நுழைவுத் தேர்வின் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடலாம்.

படிப்புகள்

தொகு

இங்கு பி.இ. / பி.டெக்-இல் 5 படிப்புகள் மற்றும் எம்.இ- இல் ஒரு படிப்பும் வழங்கப்படுகின்றன

  • பி.இ. குடிசார் பொறியியல்
  • பி.இ. இயந்திரப் பொறியியல்
  • கணினி அறிவியல் பொறியியல்
  • பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
  • பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்
  • எம்.இ. கணினி அறிவியல் பொறியியல்

வேலைவாய்ப்பு

தொகு

இக்கல்லூரியியல் வேலை வாய்ப்பு பிரிவு 2013 இல் நிறுவப்பட்டது. இந்தப் பிரிவானது இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுத்தர தொழில் நிறுவனங்களைக் கொண்டு வளாக நேர்காணல்களை ஏற்பாடு செய்கிறது, மேலும் மாணவர்களுக்கு தொழில் துறையில் பயிற்சி அளிக்கிறது. தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் வளாக வேலை வாய்ப்பு பயிற்சியானது (மனிதவள, தொழில்நுட்ப, ஜி.டி., எழுத்துத் தேர்வு) இறுதி ஆண்டுக்கு முன் வழங்கப்படுகிறது. இக்கல்லூரி இந்தியா மற்றும் கத்தார் நாட்டுத் தொழில் நிறுவனங்களுடன் தொழில்துறை உறவுகளை கொண்டுள்ளது.

விடுதி

தொகு

கல்லூரியில் வளாகத்தில் விருந்தினர் மாளிகை, மாணவர் விடுதி மற்றும் மாணவியர் விடுதி போன்றவை உள்ளன.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Stella Mary's College of Engineering, Kanyakumari". Careers 360. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-09-30.
  2. "UG Courses". Stella Mary's College. Archived from the original on 26 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 22 April 2015.
  3. "PG Courses". Archived from the original on 14 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 22 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "ANNA UNIVERSITY CHENNAI –" (PDF). annauniv.edu. பார்க்கப்பட்ட நாள் 22 April 2015.

வெளி இணைப்புகள்

தொகு