ஸ்ரீ சித்ரா கலைக்கூடம்

ஸ்ரீ சித்ரா கலைக்கூடம் (Sree Chitra Art Gallery) என்பது இந்தியாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கலைக்கூடம் ஆகும். இது 1935 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. [1] இது நேப்பியர் அருங்காட்சியகத்தின் வடக்குப் பக்கமாக அமைந்துள்ளது. இதை சித்திரைத் திருநாள் பலராம வர்மா திறந்து வைத்தார். இந்த கலைக்கூடத்தில் பாரம்பரிய மற்றும் சமகால ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ராஜா ரவி வர்மா, நிக்கோலஸ் ரோரிச், ஸ்வேடோஸ்லாவ் ரோரிச், ஜாமினி ராய், இரவீந்திரநாத் தாகூர், வி.எஸ். எல்லிநாதன், சி.ராஜா ராஜா வர்மா, மற்றும் கே.சி.எஸ். பணிக்கர் ஆகியோரின் தனிப்பட்ட தொகுப்புகளைக் கொண்ட ஓவியங்கள் உள்ளன. [2] இந்தக் கலைக்கூடத்தில் சுமார் 1,100 ஓவியங்கள் உள்ளன.

ராஜா ரவி வர்மாவின், தி மில்க்மேட் ஓவியம்(1904)

காட்சிப்பொருள்கள்தொகு

இந்த கலைக்கூடத்தில் முகலாய, ராஜ்புத், வங்காளம், ராஜஸ்தானி மற்றும் தஞ்சை கலைப் பாணிகளைச் சேர்ந்த கலைப் படைப்புகள் காட்சியில் உள்ளன. [1] [2] இங்கு சீன, ஜப்பானிய மற்றும் பாலினீய ஓவியங்கள், திபெத்திய தங்கா, மற்றும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து உள்ள காலத்தைச் சேர்ந்த இந்திய சுவரோவிய ஓவியங்களின் தனித்துவமான தொகுப்புகள் உள்ளன. [3] உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியங்களும், அஜந்தா, பாக், சிகிரியா மற்றும் சித்தன்னவாசல் ஆகிய இடங்களைச் சேர்ந்த சுவரோவியங்களின் சிறிய வடிவங்களும், காட்சியில் உள்ளன. மேலும் ஆவணக் காப்பக முக்கியத்துவத்தினைக் கொண்ட கையெழுத்துப் பிரதிகள் இங்கு உள்ளன. இந்த காட்சிக்கூடத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறிய அளவிலான தஞ்சை ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அசல் படைப்புகள்தொகு

காட்சிக்கூடத்தில் ரோரிச் படைத்த 15 அசல் படைப்புகளும் ராஜா ரவி வர்மாவின் 43 அசல் படைப்புகளும் உள்ளன. [4] ரவி வர்மாவின் அரிய பென்சில் ஓவியங்களும் காட்சிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. கிளிமானூரில் உள்ள சித்ராலயாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ரவி வர்மாவின் ஓவியங்கள் 1941 ஆம் ஆண்டில் நிரந்தரக் கடன் அடிப்படையில் கிளிமானூர் அரண்மனை நிர்வாகத்தினரால் கலைக்கூடத்திற்கு வழங்கப்பட்டன. [5] இந்த அரண்மனை முதலில் 70 ரவி வர்மா ஓவியங்களை ஒப்படைத்தது.ஆனால் அவற்றில் சில ஓவியங்கள் இட வசதியின்மை காரணமாக கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்படவில்லை. [6] கேரள அரசு 2005 ஆம் ஆண்டில் ரவி வர்மா ஓவியங்களைக் காக்கும் நோக்கில் அவற்றை மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொண்டது..[7] ரவி வர்மாவின் தலைசிறந்த ஓவியங்களான சகுந்தலா மற்றும் அன்னத்துடன் பேசும் தமயந்தி ஆகிய ஓவியங்கள் இந்த காட்சிக்கூடத்தில் பார்வையாளர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

விபத்துதொகு

2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக உண்டான தீ விபத்தின் காரணமாக, புதுப்பிக்கும் நோக்கில் கலைக்கூடம் மூடப்பட்டது [8] 2013 ஆம் ஆண்டில், சி.ராஜா ராஜ வர்மாவின் சில ஓவியங்கள் ஈரப்பதம் காரணமாக சேதம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. [9] அவ்வாறாகச் சேதம் அடைந்தவற்றில் செகந்திராபாத் ஏரி, உள்ளூர் கள்ளுக்கடை மற்றும் இமயமலை ஆகிய ஓவியங்கள் அடங்கும். ஒன்பது எண்ணெய் ஓவியங்களும், ரவி வர்மாவின் ஒரு நீர் வண்ண ஓவியமும் இடம் இல்லாததால் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. ஊஞ்சலில் ஆடுகின்ற பெண்மணி, மைசூர் யானை பிடித்தல், ஸ்ரீராமர் வில்லை வளைத்தல், இரண்டு குதிரைகள், ஊர்வலம், உருவப்பட ஆய்வு மற்றும் பட்டாம்பூச்சி போன்ற ஓவியங்கள் இதில் அடங்கும் . கலைக்கூடத்தில் ஒப்படைக்கப்பட்ட சில ஓவியங்கள் காணாமல் போய்விட்டதாக கிளிமானூர் அரண்மனை அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தது. [10] போதிய இட வசதி இல்லாததன் காரணமாக, கலைக்கூடத்திற்கு ஒரு புதிய கட்டிடம் கட்டுவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டு, அதற்கான அடிக்கல் 1985 ஆம் ஆண்டில் நாட்டப்பட்டது, ஆனால் அந்தப் பணிகளில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை.

குறிப்புகள்தொகு

  1. 1.0 1.1 "Sree Chithra Art Gallery, Thiruvananthapuram". Kerala Tourism.
  2. 2.0 2.1 "Sree Chitra Arts Gallery". kerala-tourism.org.
  3. "Sree Chitra Art Gallery". Government of Kerala.
  4. "Different views on Sri Chithra Art Gallery’s renovation". The Hindu. http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/different-views-on-sri-chithra-art-gallerys-renovation/article5280489.ece. பார்த்த நாள்: 30 December 2013. 
  5. "Something fishy, feels Kilimanoor Palace Trust". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/article201094.ece. பார்த்த நாள்: 30 December 2013. 
  6. "രവിവര്‍മ്മ ചിത്രങ്ങളുടെ അമൂല്യ കലവറയില്‍ തീപിടിത്തം". Manorama Online. http://www.manoramaonline.com/cgi-bin/mmonline.dll/portal/ep/manoramahome/content/printArticle.jsp?tabId=16&contentOID=7668675&language=english&BV_ID=@@@. பார்த்த நாள்: 30 December 2013. 
  7. "Restoring works of art". The Hindu. http://www.hindu.com/2005/07/19/stories/2005071900840200.htm. பார்த்த நாள்: 30 December 2013. 
  8. "Fire at Sree Chitra Art Gallery; Closed for renovation". Trivandrum.co.in.
  9. "രവിവര്‍മ്മ ചിത്രങ്ങളുടെ അമൂല്യ കലവറയില്‍ തീപിടിത്തം". http://www.manoramaonline.com/cgi-bin/mmonline.dll/portal/ep/manoramahome/content/printArticle.jsp?tabId=16&contentOID=7668675&language=english&BV_ID=@@@. 
  10. "Directive to ASI over Ravi Varma paintings". http://www.hindu.com/2011/01/29/stories/2011012966521900.htm. 

வெளி இணைப்புகள்தொகு