சிறீ ஜெயவர்தனபுர கோட்டை

(ஸ்ரீ ஜயவர்தனபுர இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே (Sri Jayawardenapura Kotte, ශ්‍රී ජයවර්ධනපුර කෝට්ටේ) அல்லது கோட்டே இலங்கையின் நிருவாகத் தலைநகராகும். வணிகத் தலைநகரான கொழும்பு மாநகரின் கிழக்கே 6° 54' வடக்கு, 79° 54' கிழக்குமாக இது அமைந்துள்ளது. இலங்கையின் பாராளுமன்றம் புதிய கட்டிடதொகுதி ஏப்ரல் 29 1982 யில் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதிலிருந்து இங்கேயே இயங்குகின்றது.[1][2][3]

ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
அரசு
 • நகரத் தந்தைசுவர்ணலதா சில்வா (இலங்கை சுதந்திரக் கட்சி)
பரப்பளவு
 • நகரம்17 km2 (7 sq mi)
மக்கள்தொகை
 (2001)[1]
 • நகரம்1,15,826
 • அடர்த்தி3,305/km2 (8,560/sq mi)
 • பெருநகர்
22,34,289
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone)
 • கோடை (பசேநே)ஒசநே+6

அமைவிடம்

தொகு

கோட்டேயானது 17.04 ச.கி.மீ. விஸ்தீரணமான ஒரு தாழ்ந்த சதுப்பு நிலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது பல பட்டணங்களை உள்ளடக்கிய போதும், அவையனைத்தும் ஒரு மாநகராக ஸ்ரீ ஜயவர்த்தனபுர மாநகரசபையினால் நிர்வாகிக்க படுகிறது. இதன் மேற்கே கொழும்பு மாநகரும், வடக்கே ஹீன் ஓயாவும், கிழக்கே மஹரகமை நகரசபையும், தெற்கே தெஹிவளை-கல்கிசை மாநகர சபையும் உள்ளன.

சனத்தொகை

தொகு

இலங்கையின் அனைத்தின மக்களும் ஸ்ரீ ஜயவர்த்தனபுரத்தில் வாழ்கின்றனர். 2001 ஆம் ஆண்டில் கடைசியாக மேற்கொள்ளபட்ட தொகைமதிப்பின் படி நகரின் சனத்தொகை 110,000 ஆகும். இதில் 101,331 சிங்களவர், 7,369 தமிழர், 4,031 சோனகர், 1,367 பறங்கியர், மற்றும் 1,109 இதர இனத்தவராக கணக்கிடபட்டுள்ளது.

வரலாறு

தொகு

கோட்டை இராசதானியின் தலைநகராக 13ம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டு வரை கோட்டே விளங்கியது. இது தியவன்னா நதிக்கரையில் உள்ள சதுப்பு நிலத்தில் அழககோன் என்னும் தமிழ் சிற்றரசனால் ஆரியசக்கரவர்திகளின் படையெடுப்புக்கு எதிரான பெரும் அரணாக அமைக்கபட்டது. பின்னர் இது ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் (அதாவது மகா வெற்றி நகரம்) என பெயர் மாற்றபெற்றுக் கோட்டை இராசதானியின் தலைநகரானது.

1505 ஆண்டு இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசர் 1565 தில் இந்நகரின் பூரண கட்டுப்பாட்டைப் பெற்றனர். சீதாவாக்கை இராசதானியிலிருந்து (அவிசாவளை) தொடர்ச்சியாக இடம்பெற்ற கடும் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகவே, போர்த்துக்கீசர் கோட்டே நகரத்தைக் இடித்து தரைமட்டமாக்கிவிட்டு கொழும்பு நகரை தங்கள் தலைநகர் ஆக்கினர்.

புதிய நகராக்கம்

தொகு

கோட்டேயின் நகராக்கம் (urbanization) 20 ஆம் நூற்றாண்டில் மீண்டும் தொடங்கியது. 1977ல் இலங்கை அரசு கோட்டேயைப் புதிய நிர்வாகத் தலைநகராக அறிவித்த பின்னர், நகரைச் சூழ இருந்த சதுப்பு நிலம் தோண்டப்பட்டுப் பெரிய ஏரியொன்று அமைக்கப்பட்டது. இந்த ஏரிக்கு நடுவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு ஒன்றில் புதிய பாராளுமன்றக் கட்டிடம் அமைக்கப்பட்டது. அரச நிறுவனங்களைக் கொழும்பிலிருந்து இடம் மாற்றும் வேலை தொடர்ந்தும் நடந்து வருகிறது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "World Gazetteer: Kotte – profile of geographical entity including name variants". Archived from the original on 1 October 2007. பார்க்கப்பட்ட நாள் 2021-11-23.
  2. "News 1st: Madura Vithanage elected as the Mayor of Sri Jayewardenapura Kotte M C". YouTube.
  3. "The Administrative Capital of Sri Lanka since 1982 is Sri Jayewardenepura Kotte". Official Sri Lanka government website. Archived from the original on 2014-12-20. பார்க்கப்பட்ட நாள் 2015-01-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_ஜெயவர்தனபுர_கோட்டை&oldid=4098907" இலிருந்து மீள்விக்கப்பட்டது