ஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம்
ஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம் என்பது தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இதன் பரப்பளவு 1030.85 km² ஆகும். இது தனித்துவமான, அருகிய வன வகைகளைக் கொண்டுள்ள பகுதியாகும்.[2][3]
ஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
அமைவிடம் | ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அருகாமை நகரம் | நெல்லூர், இந்தியா |
ஆள்கூறுகள் | 14°0.55′N 79°27.83′E / 14.00917°N 79.46383°E[1] |
பரப்பளவு | 1,030.85 சதுர கிலோமீட்டர்கள் (254,730 ஏக்கர்கள்) |
வலைத்தளம் | Official website |
நிலவியல்
தொகுஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 1030.85 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. ஆந்திர மாநில வனத்துறையால் பாதுகாக்கப்படும் பகுதியாகும்.[2] இது தனித்துவமான மற்றும் அருகிய வன வகைகளைக் கொண்டுள்ளது. வறண்ட பசுமையான காடுகள் இங்குள்ளன. இந்த வனவிலங்கு சரணாலயம் மலைப்பாங்கான சரிவுகள், படரும் காடுகள் நிறைந்த மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளால் ஆனது.
தாவரங்கள்
தொகுபசுமைமாறா காடு காணப்படும் இச்சரணாலயத்தில் அகேசியா, கேசியாசு, புங்கை, கரிஸ்ஸா மரங்கள் காணப்படுகின்றன.[சான்று தேவை]
விலங்குகள்
தொகுபெரும் பூனை, புள்ளிமான், நீலான், நாற்கொம்பு மான், தேன் கரடி, குள்ள நரி, காட்டுப்பன்றி, ஏராளமான ஊர்வன மற்றும் பறவை இனங்கள் இந்த வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படுகின்றன.[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Penusila Narasimha Wildlife Sanctuary". BirdLife International. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Sri Penusila Narashimawamy Wildlife Sanctuary". Andhra Pradesh Forest Department. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sri Penusila Narasimha Wildlife Sanctuary". Globalspecies.org. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)