அனுக்கா

(ஹனுக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹனூக்கா (சனூக்கா, எபிரேயம்: חֲנֻכָּה; Hanukkah) அல்லது தீபத் திருநாள் அல்லது ஒளி விழா (Festival of Lights) யூதர்களின் திருநாள் கொண்டாட்டங்களில் ஒன்று. எட்டு நாட்கள் நடைபெறும் இத்திருநாள், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எருசலேமில் நடந்த மக்கேபியப் புரட்சியின் போது, யூதர்களின் புனிதக் கோவில் (இரண்டாம் கோவில்) மீண்டும் வழிபாட்டுக்கென அர்சிக்கப்பட்டதை நினைவு கூற கொண்டாடப்படுகிறது. எட்டு இரவுகளும் எட்டு பகல்களும் கொண்டாடப்படும் இத்திருநாள் எபிரேய நாட்காட்டியின் கிசுலேவ் மாதத்தின் 25 ஆம் நாள் துவங்குகிறது. கிரெகொரியின் நாட்காட்டியில் இது நவம்பர் அல்லது திசம்பர் மாதங்களில் வரும்.

ஹனூக்கா
ஹனூக்காவில் பாவிக்கப்படும் எட்டு கிளைகளையுடைய மெனோரா
அதிகாரப்பூர்வ பெயர்எபிரேயம்: חֲנֻכָּה / חנוכה
பொருள்: (எருசலேம் கோவிலின்) "அர்ப்பணிப்பு"
கடைப்பிடிப்போர்யூதர்
வகையூதர்
முக்கியத்துவம்மக்கபேயர் உரோம் பேரரசருக்கெதிராக வெற்றிகரமாக புரட்சி செய்தல். தல்மூத் குறிப்பின்படி, மெனோரா ஒரு நாளுக்குரிய எண்ணெயுடன் அதிசயமான எட்டு நாட்களும் எரிந்து கொண்டிருந்தது.
கொண்டாட்டங்கள்ஒவ்வொரு நாளும் மெழுகுவர்த்திகள் ஏற்றல். சிறப்புப் பாடல்களைப் பாடுதல். மன்றாடல். எண்ணெயில் பொரித்த உணவுகளையும் பாற்பொருள் உணவுகளையும் உண்ணுதல். ஹனூக்கா விளையாட்டை விளையாடுதல். ஹனூக்கா பரிசுகள் வழங்குதல்.
தொடக்கம்25 கிசுலேவ்
முடிவு2 தெவெட் / 3 தெவெட்
நாள்25 Kislev, 26 Kislev, 27 Kislev, 28 Kislev, 29 Kislev, 30 Kislev, 1 Tevet, 2 Tevet, 3 Tevet
தொடர்புடையனபூரிம், யூத குருக்களின் தீர்ப்பின்படி

இத்திருநாள் கொண்டாட்டத்தில் எட்டு கிளைகளை உடைய மெனோரா அல்லது அனுக்கா எனப்படும் மெழுகுவர்த்தித் தாங்கியில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு மெழுகுவர்த்தி கூடுதலாக ஏற்றப்பட்டு எட்டாவது நாள் எட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகின்றன. அனைத்து நாட்களின் முடிவில் நடுவில் உள்ள ஷமாஷ் எனப்படும் ஒன்பதாவது சிறப்பு மெழுகுவர்த்தி கூடுதலாக ஏற்றப்படும்.

1970 கள் முதல், உலக பக்தி யூதம் இயக்கம் பல நாடுகளில் பொது இடங்களில் மெனோரா விளக்கேற்றுவதை ஊக்கப்படுத்தியது.[1]

உசாத்துணை

தொகு
  1. "JTA NEWS".

மேலதிக வாசிப்பு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஹனூக்கா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுக்கா&oldid=4179533" இலிருந்து மீள்விக்கப்பட்டது