ஹன்வெல்லைக் கோட்டை
ஹன்வெல்லைக் கோட்டை (Hanwella fort) ஹன்வெல்லை, கொழும்பின் ஹன்வெல்லை என்ற இடத்தில், களனி கங்கை கரையில் அமைந்துள்ளது. இக்கோட்டையிலிருந்து மல்வானைக் கோட்டை 15 km (9.3 mi) தொலைவில் களனி கங்கையின் மறுபக்கத்தில் அமைந்துள்ளது.
ஹன்வெல்லைக் கோட்டை | |
---|---|
ஹன்வெல்லை, இலங்கை | |
ஆள்கூறுகள் | 6°54′35″N 80°04′57″E / 6.909695°N 80.082496°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
நிலைமை | இடுபாடுகள் |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1597 |
கட்டியவர் | போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் |
சண்டைகள்/போர்கள் | ஹன்வெல்லைச் சண்டை (1803) |
சீதவாக்கையின் மாயாதுன்னையினால் இது ஆரம்பத்தில் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. போர்த்துக்கேயர் கோட்டையைப் பிடித்து, தங்கள் பாணிக்கு ஏற்ப 1597 இல் கட்டினார்கள்.[1] இது ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டு, விண்மீன் வடிவக் கோட்டையாகக் கட்டப்பட்டு, 1684 இல் கட்டிட வேலைகள் நிறைவுற்றன. 1761 இல் கீர்த்தி சிறீ இராஜசிங்கனால் இது கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த படையினர் கொலை செய்யப்பட்டனர்.[2] ஒல்லாந்தர் இதனை அடுத்த வருடத்தில் மீளவும் கைப்பற்றினர்.
உசாத்துணை
தொகு- ↑ "Hanwella Fort". AmazingLanka.com. பார்க்கப்பட்ட நாள் 22 November 2014.
- ↑ De Silva, Rajpal Kumar; Beumer, Willemina G. M. (1988). Illustrations and Views of Dutch Ceylon 1602-1796. Serendib Publications. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-08979-9.