ஹர்பால் திவானா

ஹர்பால் சிங் திவானா (Harpal Singh Tiwana) (8 ஆகத்து 1935 - 19 மே 2002) இவர் ஒரு இந்திய நாடக ஆசிரியரும், திரைப்பட மற்றும் நாடக இயக்குனரும் ஆவார். இவர் பஞ்சாபி மொழி நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் பெயர் பெற்றவர். [1]

தொழில்

தொகு

லாங் டா லிஷ்கரா மற்றும் திவா பேல் சாரி ராத் ஆகிய திரைப்பட தயாரிப்பில் இவர் மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் பஞ்சாபித் திரைப்படத்துறையின் அடையாளங்களாக அமைந்தன. இவர் இரண்டு தொலைக்காட்சி தயாரிப்புகளையும் இயக்கியுள்ளார் - சஞ்சி தீவர், மகாராஜா ரஞ்சித் சிங் குறித்த முடிக்கப்படாத திட்டம் ஆகியவை.

இவரது பிரபலமான நாடகங்களில் சிர்ஹிந்த் தி தீவார் என்பதும் அடங்கும். [2] உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இவர் தனது மனைவியுடன் பாட்டியாலாவில் பஞ்சாப் கலா மஞ்ச் என்பதை நிறுவினார். [3] இவரும் இவரது மனைவி நீனா ஆகிய இருவரும் தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றவர்கள். [4] இவரது மனைவி, இவரது மகன் மன்பால் திவானா ஆகியோரும் பஞ்சாபில் நாடகங்களை விளம்பரப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவருக்கு லூனா திவானா என்ற மகளும் உள்ளார்.

இறப்பு

தொகு

மே 19, 2002 அன்று இமாச்சல பிரதேசத்தின் பாலம்பூர் அருகே சாலை விபத்தில் இறந்தார். பாட்டியாலாவில் உள்ள பதுங்கர் தகன மைதானத்தில் தகனம் செய்யப்பட்டார். [5] இவரது மரணத்திற்குப் பிறகு அவரது நினைவாக ஹர்பால் திவானா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. [6]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்பால்_திவானா&oldid=3685169" இலிருந்து மீள்விக்கப்பட்டது