ஹைபா சண்டை (1918)

ஹைபா சண்டை (Battle of Haifa), முதலாம் உலகப் போரின் மத்திய கிழக்கு போர்க்களத்தின் ஒரு பகுதியாக, செருமானியப் பேரரசு, உதுமானியப் பேரரசுகள் தலைமையிலான படைகளுக்கும் மற்றும் பிரித்தானியப் பேரரசு தலைமையிலான இந்தியாவின் சுதேச சமஸ்தானப் படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் கைஃபா நகரத்தை கைப்பற்றுவதற்கு 23 செப்டம்பர் 1918 அன்று நடைபெற்ற சண்டையாகும்.

ஹைபா சண்டை
மத்தியக் கிழக்கு போர்க்களம் (முதலாம் உலகப் போர்) பகுதி

ஜோத்பூர் இராச்சிய குதிரைப்படை வீரர்கள் கைஃபா துறைமுகத்தை கைப்பற்றும் காட்சி
நாள் 23 செப்டம்பர் 1918
இடம் கைஃபா, பாலத்தீனம்
பிரித்தானியர்களுக்கு வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
ஹைபா துறைமுகம் பிரித்தானியப் பேரரசின் கீழ் சென்றது.
பிரிவினர்
 பிரித்தானியா
 உதுமானியப் பேரரசு
 செருமானியப் பேரரசு
 ஆத்திரியா-அங்கேரி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் சிறீல் ரோட்னீ ஹார்போர்டு
தல்பத் சிங் செகாவாத்
அறியப்படவில்லை
படைப் பிரிவுகள்
குதிரைப்படை அணி ஹைபா பாதுகாப்பு படைகள்
இழப்புகள்
8 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்
34 இந்தியர்கள் காயமடைந்தனர்[1]
கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களைப் பற்றி தெரியவில்லை
போர்க் கைதிகள்
2 ஜெர்மானிய இராணுவ அதிகாரிகள்
23 உதுமானியப் பேரரசின் இராணுவ அதிகாரிகள்
பிற இராணுவ வீரர்கள் 664 [1]
மொத்தம்: 1,350 போர்க் கைதிகள்

முதலாம் உலகப் போரின் போது உதுமானியப் பேரரசின் கீழிருந்த கைஃபா துறைமுக நகரத்தை கைப்பற்றுவதற்கு, பிரித்தானியப் பேரரசின் படைகளுக்கு உதவியாக இந்தியாவின் சுதேச சமஸ்தானங்களான ஜோத்பூர் சமஸ்தானம் மற்றும் மைசூர் சமஸ்தானத்தின் குதிரைப்படை வீரர்கள் இப்போரில் கலந்து கொண்டனர்.

இச்சண்டையில் பிரித்தானியர்கள் வென்றனர். ஹைபா துறைமுக நகரம் கைப்பற்றப்பட்டது. ஜெர்மனி மற்றும் உதுமானிய போர் வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இச்சண்டையின் வெற்றிக்கு காரணமானவரும், போரில் இறந்தவருமான, ஜோத்பூர் இராணுவ அதிகாரி தல்பத் சிங் செகாவத்திற்கு மிலிட்டேரி கிராஸ் பதக்கம் வழங்கப்பட்டது.[2]

இதனையும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹைபா_சண்டை_(1918)&oldid=4170741" இலிருந்து மீள்விக்கப்பட்டது