ஹோலியா மொழி


ஹோலியா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், கர்நாடகம், மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி, 2002 இன் கணக்கெடுப்பின்படி ஏறத்தாள 500 மக்களால் பேசப்படுகிறது. இது ஹோலார், ஹோலாரி, ஹோலே, ஹோலியான், ஹோலு, கோலாரி-கன்னடா, கோஹ்ல்லாரு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இம்மொழியை முதல் மொழியாகப் பேசுபவர்கள் மத்தியில் இதன் கல்வியறிவு 1% மட்டுமேயாகும். இவர்களுடைய இரண்டாம் மொழியான கன்னட மொழி தொடர்பில் அவர்களுடைய கல்வியறிவு 5% ஆகும்.[1] மத்தியப் பிரதேசத்தில் இம்மொழியினர் முதல் மொழியாக ஹிந்தியே பேசிவருகின்றனர்.

ஹோலியா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கர்நாடகம், மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
500  (2002 ஆய்வு)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3hoy

1901 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மகாராட்டிரத்தில் நாக்பூர், பந்தாரா ஆகிய மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் சிவனி, பாலாகாட் ஆகிய மாவட்டங்களிலும் 3,614 பேர் இம்மொழியைப் பேசினர்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Ethnologue - Holiya
  2. Grierson, G. A. "The Linguistic Survey of India". DSAL - The Record News. Government of India.
  3. Harshitha, Samyuktha (9 September 2013). "Kannada dialects spoken outside Karnataka". SamharshBangalore.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோலியா_மொழி&oldid=3204293" இலிருந்து மீள்விக்கப்பட்டது