(வளையபெண்டாடையீனைல்)தைட்டானியம் முக்குளோரைடு

வேதியியல் சேர்மம்

(வளையபெண்டாடையீனைல்)தைட்டானியம் முக்குளோரைடு (Cyclopentadienyl)titanium trichloride) என்பது (C5H5)TiCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமதைட்டானியம் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் ஓர் ஈரம் உணரியாகும். பியானோ இருக்கை வடிவியல் கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்கிறது. [1] (சைக்ளோபெண்டாட்டையீனைல்) தைட்டானியம் டிரைகுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

(வளையபெண்டாடையீனைல்)தைட்டானியம் முக்குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தைட்டனோசின் டிரைகுளோரைடு
இனங்காட்டிகள்
1270-98-0
ChemSpider 11601864
InChI
  • InChI=1S/C5H5.3ClH.Ti/c1-2-4-5-3-1;;;;/h1-5H;3*1H;/q;;;;+3/p-3
    Key: AENCLWKVWIIOQH-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11127785
  • C1=C[CH]C=C1.Cl[Ti](Cl)Cl
பண்புகள்
C5H5Cl3Ti
வாய்ப்பாட்டு எடை 219.31 g·mol−1
தோற்றம் ஆரஞ்சுநிற திண்மம்
அடர்த்தி 1.768 கி/செ.மீ3
உருகுநிலை 210 °C (410 °F; 483 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பும் வினைகளும்

தொகு

தைட்டனோசின் டைகுளோரைடையும் தைட்டானியம் டெட்ராகுளோரைடையும் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் (வளையபெண்டாடையீனைல்)தைட்டானியம் முக்குளோரைடு தயாரிக்கப்படுகிறது.

(C5H5)2TiCl2 + TiCl4 → 2 (C5H5)TiCl3

மின்னணுகவரியான இந்த ஒருங்கிணைவுச் சேர்மம் ஆல்ககால்களுடன் சேர்த்து சூடுபடுத்தும்போது விரைவாக ஆல்காக்சைடுகளைக் கொடுக்கிறது.[2]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rossini, A. J.; Mills, R. W.; Briscoe, G. A.; Norton, E. L. et al. (2009). "Solid-State Chlorine NMR of Group IV Transition Metal Organometallic Complexes". Journal of the American Chemical Society 131 (9): 3317–3330. doi:10.1021/ja808390a. பப்மெட்:19256569. 
  2. Andreas Hafner; Rudolf O. Duthaler (2001). "Trichloro(cyclopentadienyl)titanium". EEROS. doi:10.1002/047084289X.rt202m. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471936235.