(வளையபெண்டாடையீனைல்)சிருக்கோனியம் முக்குளோரைடு
(வளையபெண்டாடையீனைல்)சிருக்கோனியம் முக்குளோரைடு (Cyclopentadienyl)zirconium trichloride) என்பது (C5H5)ZrCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் ஓர் ஈரம் உணரியாகும். பலபடிசார் கட்டமைப்பை இச்சேர்மம் ஏற்கிறது. [1] நிறமாலையியல் ஆய்வுகளால் (வளையபெண்டாடையீனைல்)சிருக்கோனியம் முக்குளோரைடு நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. (சைக்ளோபெண்டாட்டையீனைல்) சிருக்கோனியம் டிரைகுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. [2]
இனங்காட்டிகள் | |
---|---|
34767-44-7 | |
ChemSpider | 24589200 |
பப்கெம் | 56846602 |
பண்புகள் | |
C5H5Cl3Zr | |
வாய்ப்பாட்டு எடை | 262.67 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 2.31 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பும் வினைகளும்
தொகுசிருக்கோனியம் டைகுளோரைடை குளோரினேற்றம் செய்வதன் மூலம் (வளையபெண்டாடையீனைல்)சிருக்கோனியம் முக்குளோரைடு தயாரிக்கப்படுகிறது. பலபடிசார் கட்டமைப்பில் இருப்பதால் பென்சீன், கார்பன் டெட்ராகுளோரைடு, டை எத்தில் ஈதர் போன்ற முனைவற்ற கரைப்பான்களில் இது கரையாது. [3] கார ஈந்தணைவிகள் முன்னிலையில் இது கரைந்து கூட்டுவிளைபொருளைக் கொடுக்கிறது.
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Engelhardt, L. M.; Papasergio, R. I.; Raston, C. L.; White, A. H. (1984). "Crystal Structures of Trichloro(η5-cyclopentadienyl)titanium(IV) and -zirconium(IV)". Organometallics 3: 18–20. doi:10.1021/om00079a005.
- ↑ Rossini, A. J.; Mills, R. W.; Briscoe, G. A.; Norton, E. L. et al. (2009). "Solid-State Chlorine NMR of Group IV Transition Metal Organometallic Complexes". Journal of the American Chemical Society 131 (9): 3317–3330. doi:10.1021/ja808390a. பப்மெட்:19256569.
- ↑ Gerhard Erker (1990). "Mono(η-cyclopentadienyl)zirconium Complexes: from Coordination Chemistry to Enantioselective Catalysis". Journal of Organometallic Chemistry 400 (1–2): 185–203. doi:10.1016/0022-328X(90)83012-9.