13 - 18 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்
13 - 18 ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம் என்பது யாழ்ப்பாண இராச்சியக் காலம் (1216 - 1621), போர்த்துக்கேயர் காலம் (1621 - 1658), ஒல்லாந்தர் காலம் (1658 - 1796) ஆகிய மூன்று காலப்பகுதிகளைச் சார்ந்த சார்ந்த ஈழத்து தமிழ் இலக்கியம் ஆகும். இதற்கு முந்திய காலத்துடன் ஒப்பிடுகையில், இக் காலப்பிரிவைச் சார்ந்த இலக்கியங்கள் கிடைக்கப்பெற்று, பல பதிப்புப்பெற்று, ஆய்வுசெய்யப்பட்டுள்ளன.[1]
இக் காலப் பகுதியில் வாய்மொழி இலக்கியம், எழுத்து இலக்கியம் ஆகிய இரண்டும் இக் காலப்பகுதியில் தோன்றின.[2] இக் காலப்பகுதியில் தோன்றிய பல நூல்கள் தமிழின் சிற்றிலக்கிய வகைகளைச் சார்ந்தவையாக உள்ளன, குறிப்பாக: பள்ளு, சிந்து, கும்மி, அந்தாதி, அம்மானை, துதி, கோவை.
கால வகைப்பாடு
தொகு- யாழ்ப்பாண/வன்னி இராச்சியக் காலம் (1216 - 1621)
- போர்த்துக்கேயர் காலம் (1621 - 1658)
- ஒல்லாந்தர் காலம் (1658 - 1796)
இலக்கிய வகைப்பாடு
தொகு- நாட்டுப்புற இலக்கியம்/வாய்மொழி இலக்கியம்
- தொழில்சார் பாடல்கள்
- சமயச் சார்பான பாடல்கள்
- வரலாற்றுக் கதைப் பாடல்கள்
- மருத்துவ நூல்கள்
- சோதிட நூல்கள் / வானவியல் நூல்கள்
- சைவ சமய நூல்கள்
- கிறித்தவ சமய நூல்கள்
- வரலாற்றியல் நூல்கள்
- உரைநூல்கள்
- இலக்கண நூல்கள்
நூற் பட்டியல்
தொகு1216 - 1658
தொகு- சரசோதி மாலை
- செகராசசேகரமாலை
- செகராசசேகரம்
- பரராசசேகரம்
- தக்கிண கைலாச புராணம்
- கண்ணகி வழக்குரை/ கோவலனார் கதை/ சிலம்பு கூறல்
- இரகுவம்மிசம்
- வையாபாடல்
- வியாக்கிரபாத புராணம்
- திருக்கரசைப் புராணம்
- கதிரைமலைப் பள்ளு
- ஞானப்பள்ளு
- அர்ச். யாகப்பர் அம்மானை
- பரராசசேகரன் உலா
1659 - 1796
தொகு- சிவஞான சித்தியார் உரை (ஈழத்து ஞானப்பிரகாசர்)
- கரவைவேலன் கோவை
- பறாளாய் விநாயகர் பள்ளு
- கல்வளையந்தாதி
- அர்ச்யாகப்பர் அம்மானை
- திருச்செல்வர் காவியம் ?!
- ஞானப்பள்ளு
- பழமொழிப் பிரபந்தம் (இராமலிங்க முனிவர்) – 1687-88
- சந்தான தீபிகை (மொழிபெயர்ப்பு) (இராமலிங்க முனிவர்) – 1713
- சிவஞான சித்தியார் உரை (திருநெல்வேலி ஞானப்பிரகாசர்)
- யாழ்ப்பாண வைபவ மாலை (மாதகல் மயில்வாகனப் புலவர்)
- யோசேப்பு புராணம் (கூழங்கைத் தம்பிரான்)
- நொண்டி நாடகம் (இணுவில் சின்னத்தம்பிப் புலவர்)
- அநிருத்த நாடகம் (இணுவில் சின்னத்தம்பிப் புலவர்)
- கோவலன் நாடகம் (இணுவில் சின்னத்தம்பிப் புலவர்)
- சத்தியத்தின் ஜெயம் (டி மெல்லோ)
- உவமைப் பாட்டுக்கள் (டி மெல்லோ)
- வாளபிமன் நாடகம்
- சிவராத்திரி புராணம்
- ஏகாதசிப் புராணம்
- கிள்ளைவிடுதூது
- பிள்ளையார் கதை
- அமுதாகரம்
- திருச்செல்வர் காவியம்
- வெருகல் சித்திரவேலாயுதர் காதல்
- சந்தான தீபிகை
- கல்வளையந்தாதி
- மறைசையந்தாதி
- கரவை வேலன் கோவை
- பறாளை விநாயகர் பள்ளு
- வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல்
- பஞ்சவன்னத் தூது
- சிவாகாமியம்மை துதி
- தண்டிகைக் கனகராயன் பள்ளு
- புலியூரந்தாதி
- ஞானானந்தபுராணம்
- அமுதாகரம்
- தன்வந்திரியம்
- இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம்
- அங்காதிபாதம்
- வைத்திய சிந்தாமணி
- சர்ப்பசாஸ்திரம்
- ஞானப்பிரகாச தேசிகர், Gnanapirakasa Thesikar 17ம் நூற்றாண்டு
- வைத்தியநாத தம்பிரான், Vaithiyanatha Thampiran 17ம்நூற்றாண்டு
- மெல்லோ பாதிரியாரால் செய்யப்பட்ட உவமைப் பாட்டுகள் - பிலிப்பு தெ மெல்லோ
- விவிலியம் மொழிபெயர்ப்பு - பிலிப்பு தெ மெல்லோ
- சிவஞான சித்தியார் உரை - திருநெல்வேலி ஞானப்பிரகாசர்
- சிவஞானசித்தியார் சுபக்க உரை - திருநெல்வேலி ஞானப்பிரகாசர்
- சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை - கூழங்கைத் தம்பிரான்
- நல்லைக் கலிவெண்பா - கூழங்கைத் தம்பிரான்
- தேவப்பிரசை திருக்கதை யோசேப்புப் புராணம் - கூழங்கைத் தம்பிரான்
- கூழங்கையர் வண்ணம் - கூழங்கைத் தம்பிரான்
- நன்னூற்காண்டிகையுரை
மேற்கோள்கள்
தொகு- ↑ மனோன்மணி சண்முகதாஸ் (2012). இலங்கைத் தமிழியியல் - சில பதிவுகள். குமரன் புத்தக இல்லம்.
- ↑ கலாநிதி நா. சுப்பிரமணியன் (2014). "வன்னி வரலாறும் பண்பாடும் - வன்னிப் பிரதேசத் தமிழ் இலக்கியம்". திரு. கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம்; geotamil.com. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]