1947-1948 ரஜௌரி படுகொலைகள்
1947-1948 ராஜௌரி படுகொலைகள் (1947–1948 Rajouri massacre) ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜௌரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்து மற்றும் சீக்கியர்கள் மற்றும் அகதிகளை இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 இன் போது ஆசாத் காஷ்மீர் படைகள் மற்றும் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் உள்ள பழங்குடி போராளிகளால் கொல்லப்பட்டனர். [1] [2] ரஜௌரி நகரத்தின் 'முற்றுகை' 7 நவம்பர் 1947 இல் தொடங்கி, 12 ஏப்பிரல் 1948 அன்று இந்திய இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது முடிந்தது. இந்த படுகொலை ஆண்டுதோறும் ரஜௌரி மற்றும் ஒன்றியப் பகுதி (இந்தியா) ஜம்மு -காஷ்மீரில் நினைவுகூரப்படுகிறது. [2] [3]
பின்னணி
தொகு1947 இல் இந்தியப் பிரிவினையின்போது, சுதேச அரசுகளுக்கு இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவது அல்லது சுதந்திரமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் சுதந்திரமாக இருக்க விரும்பினார். 19 சூலை 1947 பாகிஸ்தானுடன் இணைவதற்கு ஆதரவாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் மாநாட்டைத் தவிர, மாநிலத்தின் அனைத்து முக்கிய அரசியல் குழுக்களும் மகாராஜாவின் முடிவை ஆதரித்தன. [4] மாநிலத்தின் ஜம்மு மாகாணத்தில் முஸ்லிம் மாநாடு பிரபலமாக இருந்தது. இது அகில இந்திய முஸ்லீம் லீக் உடன் நெருக்கமாக இருந்தது, இந்த அமைப்பு பாகிஸ்தானை மரபுரிமையாகக் கொண்டது.
செப்டம்பர் மற்றும் நவம்பர் 1947 க்கு இடையில், ரஜௌரி மற்றும் பூஞ்ச் மேற்குப் பகுதிகளில் இருந்து ஏராளமான இந்து மற்றும் சீக்கிய அகதிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றனர். ரஜௌரியின் மக்கள் தொகை 5,000 முதல் 40,000 வரை அதிகரித்தது. பூஞ்ச் மக்கள் தொகை 10,000 முதல் கிட்டத்தட்ட 50,000 மக்களாக அதிகரித்துள்ளது. [5]
மியான் இப்திகருதீனின் ஆதரவுடன், முஸ்லிம் மாநாட்டுத் தலைவர் சர்தார் இப்ராகிம் 1947 பூஞ்ச் கிளர்ச்சிக்காக பாகிஸ்தான் கர்னல் அக்பர் கானை சந்தித்தார். சர்தார் இப்ராகிம் கிளர்ச்சியாளர்களுக்காக ஆயுதங்களைக் கேட்டுப் பெற்றார். [6] பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ள முர்ரேயில் ஒரு தளத்தை நிறுவுவதற்காகவும், ஜம்மு -காஷ்மீருக்கு கடத்தப்படவிருந்த NWFP இல் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கவும் வாங்க முயன்றனர். [7] [8]
இதற்கிடையில் மகாராஜா, செப்டம்பர் 2/3 அன்று கதூவாவில் இருந்து 400 ஆயுதம் ஏந்திய முஸ்லீம்கள் நுழைந்ததாக கூறினார்.இந்தத் தகவல்கள் மேற்கு பஞ்சாப் முதல்வர் மற்றும் ராவல்பிண்டி துணை ஆணையருக்குத் தெரிவிக்கப்பட்டு ஊடுருவலை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டது. செப்டம்பர் 6, 13 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானின் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டன. செப்டம்பர் 17 அன்று, ஆயுததாரிகள் மாநிலப் படைகளைச் சுட்டு பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றனர். [9] [7] [10]
செப்டம்பர் 12, 1947 அன்று, அப்போதைய பிரதமரும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சருமான லியாகத் அலிகான், படைத் தளபதி அக்பர் கான் மற்றும் சர்தார் சௌகத் அயாத் கான் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட காஷ்மீர் மீது படையெடுப்பதற்கான இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். பஷ்தூன் பழங்குடியினர் ஆயுதத் தாக்குதலுக்கு அணிதிரட்டப்பட்டனர். [11] [12]
ஜம்மு-காஷ்மீர் மாநிலப் படைகளால் ஜம்மு வழியாக முறையே கிழக்கு பஞ்சாப் மற்றும் மேற்கு பஞ்சாபில் இருந்து சுமார் 100,000 முஸ்லீம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். [13]
அக்டோபர் 6, 1947 பூஞ்ச் கிளர்ச்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. [14][15] இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் படைகள் ஜம்மு மற்றும் கதூவாவின் எல்லை மாவட்டங்களில் மீண்டும் தாக்குதல் நடத்தின. [16] [17] 14 அக்டோபர், 1947 ஜம்மு படுகொலை தொடங்கியது. ஜம்மு -காஷ்மீரில் அக்டோபர் 22, 1947 அன்று பல்வேறு இடங்களிலிருந்து பழங்குடியினர் படையெடுப்புடன் போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. கொள்ளை மற்றும் கொலை பரவலாக நடந்தது. [18] [19]
சான்றுகள்
தொகு- ↑ (Bhatia, Rethinking Conflict at the Margins 2020, ப. 80–81): "During this time, the town of Rajouri was captured by what was known as 'Azad Kashmir forces' (comprisedof armed rebels from Poonch and a section of Pakistani officials sympathetic to these rebels) as well as the Pathan tribesmen."
- ↑ 2.0 2.1 Tearful homage to martyrs of 1947 massacre in Rajouri, Daily Excelsior, 12 November 2017.
- ↑ Maini, K.D. (12 April 2015). "The day Rajouri was recaptured". dailyexcelsior.com. Daily Excelsior. பார்க்கப்பட்ட நாள் 19 October 2020.
- ↑ Puri, Balraj (November 2010), "The Question of Accession", Epilogue, pp. 4–6,
Eventually they agreed on a modified resolution which 'respectfully and fervently appealed to the Maharaja Bahadur to declare internal autonomy of the State... and accede to the Dominion of Pakistan... However, the General Council did not challenge the maharaja's right to take a decision on accession, and it acknowledged that his rights should be protected even after acceding to Pakistan.
- ↑ Bloeria, Sudhir (15 October 2020). "Militancy in Rajouri and Poonch". satp.org. South Asian Terrorism Portal. பார்க்கப்பட்ட நாள் 15 October 2020.
- ↑ Bhattacharya, What Price Freedom 2013, ப. 25–27.
- ↑ 7.0 7.1 Snedden, Kashmir: The Unwritten History (2013).
- ↑ (Raghavan, War and Peace in Modern India 2010, ப. 105–106);(Nawaz 2008, ப. 119–120)
- ↑ Das Gupta, Jammu and Kashmir 2012.
- ↑ "Operations in Jammu and Kashmir". Indianarmy.nic.in. Indian Army. பார்க்கப்பட்ட நாள் 21 March 2021.
On 4 September, General Scott wired to the State Government at Srinagar, "Reliable reports state that on the 2nd and 3rd September, 1947, a band of up to 400 armed Sattis- Muslim residents mainly in Kahuta Tehsil of Rawalpindi district were infiltrating into the State over the river Jhelum from Pakistan in the area of Owen, eleven miles (18 km) east of kahuta. Their purpose is looting and attacking minority communities in the State". The Prime Minister of the State sent a telegram the same day to the Chief Minister of West Punjab and Deputy Commissioner of Rawalpindi, informing them of these raids and requesting measures to prevent the infiltration of raiders. The Deputy Commissioner of Rawalpindi replied denying the facts.
- ↑ Raghavan, War and Peace in Modern India 2010.
- ↑ Nawaz 2008.
- ↑ Ankit, Henry Scott 2010, ப. 44.
- ↑ ul-Hassan, Syed Minhaj (2015), "Qaiyum Khan and the War of Kashmir, 1947-48 AD." (PDF), FWU Journal of Social Sciences, p. 1–7, archived from the original (PDF) on 9 March 2017, பார்க்கப்பட்ட நாள் 8 March 2017
- ↑ Ganguly, Sumit (September 1995), "Wars without End: The Indo-Pakistani Conflict", The Annals of the American Academy of Political and Social Science, Sage Publications, pp. 167–178, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1177/0002716295541001012, JSTOR 1048283
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Singh 1990.
- ↑ Palit, Jammu and Kashmir Arms 1972.
- ↑ Tom Cooper, I Indo-Pakistani War, 1947–1949 பரணிடப்பட்டது 2 அக்டோபர் 2016 at the வந்தவழி இயந்திரம், Air Combat Information Group, 29 October 2003
- ↑ Ministry of Defence, Government of India.