2,4-டைநைத்ரோபீனால்
வேதிச் சேர்மம்
2,4-டைநைத்ரோபீனால் (2,4-Dinitrophenol, 2,4-DNP, அல்லது சுருக்கமாக DNP) என்பது HOC6H3(NO2)2 என்ற மூலக்கூறு வாய்பாட்டைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது ஒரு செயற்கை வேதிப்பொருள். மைட்டோகாண்ட்ரியங்களில் நடக்கும் செல் சுவாசத்தைத் தடை செய்யப் பயன்படுகிறது. மேலும் இவ்வேதிப்பொருள் ஆக்சிசனேற்றத்தைப் பாசுபரசேற்றத்தில் இருந்து பிரிப்பதால் ஏடிபி (அடினோசைன் டிரை பாசுபேட்டு ATP) உற்பத்தி தடைப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2,4-டைநைத்ரோபீனால்
| |||
வேறு பெயர்கள்
Solfo Black
| |||
இனங்காட்டிகள் | |||
51-28-5 | |||
ChEBI | CHEBI:42017 | ||
ChEMBL | ChEMBL273386 | ||
ChemSpider | 1448 | ||
DrugBank | DB04528 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | C02496 | ||
பப்கெம் | 1493 | ||
| |||
UNII | Q13SKS21MN | ||
UN number | 0076, 1320 | ||
பண்புகள் | |||
C6H4N2O5 | |||
வாய்ப்பாட்டு எடை | 184.106 | ||
அடர்த்தி | 1.683 g/cm³ | ||
உருகுநிலை | 108 °C (226 °F; 381 K) | ||
கொதிநிலை | 113 °C (235 °F; 386 K) | ||
காடித்தன்மை எண் (pKa) | 4.114 | ||
தீங்குகள் | |||
R-சொற்றொடர்கள் | R10 R23 R24 R25 R33 | ||
S-சொற்றொடர்கள் | (S1) (S2) S28 S37 S45 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
2,4-டைநைத்ரோபீனால் மஞ்சள் நிறமுடைய படிகத் திண்மம். இது எத்தில் அசிட்டேட், கார்பன் டெட்ரா குளோரைடு போன்ற கரைப்பான்களில் கரையக் கூடியது.[1] வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தும் போது இது நச்சு வாயுக்களை வெளியிடுகிறது.[2]
2,4-டைநைத்ரோபீனால் இயற்கையில் காணப்படுவதில்லை. தொழிற்துறை மற்றும் ஆராய்ச்சிப் பயன்பாட்டின் பொருட்டுச் செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Budavari, Susan(ed); O'Neil, Maryadele J(ed); Heckelman, Patricia E(red). "The merck index an encyclopedia of chemical, drugs, and biologicals / The merck index an encyclopedia of chemical, drugs, and biologicals." Rahway, NJ; Merck & Co; 1989. [1900] p.
- ↑ Sax N. Irving; Bruce, Robert D (1989). Dangerous properties of industrial materials. Vol. 3 (7th ed.). யோன் வில்லி அன் சன்ஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-442-27368-1.