2-குளோரோ-6-புளோரோபென்சால்டிகைடு
2-குளோரோ-6-புளோரோபென்சால்டிகைடு (2-Chloro-6-fluorobenzaldehyde) என்பது C6H3ClFCHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஆலசனேற்றம் அடைந்த பென்சால்டிகைடு சேர்மமாக இது கருதப்படுகிறது. ஆலசனேற்றம் அடைந்த பல்லினவளையச் சேர்மங்கள் தயாரிக்கையில் இடைநிலை வேதிப்பொருளாக 2-குளோரோ-6-புளோரோபென்சால்டிகைடு உருவாகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-Chloro-6-fluorobenzaldehyde | |
இனங்காட்டிகள் | |
387-45-1 | |
ChemSpider | 61164 |
EC number | 206-860-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 67847 |
| |
UNII | 51YJ9BW8W7 |
பண்புகள் | |
C7H4ClFO | |
வாய்ப்பாட்டு எடை | 158.56 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 32–35 °C (89.6-95 °F; 305–308 K) |
கொதிநிலை | 104–105 °C (219–221 °F; 377–378 K) |
நீரில் கரையாது | |
கரைதிறன் | மெத்தனால், எத்தனால் போன்றவற்றில் கரையும் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
தீப்பற்றும் வெப்பநிலை | 101 °C (214 °F; 374 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு2-குளோரோ-6-புளோரோதொலுயீனை குரோமைல் குளோரைடால் ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் 2-குளோரோ-6-புளோரோபென்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது.[3]
வினை
தொகு2-குளோரோ-6-புளோரோபென்சால்டிகைடு சோடியம் ஐதராக்சைடுடன் வினைபுரிந்து 2-குளோரோ-6-புளோரோபென்சீன் மற்றும் 6-குளோரோசாலிகால்டிகைடு ஆகியவற்றின் கலவையைக் கொடுக்கிறது.[4]
2-குளோரோ-6-புளோரோபென்சால்டிகைடு ஒரு கிருமி நாசினியாக டைகுளோ ஆக்சலீன் மற்றும் புளுகுளோ ஆக்சலீன் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, இது பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Daniewski, Andrzej R.; Liu, Wen; Püntener, Kurt; Scalone, Michelangelo (2002-05-01). "Two Efficient Methods for the Preparation of 2-Chloro-6-methylbenzoic Acid" (in en). Organic Process Research & Development 6 (3): 220–224. doi:10.1021/op0102363. பன்னாட்டுத் தர தொடர் எண்:1083-6160. https://pubs.acs.org/doi/10.1021/op0102363.
- ↑ Naveen, S.; Kavitha, Chandagirikoppal V.; Sarala, G.; Anandalwar, SridharM.; Prasad, J. Shashidhara; Rangappa, Kanchugarakoppal S. (2006). "Crystal Structure of 3-(2-Chloro-6-fluorophenyl)-2-(4-methoxyphenyl)-acrylonitrile" (in en). Analytical Sciences: X-ray Structure Analysis Online 22: X291–X292. doi:10.2116/analscix.22.x291. பன்னாட்டுத் தர தொடர் எண்:1348-2238. http://www.jstage.jst.go.jp/article/analscix/22/0/22_0_x291/_article.
- ↑ Willstaedt, Harry (1931). "Über Brom-Addition an substituierte Zimtsäuren". Berichte der Deutschen Chemischen Gesellschaft (A and B Series) 64 (10): 2688–2693. doi:10.1002/cber.19310641019.
- ↑ Bunnett, J. F.; Miles, J. H.; Nahabedian, K. V. (1961). "Kinetics and Mechanism of the Alkali Cleavage of 2,6-Dihalobenzaldehydes 1" (in en). Journal of the American Chemical Society 83 (11): 2512–2516. doi:10.1021/ja01472a022. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01472a022.