2-புரோமோபியூட்டேன்

வேதிச் சேர்மம்

2-புரோமோபியூட்டேன் (2-Bromobutane) என்பது 1-புரோமோபியூட்டேன் சேர்மத்தின் ஒரு மாற்றியமாகும். இவ்விரண்டு சேர்மங்களும் C4H9Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஈரிணைய பியூட்டைல் புரோமைடு அல்லது மெத்திலெத்தில்புரோமோமெத்தேன் என்ற பெயர்களாலும் 2-புரோமோபியூட்டேன் அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தில் ஆலசனான புரோமின் கலந்திருப்பதால் ஆல்கைல் ஆலைடுகள் என்ற பெருவகைப்பாட்டு சேர்மங்களில் ஒன்றாகவும் 2-புரோமோபியூட்டேன் கருதப்படுகிறது.

2-புரோமோபியூட்டேன்
2-Bromobutane
Skeletal formula of 2-bromobutane
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-புரோமோபியூட்டேன்[1]
வேறு பெயர்கள்
ஈரிணைய பியூட்டல் புரோமைடு
இனங்காட்டிகள்
78-76-2 Y
Beilstein Reference
505949
ChEMBL ChEMBL156276 Y
ChemSpider 6306 Y
552796 R N
EC number 201-140-7
InChI
  • InChI=1S/C4H9Br/c1-3-4(2)5/h4H,3H2,1-2H3 Y
    Key: UPSXAPQYNGXVBF-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த 2-புரோமோபியூட்டேன்
பப்கெம் 6554
637147 R
12236140 S
வே.ந.வி.ப எண் EJ6228000
  • CCC(C)Br
UNII SSI829JO4W Y
UN number 2339
பண்புகள்
C4H9Br
வாய்ப்பாட்டு எடை 137.02 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.255 கி மி.லி−1
உருகுநிலை −112.65 °C; −170.77 °F; 160.50 K
கொதிநிலை 91 °C; 196 °F; 364 K
மட. P 2.672
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.437
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−156 கிலோயூல் மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−2.706–−2.704 மெகாயூல் மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225
P210
தீப்பற்றும் வெப்பநிலை 21 °C (70 °F; 294 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஒரு நிறமற்ற திரவமாக உள்ள 2-புரோமோபியூட்டேன் இனிமையான வாசனையைக் கொண்டுள்ளது. புரோமினுடன் இணைக்கப்பட்ட கார்பன் அணு மற்ற இரண்டு கார்பன்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால் 2-புரோமோபியூட்டேன் மூலக்கூறை இரண்டாம் நிலை ஆல்கைல் ஆலைடு என குறிப்பிடுகிறார்கள்.

ஒப்பீட்டளவில் நிலைப்புத்தன்மை கொண்ட 2-புரோமோபியூட்டேன் நச்சுதண்மை கொண்டதாகவும் தீப்பற்றி எரியக்கூடியதாகவும் உள்ளது. ஒரு வலிமையான காரத்துடன் சேர்த்து சூடுபடுத்தப்பட்டால் 2-புரோமோபியூட்டேன் ஒருபடிநிலை நீக்கல் வினைக்கு உட்படுகிறது. இவ்வினை ஓர் இருமூலக்கூறு நீக்குதல் வினையாகும். இதன் விளைவாக ஓர் ஆல்க்கீன் இரட்டைப் பிணைப்பு கொண்ட 2-பியூட்டீன் உருவாகிறது. 2-புரோமோபியூட்டேன் எரிச்சலூட்டும் வேதிச் சேர்மமாகும். இதை உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும். தோல் மற்றும் கண்களில் பட்டால் எரிச்சலூட்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "2-bromobutane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. பார்க்கப்பட்ட நாள் 17 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-புரோமோபியூட்டேன்&oldid=3228694" இலிருந்து மீள்விக்கப்பட்டது