2007 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

13வது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்


இந்தியக் குடியரசின் பதிமூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 2002 ல் நடைபெற்றது. பிரதீபா பாட்டீல் வெற்றி பெற்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனார். இவர் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2007

← 2002 19 சூலை 2007 2012 →
 
வேட்பாளர் பிரதீபா பாட்டீல் பைரோன் சிங் செகாவத்
கட்சி காங்கிரசு பா.ஜ.க
சொந்த மாநிலம் மகாராஷ்டிரா ராஜஸ்தான்

தேர்வு வாக்குகள்
638,116 331,306
வென்ற மாநிலங்கள் 21+
டில்லி+
புதுவை
7
விழுக்காடு 65.8% 34.2%

மாநிலங்கள் வாரியாக
வெற்றியாளர்கள். பிரதீபா பாட்டீல் நீலம், பைரன் சிங் ஆரஞ்சு.

முந்தைய குடியரசுத் தலைவர்

அப்துல் கலாம்
சுயேச்சை

குடியரசுத் தலைவர் -தெரிவு

பிரதீபா பாட்டீல்
காங்கிரசு

பின்புலம்

தொகு

சூலை 19, 2007ல் பதிமூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 2002-07ல் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் வேட்பாளாரக்க ஆளும் இந்திய தேசிய காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும் விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி துணைக் குடியரசுத் தலைவரான பைரோன் சிங் செகாவத்தை தனது வேட்பாளராக அறிவித்தது. அவருக்கு போட்டியாக காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பிரதீபா பாட்டிலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது. சிபிஐ, சிபிஎம் முதலான இடதுசாரிக் கட்சிகளும் பாட்டிலுக்கு ஆதரவளித்தன. அதிமுக, தெலுங்கு தேசம், சமாஜ்வாதி கட்சி போன்ற மாநில கட்சிகள் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியை அமைத்து அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க முயன்றன. ஆனால் அவர் பிற கட்சிகளின் ஆதரவின்றி போட்டியிட மறுத்துவிட்டார். வாக்கெடுப்பில் பிரதீபா பாட்டில் எளிதில் வென்று குடியரசுத் தலைவரானார்.

முடிவுகள்

தொகு

ஆதாரம்: "India gets first woman president". NDTV.com. 2007-07-21 இம் மூலத்தில் இருந்து 2007-08-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070817142617/http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20070019764. பார்த்த நாள்: 2007-07-21. 

  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம்
பிரதீபா பாட்டில் 312,936 325,180 638,116
பைரோன் சிங் செகாவத் 164,256 167,050 331,306

கட்சி வாரியாக வாக்குகள்

தொகு
கட்சியின் பெயர் வாக்குகளின் மொத்த மதிப்பு
இந்திய தேசிய காங்கிரசு 281,015
பாரதிய ஜனதா கட்சி 253,269
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 81,722
பகுஜன் சமாஜ் கட்சி 62,862
சமாஜ்வாதி கட்சி 58,403
இராச்டிரிய ஜனதா தளம் 32,727
திராவிட முன்னேற்றக் கழகம் 29,752
ஐக்கிய ஜனதா தளம் 27,057
தேசியவாத காங்கிரஸ் கட்சி 23,788
சிவசேனா 22,178
பிஜு ஜனதா தளம் 19,709
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 19,280
இந்திய பொதுவுடமைக் கட்சி 15,130
தெலுங்கு தேசம் கட்சி 14,744
அகாலி தளம் 13,356
ஜனதா தளம் (மதசார்பற்ற) 11,956
பாட்டாளி மக்கள் கட்சி 8,156
திரிணாமூல் காங்கிரசு 8,070
தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி 7,388
அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் 7,365
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 7,128
புரட்சிகர சோசலிசக் கட்சி 6,360
ராஷ்டிரிய லோக் தளம் 4,912
அசோம் கன பரிசத் 4,908
லோக் சன சக்தி கட்சி 4,742
சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சி 4,140
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 3,904
இந்திய தேசிய லோக் தளம் 2,940
சம்மு காசுமீர் மக்கள் ஜனநாயகக் கட்சி 2,568
இந்திய யூனியன் முசுலிம் லீக் 2,480
சிக்கிம் ஜனநாயக முன்னணி 1,633
நாகாலாந்து மக்கள் முன்னணி 1,587
மிசோ தேசிய முன்னணி 1,584
கேரளா காங்கிரஸ் கட்சி 1,316
அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லீமன் 1,300
அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி 1,160
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினிசம்) விடுதலை 1,041
இந்தியக் குடியரசுக் கட்சி (அத்வாலே) 883
சுதந்திர பாரதம் பக்‌ஷ் 883
கேரளா காங்கிரஸ் கட்சி (மணி) 760
சமதா கட்சி 717
பாரதீய நவசக்தி கட்சி 708
இந்தியாக் கூட்டாட்சி ஜனநாயகக் கட்சி 708
தேசிய லோகதந்திரீக் கட்சி 708
சமாஜ்வாதி ஜனதா கட்சி (ராஷ்டிரீய) 708
ஜன சூரஜ்யா சக்தி 700
மேற்கு வங்க சோசலிசக் கட்சி 604
கோர்க்காலாந்து தேசிய விடுதலை முன்னணி 453
ராஷ்டிரீய பரிவர்த்தன் தளம் 416
கோண்ட்வானா கணதந்திர கட்சி 393
ஐக்கிய கோவர்கள் ஜனநாயகக் கட்சி 372
அனைத்து ஜார்கண்ட் மாணவர் ஒன்றியம் 352
விடுதலைச் சிறுத்தைகள் 352
இந்திய குடியானவர் மற்றும் தொழிலாளர் கட்சி 350
ஒரிசா கண பரிஷத் 298
ஜனதா கட்சி 296
சம்மு காசுமீர் தெசிய சிறுத்தைகள் கட்சி 288
ராஷ்டிரீய சமந்தா தளம் 262
அகில பாரதிய லோக்தந்ரிக் காங்கிரசு 208
பாரதிய ஜன சக்தி 208
ஜன மோர்சா 208
ராஷ்டிரீய ஸ்வாபிமான் கட்சி 208
உத்தரப்பிரதேச ஐக்கிய ஜனநாயக முன்னணி 208
உத்தரகண்ட் கிராந்தி தளம் 192
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 176
ஜார்கண்ட் கட்சி 176
அகில பாரதிய சேனா 175
பாரிப்பா பகுஜன் மகாசங்கம் 175
அகில் ஜன விகாஸ் கட்சி 173
Indigenous Nationalist Party of Twipra 156
ஐக்கிய ஜனநாயகக் கட்சி 153
மதசார்பற்ற காங்கிரசு 152
கருணாகரன் காங்கிரசு 152
அகில இந்திய முஸ்லிம் லீக் 152
JSS 152
கேரளா காங்கிரஸ் கட்சி (பாலக்கிருஷ்ணன்) 152
கேரளா காங்கிரஸ் கட்சி (மதசார்பற்ற) 152
ஜனநாயக சோச்லிச காங்கிரசு 151
ஜார்கண்ட் கட்சி (நரேன்) 151
கன்னட சாலவலி வத்தல் பக்‌ஷா 131
கன்னடம் நாடு கட்சி 131
இந்தியக் குடியரசு கட்சி 131
ராஜஸ்தான் சமாஜிக் நியாய மன்ச் 129
அசோம் கன பரிசத் (பிரகதீஷல்) 116
மாநில சுயாட்சி வேண்டல் குழு 116
லோகோ சன்மிலன் 116
மணிப்பூர் மக்கள் கட்சி 90
ஜனநாயக இயக்கம் 72
சம்மு காசுமீர் அவாமி லீக் 72
மேகாலயா ஜனநாயக கட்சி 68
தேசிய மக்களுக்கானக் கட்சி 54
இமாச்சல் முன்னேற்ற காங்கிரசு 51
லோக்தந்ரிக் மோர்ச்சா இமாச்சலப் பிரதேசம் 51
தெசியவாத ஜனநாயக இயக்கம் 45
புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரசு 48
மகாராஷ்டிராவாதி கோமன்தக் கட்சி 40
கோவா பாதுகாப்பு முன்னனி 40
மலை மாநில மக்கள் கட்சி 34
Khun Hynniewtrep National Awakening Movement 34
மிசோரம் மக்கள் கூட்டமைப்பு 24
அருணாச்சலக் காங்கிரஸ் 16
ஜோரம் தேசியவாத கட்சி 16
Hmar People's Convention 8
Maraland Democratic Front 8
சுயேட்சைகள் 32,202
நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 6,372

மேற்கோள்கள்

தொகு