2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகள்

2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளின் சின்னம்

2008இல் ஜூன் 5 முதல் ஜூன் 17 வரை என்.பி.ஏ.இல் 2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. என்.பி.ஏ. கிழக்குக்கூட்டத்தை வெற்றிபெற்ற பாஸ்டன் செல்டிக்ஸ் அணியும் மேற்குக்கூட்டத்தை வெற்றிபெற்ற லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியும் இப்போட்டிகளில் மோதின.[1] ஏழு போட்டிகள் இருக்கும் இறுதிப்போட்டிகளில் எந்த அணி முதலாக நாலு போட்டிகளை வெற்றிபெறுமோ அந்த அணி என்.பி.ஏ. சாம்பியனாக உறுதி செய்யும்.

ஒரு என்.பி.ஏ. பருவத்தில் ஒரு அணி 82 போட்டிகள் விளையாடும். 2008 பருவத்தில் செல்டிக்ஸ் அணி 66 வெற்றிகள், 16 தோல்விகளைப் பெற்றனர். லேகர்ஸ் அணி 57 வெற்றிகள், 25 தோல்விகளை பெற்றனர். இதனால் பாஸ்டன் அணிக்கு "வீடு மைதான லாபம்" (Home court advantage) இருந்தது; ஏழு போட்டிகள் வேண்டியதாக இருந்தது என்றால் நாலு போட்டிகள் பாஸ்டனில் நடக்கும்.

வரலாறுதொகு

என்.பி.ஏ. வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற எதிரிடை லேகர்ஸ்-செல்டிக்ஸ் எதிரிடை ஆகும். மொத்தத்தில் இந்த இரண்டு அணிகல் 31 தடவை இறுதிப்போட்டிகளை வெற்றிபெற்றுள்ளன. 1960களில் பில் ரசல், பாப் கூசி இருக்கும் செல்டிக்ஸ் அணிகள் மற்றும் எல்ஜின் பெய்லர், ஜெரி வெஸ்ட் இருக்கும் லேகர்ஸ் அணிகள் ஆறு தடவை இறுதிப்போட்டிகளில் மோதி ஆறும் செல்டிக்ஸ் வெற்றிபெற்றது. 1980களில் லேகர்ஸ் அணியின் மேஜிக் ஜான்சன் மற்றும் செல்டிக்ஸ் அணியின் லாரி பர்ட் என்.பி.ஏ.இல் தலைசிறந்த வீரர்களாக இருந்தார்கள். இப்பத்தாண்டில் மூன்று இறுதிப்போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் மோதின; இதில் லேகர்ஸ் இரண்டு தடவை வெற்றிபெற்றன.

2008 பருவத்துக்கு முன் செல்டிக்ஸ் அணி சானிக்ஸ் மற்றும் டிம்பர்வுல்வ்ஸ் அணிகளுடன் வியாபாரம் செய்து தலைசிறந்த புள்ளிபெற்ற பின்காவல் ரே ஏலன் மற்றும் வலிய முன்நிலை கெவின் கார்னெட் செல்டிக்ஸ் அணியுக்கு கூட்டல் செய்தன. லேகர்ஸ் அணி நடு பருவத்தில் கிரிசிலீஸ் அணியுடன் வியாபாரம் செய்து வலிய முன்நிலை பாவ் கசோலை கூட்டல் செய்தன. இதனால் இரண்டு அணியில் ஒரு "பெரிய மூன்று" தலைசிறந்த வீரர்கள் உள்ளன -- செல்டிக்ஸில் கார்னெட், ஏலன், மற்றும் பால் பியர்ஸ்; லேகர்ஸில் கசோல், கோபி பிரயன்ட் மற்றும் லமார் ஓடம்.

போட்டிகள்தொகு

 
இரண்டாம் போட்டியின் தொடக்கம்

ஆறு போட்டிகளில் பாஸ்டன் செல்டிக்ஸ் அணி இறுதிப்போட்டிகளை வெற்றிபெற்று 2008 என்.பி.ஏ. சாம்பியனாக உறுதி செய்தனர். முதலாம் இரண்டு போட்டிகள் பாஸ்டனில் நடந்து இரண்டும் பாஸ்டன் வெற்றிபெற்றது. மூன்றாம் போட்டி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்து லேகர்ஸ் அணி 87-81 புள்ளி எண்ணில் வெற்றிபெற்றது. நாலாம் போட்டியில் பாஸ்டன் அணி 97-91 புள்ளி எண்ணில் வெற்றிபெற்றது. ஐந்தாம் போட்டி, லாஸ் ஏஞ்சலஸில் கடைசியாக நடந்த போட்டி லாஸ் ஏஞ்சலஸ் வெற்றிபெற்று திரும்பி இரண்டு அணிகளும் பாஸ்டனுக்கு சென்றன. ஆறாம் போட்டியில் பாஸ்டன் அணி 131-92 புள்ளி அளவில் வெற்றிபெற்று சாம்பியனாக உறுதி செய்தனர்.

விருதுகள்தொகு

பொது பருவத்தில் (regular season) மிகவும் முக்கியமான வீரர் (most valuable player) விருதை பெற்றுள்ள கோபி பிரயன்ட் லேகர்ஸ் அணியில் இப்போட்டிகளில் மிகுந்த புள்ளிபெற்ற வீரர் ஆனார். ஆனால் இப்போட்டிகள் முடிந்து விட்டு இறுதிபோட்டிகள் மிகவும் முக்கியமான வீரர் விருதை செல்டிக்ஸ் அணியின் சிறு முன்நிலை பால் பியர்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.

அடிக்குறிப்புகள்தொகு

  • 1998 முதல் பல இறுதிப்போட்டிகளில் டிம் டங்கன் அல்ல ஷகீல் ஓனீல் விளையாடினர். 2008இல் பத்து ஆண்டில் முதலாம் தடவை இந்த இரண்டு வீரர்கள் இறுதிப்போட்டிகளில் விளையாடவில்லை.
  • கெவின் கார்னெட், பால் பியர்ஸ் மற்றும் ரே ஏலம் முதலாம் தடவை இறுதிப்போட்டிகளில் 2008இல் விளையாடியுள்ளனர். செல்டிக்ஸ் பயிற்றுனர் டாக் ரிவர்ஸ்-உம் முதலாம் தடவை வீரராவும் பயிற்றுனராவும் இறுதிப்போட்டிகளை வெற்றிபெற்றார்.

போட்டிகளின் தொகுப்புதொகு

அணி போட்டிகளின் புள்ளி எண் வெற்றிகள்
1 2 3 4 5 6
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் 88 102 87 91 103 92 2
பாஸ்டன் செல்டிக்ஸ் 98 108 81 97 98 131 4

மேற்கோள்கள்தொகு