2013 சப்ராமரி வன தொடருந்து விபத்து

மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டம், சப்ராமரி வனவிலங்கு சரணாலயத்தின் கிழக்குப் பகுதியில் 2013 சப்ரமரி வன தொடருந்து விபத்து நவம்பர் 13 அன்று நிகழ்ந்தது.[1][2]

சப்ராமரி வன தொடருந்து விபத்து
விவரங்கள்
நாள்13 நவம்பர் 2013
17:40
இடம்சப்ராமரி வனவிலங்கு சரணாலயம், சல்பைகுரி மாவட்டம், மேற்கு வங்காளம்
நாடு இந்தியா
காரணம்அதிவேகம்
தரவுகள்
தொடருந்துகள்கவி குரு விரைவுவண்டி
இறப்புகள்5 பெரிய யானைகள் 2 யானைக் குட்டிகள்
காயம்10 யானைகள்

இந்த விபத்தில் 17 இந்திய யானைகள் கொல்லப்பட்டன அல்லது காயமடைந்தன. இது சமீபத்திய வரலாற்றில் மிக மோசமானதாக விவரிக்கப்பட்டுள்ளது.[2][3][4]

பின்னணி

தொகு

இந்தியா முழுவதிலும் உள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை சுமார் 26,000 என்று கருதப்படுகிறது.[5] இதில் 2007ஆம் ஆண்டில் சுமார் 20 யானைகள் கொல்லப்பட்டதாக இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.[6] 2013ஆம் ஆண்டில், சப்ரமாரி பாதையில் குறிப்பாக நவம்பர் 13 விபத்தில் 17 யானைகள் கொல்லப்பட்டது.[7]

இந்தியா முழுவதிலும் உள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை சுமார் 26,000 என்று கருதப்படுகிறது.[5]

விபத்து

தொகு

2013ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று மாலை 05.40 மணியளவில் அசாமை நோக்கி பயணிகள் தொடருந்து ஒன்று சப்ராமரி வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தது. 19709 எனும் எண் கொண்ட இந்த தொடருந்து ஜெய்ப்பூர்-காமக்யா கவி குரு விரைவு வண்டியாகும். இது சுமார் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஜல்டாக்கா ஆற்றுப் பாலத்தினை நெருங்கிய போது சுமார் 40 முதல் 50 யானைகள் அடங்கிய மந்தையின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் 5 பெரிய யானைகளும் இரண்டு குட்டிகளும் கொல்லப்பட்டன. 10க்கும் மேற்பட்ட யானைகள் காயமுற்றன.[8]

இந்த விபத்தில் தப்பி ஒட்டிய யானைகள் சிறிது நேரம் கழித்து விபத்து நடந்த இடத்திற்குத் திரும்பி வந்தன. பின்னர் இந்த யானைகளை அதிகாரிகள் விரட்டியடித்தனர்.[9]

பின்விளைவு

தொகு

கூடுதல் மண்டல தொடருந்து மேலாளர் பி.லக்ரா கூறுகையில், “விபத்து குறித்து நாங்கள் கேள்விப்பட்ட உடனே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. சிறப்பு நிவாரண தொடருந்து அனுப்பப்பட்டது. அசாம் செல்லும் அனைத்து தொடருந்துகளும் மாற்றுப் பாதை வழியாக அனுப்பப்பட்டன." [1] இந்த பாதை 12 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பயணிகள் சேவைக்காகத் திறக்கப்பட்டது.[5] எதிர்காலத்தில் இதுபோன்று விபத்துகள் நிகழாமல் தடுப்பது குறித்து விவாதிக்கக் கூட்டம் ஒன்று நவம்பர் 14 அன்று வன மற்றும் ரயில்வே அதிகாரிகளிடையே நடைபெற்றது.[10]

தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய ஜல்பைகுரி பகுதி வன அதிகாரி பித்யுத் சர்க்காரின் தொலைப்பேசி நேர்காணலின் படி, "ஒரு பெண் யானையின் கால் தொடருந்து மோதியதால் முறிந்து நிற்க முடியாமல், இருப்புப்பாதையின் கீழே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. இப்பகுதியினை தூக்குகள் அல்லது சரக்குந்து போன்றவற்றால் அணுக இயலாத பகுதியாகும். எனவே கால்நடை மருத்துவர்கள் இப்பகுதிக்குச் சென்று சிகிச்சையினைத் தொடர்ந்தனர். இப்பகுதியில் சிறப்பு முகாம் ஒன்று அமைக்கப்பட்டது".[5] யானையின் எச்சங்கள் பாலத்தின் கட்டமைப்பில் சிக்கியிருந்தன, ஆனால் அவற்றை அகற்றுவதற்கு முன்பாகவே அவை சிதைந்தன.[11]

காயமடைந்த சில யானைகள் ஆபத்தான நிலையிலிருந்தன.

ஜல்பைகுரி எதிர்ப்பு

தொகு

வனவிலங்கு சரணாலயம் வழியாகச் செல்லும் தொடருந்துகளுக்கு வேகக் கட்டுப்பாட்டைக் கோரும் போராட்டம் நவம்பர் 14 ஆம் தேதி ஜல்பைகுரியில் நடந்தது. மேற்கு வங்கத்தின் வனத்துறை மந்திரி ஹிட்டன் பர்மனின் தொடர்பில்லாத அறிக்கையில், இதேபோன்ற விளைவுக்கான உத்தியோக பூர்வ கோரிக்கைகள் கடந்த காலங்களில் ரயில்வே அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டன.

விளைவுகள்

தொகு

இந்த விபத்து 168 கிலோ மீட்டர் நீளமும் புக்சா புலிகள் காப்பகம் வழியாக புது ஜல்பைகுரி செல்லும் அலிப்பூர்துவார் சாலையில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான பேச்சு வார்த்தைக்கு முன்னெடுப்பு செய்தது.[1] இமயமலை இயற்கை மற்றும் சாகச அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அனிமேஷ் பாசு, தேசிய பாரம்பரிய விலங்கு அடிக்கடி தொடருந்துகளால் தாக்கப்படுவதும், அரசாங்கங்கள் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும், இந்திய ரயில்வே யானைக் கன்றை அதன் சின்னமாகப் பயன்படுத்தியதன் முரண்பாடு குறித்தும் வருத்தம் தெரிவித்தார்.[11]

மின்வேலி அமைத்தல், எச்சரிக்கை விளக்கு, நகரும் உணர்விகள் நிறுவுதல் போன்ற தொழில்நுட்ப நடவடிக்கைகள் மூலம் இதுபோன்ற விளைவுகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.[12]

விசாரணை

தொகு

விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் அதிகாரிகள் மேற்கொண்டனர்.[13] விபத்திற்கான காரணமாக வேகம் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.[10] இந்த தொடருந்து மணிக்கு 80 வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது எனவும் இது வழிகாட்டு வேக வரம்பான 40 கிமீ/மணியினை விட மிக அதிகமாகும்.[14]

எதிர்வினை

தொகு

இந்த விபத்து "யானை நடைபாதையாக ஒதுக்கப்பட்ட பகுதிக்கு வெளியே நடந்தது" என்றும், "வனவிலங்குகளைப் பாதுகாப்பது மாநில அரசின் பொறுப்பாகும் [ஏனெனில்] தொடருந்து நிர்வாக அதிகாரிகளால் முடியாது" என்று இந்திய இரயில்வே அமைச்சர் ஆதிர் ரஞ்சன் செளவுத்ரி தெரிவித்தார்.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Sarkar, Debasis (13 November 2013). "'Railways Killer track' again kills 7 elephants in West Bengal". The Economic Times. http://articles.economictimes.indiatimes.com/2013-11-13/news/44030921_1_rail-track-elephants-new-jalpaiguri. பார்த்த நாள்: 14 November 2013. 
  2. 2.0 2.1 Withnall, Adam (14 November 2013). "Speeding train kills at least seven elephants and injures 10 others in India". The Independent. https://www.independent.co.uk/news/world/asia/speeding-train-kills-at-least-seven-elephants-and-injures-10-others-in-india-8939117.html. பார்த்த நாள்: 14 November 2013. 
  3. Banerjee, Manik (14 November 2013). "Train Mows Down, Kills 7 Elephants in East India". https://abcnews.go.com/International/wireStory/train-mows-kills-elephants-east-india-20884192. பார்த்த நாள்: 14 November 2013. 
  4. "Elephant death toll rises to seven". Press Trust of India. 2013-11-16. http://newindianexpress.com/nation/Elephant-death-toll-rises-to-seven/2013/11/16/article1894254.ece. பார்த்த நாள்: 2013-11-20. 
  5. 5.0 5.1 5.2 5.3 Kumar, Hari; Barry, Ellen (2013-11-14). "Train in India Hits Elephants Crossing Track". The New York Times. https://www.nytimes.com/2013/11/15/world/asia/passenger-train-in-northeast-india-hits-elephant-herd.html. பார்த்த நாள்: 2013-11-15. 
  6. Abad-Santos, Alexander (2013-11-14). "Elephants in India Keep Getting Killed by Trains". The Atlantic Wire இம் மூலத்தில் இருந்து 2013-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131116100121/http://www.theatlanticwire.com/global/2013/11/elephants-india-keep-getting-killed-trains/71600/. பார்த்த நாள்: 2013-11-15. 
  7. Poareo, Juana (2013-11-14). "Elephants in India Struck and Killed in Train Collision". Las Vegas Guardian Express. http://guardianlv.com/2013/11/elephants-in-india-struck-and-killed-in-train-collision/. பார்த்த நாள்: 2013-11-15. 
  8. "19709/Jaipur-Kamakhya Kavi Guru Express". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 14 November 2013.
  9. . 
  10. 10.0 10.1 "Overspeeding trains ran over elephants: Bengal minister". Press Trust of India. 2013-11-14. http://www.firstpost.com/india/overspeeding-trains-ran-over-elephants-bengal-minister-1230375.html. பார்த்த நாள்: 2013-11-15. 
  11. 11.0 11.1 "Elephants Killed As Train Slams into Herd". 14 November 2013. http://news.sky.com/story/1168520/elephants-killed-as-train-slams-into-herd. பார்த்த நாள்: 14 November 2013. 
  12. 12.0 12.1 Dinda, Archisman (2013-11-14). "Blame game over elephant death in West Bengal". Gulf News. http://gulfnews.com/news/world/india/blame-game-over-elephant-death-in-west-bengal-1.1255200. பார்த்த நாள்: 2013-11-15. 
  13. "6 elephants killed by train in India's West Bengal state". United Press International. 2013-11-14. http://www.upi.com/Top_News/World-News/2013/11/14/6-elephants-killed-by-train-in-Indias-West-Bengal-state/UPI-25431384445835. பார்த்த நாள்: 2013-11-15. 
  14. "Train rams into elephant herd in North Bengal, 7 jumbos killed". One India. 2013-11-14 இம் மூலத்தில் இருந்து 2013-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131202232828/http://news.oneindia.in/kolkata/train-rams-into-elephant-herd-in-north-bengal-7-jumbos-killed-1341192.html. பார்த்த நாள்: 2013-11-15.