2020–2023 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம் சூப்பர் லீக்
2020–23 ஐசிசி ஆண்கள் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் சூப்பர் லீக்[1][2] என்பது ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம் சூப்பர் லீக் என்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட (ஒநாப) லீக் தொடரின் தொடக்கப் பதிப்பாகும். ஜூலை 2020 முதல் மார்ச் 2023 வரை நடைபெறும் இந்த லீக் தொடரின் போட்டிகள்,[3] 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிக்கான தகுதி-காணும் வழிமுறையாக அமைந்துள்ளது. [4]
நாட்கள் | 30 ஜூலை 2020 – மார்ச் 2023 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | குழு தொடர் |
மொத்த பங்கேற்பாளர்கள் | 13 |
மொத்த போட்டிகள் | 156 |
அலுவல்முறை வலைத்தளம் | icc-cricket.com |
இத்தொடரில், பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முழு உறுப்பினராக உள்ள பன்னிரு அணிகளும் 2015–17 ஐசிசி உலகத் துடுப்பாட்ட லீக் வாகைத் தொடரில் வென்ற நெதர்லாந்து அணியும் என மொத்தம் 13 அணிகள் போட்டியிடுகின்றன.[5] ஒவ்வொரு அணியும் மற்ற பன்னிரு அணிகளில் எட்டு அணிகளுக்கு எதிராக எட்டு ஒருநாள் தொடர்களில் விளையாடும், அவற்றில் நான்கு தொடர்கள் உள்நாட்டிலும் நான்கு வெளிநாட்டிலும் நடைபெறும். ஒவ்வொரு தொடரும் தலா மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்டிருக்கும்.
கோவிட் -19 தொற்றுநோயால் இந்த லீக் தொடரின் தொடக்கம் பாதித்தது, இதனால் பல தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன. ஏப்ரல் 2020 இல் நடந்த தலைமை நிர்வாகிகள் கூட்டத்தைத் தொடர்ந்து, துடுப்பாட்டத்தில் தொற்றுநோயின் தாக்கத்தைப் பற்றி நன்கு புரிந்துகொண்ட பிறகு, லீக்கின் எதிர்காலத்தைப் பற்றி மற்றொரு நாளில் விவாதிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்தது.[6][7] பிறகு ஜூலை 30, 2020இல், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான ஒருநாள் தொடரின் மூலம் சிறப்பு லீக் தொடங்கியது.[8][9]
டிசம்பர் 2019 இல் தொடங்கப்பட்ட சோதனை முயற்சியைத் தொடர்ந்து,[10] சூப்பர் லீக்கில் அனைத்து போட்டிகளுக்கும் முன்னங்கால் பிழை வீச்சுகளைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக ஐசிசி அறிவித்தது.[11] இதன்படி மூன்றாவது நடுவர், முன்னங்கால் பிழைவீச்சுகளை அறிந்து, கள-நடுவர்களைத் தொடர்புகொண்டு தெரிவிப்பார்.[12]
அணிகளும் தகுதி பெறும் பாதையும்
தொகு- ஐசிசியின் முழு உறுப்பினர்கள் :
- 2015–17 ஐசிசி உலக துடுப்பாட்ட லீக் தொடரின் வெற்றியாளர்கள் :
2023 உலகக்கிண்ணத் தொடருக்கு, நடத்தும் நாடு என்ற முறையில் இந்திய அணியும், அதுதவிர, லீக் தரவரிசையின் முதல் ஏழு அணிகளும் தானாகவே தகுதி பெறும். மீதமுள்ள ஐந்து அணிகளும், மற்ற 2022 துடுப்பாட்ட உலகக்கிண்ண தகுதி-காண் தொடரில் ஐந்து இணைநிலை அணிகளுடன் விளையாடும்; இதிலிருந்து இரு அணிகள் உலகக் கோப்பைக்கு செல்லும்.[14]
இந்த சூப்பர் லீக் தரவரிசையின் முதல் பன்னிரு அணிகளும் அடுத்த உலகக்கிண்ணப் போட்டிக்கான சூப்பர் லீக் பதிப்பில் இடம்பெறும். இத்தொடரில் 13ஆம் இடத்தைப் பெறும் அணியானது, 2019–2022 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ண லீக் 2 தொடரில் வென்ற அணியுடன் உலகக்கிண்ணத் தகுதி-காண் தொடரில் விளையாடும்; முடிவாக தரவரிசையில் முந்தும் அணி, சூப்பர் லீக்கின் அடுத்த பதிப்பில் 13ஆவது அணியாக இடம்பெறும். தரவரிசையில் பிந்தும் அணி, லீக் 2 தொடரின் அடுத்தப் பதிப்பில் விளையாடும்.[15][16]
வடிவம்
தொகுஒரு பகுதி தொடர் சுழல்முறை லீக் முறையில் இரண்டு ஆண்டுகளாக இத்தொடர் விளையாடப்படும். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற எட்டு எதிரணிகளுடன் நான்கு தொடர்கள் உள்நாட்டிலும் நான்கு தொடர்கள் வெளிநாட்டிலும் விளையாடும். எனவே ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள அனைத்து அணிகளையும் எதிர்கொள்ளாது, ஆனால் அனைத்து அணிகளும் ஒரே எண்ணிக்கையிலான போட்டிகளை விளையாடும் (உள்நாட்டில் 12 போட்டிகள் மற்றும் வெளிநாட்டில் 12 போட்டிகள்).[17]
புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படுகின்றன: [17]
- வெற்றி - 10 புள்ளிகள்
- முடிவு இல்லை அல்லது கைவிடப்பட்டது - 5 புள்ளிகள்
- தோல்வி - 0 புள்ளிகள்
- ஐசிசியின் வீசுகளம் மற்றும் களவெளிக் கண்காணிப்பு செயல்முறை மூலம் ஒரு வீசுகளம் அல்லது களவெளி, தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டால், வருகை தந்த வெளிநாட்டு அணிக்கு போட்டியின் வெற்றி வழங்கப்படும்.[17]
- ஒரு போட்டியின் முடிவில் தேவையான நிறைவு-விகிதத்திற்குப் பின்தங்கியிருக்கும் இருக்கும் அணிக்கு, பின்தங்கியுள்ள ஒவ்வொரு நிறைவுக்கும் தொடரில் ஒரு புள்ளி கழிக்கப்படும்.[17]
- சமநிலையில் முடியும் போட்டிகளின் முடிவு சிறப்பு நிறைவில் தீர்மானிக்கப்படும். சிறப்பு நிறைவும் சமமாக இருந்தால், வெற்றியாளர் முடிவாகும் வரை அடுத்தடுத்த சிறப்பு நிறைவுகள் விளையாடப்படும்.[18]
அட்டவணை
தொகு2018-23 ஐசிசி எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தின் ஒரு பகுதியாக 20 ஜூன் 2018 அன்று ஐசிசியால் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டது. [19] [20]
மேற்கோள்கள்
தொகு- ↑ "New qualification pathway for ICC Men's Cricket World Cup approved". International Cricket Council. 20 October 2018. பார்க்கப்பட்ட நாள் 20 October 2018.
- ↑ Della Penna, Peter (21 October 2018). "Associates pathway to 2023 World Cup undergoes major revamp". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 October 2018.
- ↑ "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled". International Cricket Council. 15 December 2020. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
- ↑ "New ODI league to act as World Cup qualification pathway". International Cricket Council. 20 June 2018. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.
- ↑ "The Netherlands win the ICC World Cricket League Championship". International Cricket Council. 6 December 2017. பார்க்கப்பட்ட நாள் 6 December 2017.
- ↑ "ICC update following Chief Executives' meeting". International Cricket Council. 23 April 2020. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
- ↑ "Men's T20 World Cup and Women's 50-over World Cup plans ongoing - ICC". BBC Sport. 23 April 2020. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
- ↑ "ICC launches Men's Cricket World Cup Super League". International Cricket Council. 26 July 2020. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020.
- ↑ Samiuddin, Osman (27 July 2020). "England v Ireland to kick off World Cup Super League on July 30". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020.
- ↑ "India vs West Indies: Third umpire, not on-field officials, to call front foot no balls during series - ICC". Hindustan Times. 5 December 2019. பார்க்கப்பட்ட நாள் 5 December 2019.
- ↑ "TV umpires to call front-foot no-balls in ODI Super League". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020.
- ↑ "TV Umpires To Check For Front-Foot No-Balls In ODI Super League". NDTV. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020.
- ↑ "Nederland wint World Cricket League!". Koninklijke Nederlandse Cricket Bond. 6 December 2017. Archived from the original on 6 December 2017. பார்க்கப்பட்ட நாள் 6 December 2017.
- ↑ "New cricket calendar aims to give all formats more context". ESPN Cricinfo. 4 February 2017. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
- ↑ de Jong, Bertus (16 August 2019). "Explainer: With 2023 Cricket World Cup qualifying process underway, here's a breakdown of ICC's new-look league structure". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
- ↑ Della Penna, Peter (14 August 2019). "The road to World Cup 2023: how teams can secure qualification, from rank No. 1 to 32". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
- ↑ 17.0 17.1 17.2 17.3 "ICC Cricket World Cup Super League Playing Conditions" (PDF). International Cricket Council. pp. 21–22. பார்க்கப்பட்ட நாள் 27 July 2020.
- ↑ "ICC Men's Cricket World Cup Super League Playing Conditions" (PDF). International Cricket Council. 2 September 2020. பார்க்கப்பட்ட நாள் 25 November 2020.
- ↑ "Men's Future Tour Programme 2018-2023 released". International Cricket Council. 20 June 2018. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018.
- ↑ "Men's Future Tour Programme 2018-2023" (PDF). International Cricket Council. 20 June 2018. பார்க்கப்பட்ட நாள் 25 July 2018.