2022 மோர்பி பாலம் இடிந்த விபத்து

இந்தியாவின் குசராத்தில் பாலம் இடிந்த நிகழ்வு

30 அக்டோபர், 2022 அன்று, இந்தியாவின், குஜராத்தின், மோர்பியில், மச்சு ஆற்றின் மீது உள்ள கட்டண நடைபாதை தொங்கு பாலமான ஜுல்டோ புல் இடிந்து விழுந்ததில் குறைந்தது 135 பேர் இறந்தனர், 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2022 மோர்பி பாலம் இடிந்த விபத்து
2008 இல் பாலம்
2022 மோர்பி பாலம் இடிந்த விபத்து is located in குசராத்து
2022 மோர்பி பாலம் இடிந்த விபத்து
2022 மோர்பி பாலம் இடிந்த விபத்து is located in இந்தியா
2022 மோர்பி பாலம் இடிந்த விபத்து
நாள்30 அக்டோபர் 2022 (2022-10-30)
நேரம்18:40 (IST, ஒ.ச.நே + 05:30)
அமைவிடம்மோர்பி, குசராத்து, இந்தியா
புவியியல் ஆள்கூற்று22°49′06″N 70°50′34″E / 22.81833°N 70.84278°E / 22.81833; 70.84278
வகைbridge failure
இறப்புகள்135+
காயமுற்றோர்180+

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப் பாலம், பழுதுபார்ப்பதற்காக நீண்ட காலமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து தீபாவளி மற்றும் குஜராத்தி புத்தாண்டுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக மீண்டும் திறக்கப்பட்டது.

பின்னணி தொகு

ஜுல்டோ புல் குசராத்தி: ઝૂલતો પુલ ; "தொங்கு பாலம்") என்பது 230-மீட்டர் (750 அடி) ). நீளமும், 1.25-மீட்டர் (4 அடி 1 அங்) அகலமும் கொண்ட ஒரு நடைபாதை தொங்கு பாலம் ஆகும். இது 19 ஆம் நூற்றாண்டில்[1][2] இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் போது மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டது.[3] இது 1879 பிப்ரவயில் திறக்கபட்டது.[4]

இந்தப் பாலம் மோர்பி நகராட்சிக்கு சொந்தமானது. இது சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிக்காக தனியார் அறக்கட்டளையான ஓரேவாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.[5][6] மோர்பியைச் சார்ந்த நிறுவனமான அஜந்தா உற்பத்தி பிரைவேட் லிமிடெட் பாலத்தை பராமரித்தல் மற்றும் நிர்வகிப்பதற்கான 15 வருட ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளது.[7] பழுதுபார்ப்பதற்காக ஆறு மாதங்கள் மூடப்பட்டிருந்த கட்டணப் பாலம் குஜராத்தி புத்தாண்டு நாளன 26, அக்டோபர், 2022 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.[1]

முதற்கட்ட தகவல்களின்படி, பாலம் பழுதுபார்க்கப்பட்ட பின்னர் உள்ளூர் கட்டுமானப் பொறியியல் அதிகாரிகளிடமிருந்து தேவையான தகுதிச் சான்றிதழ் பெறாமல் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே மீண்டும் திறக்கப்பட்டது. 125 பேர் மட்டுமே இருக்கவேண்டிய பாலத்தில், 500 க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கபட்டனர்.[8] 2001 நிலநடுக்கத்திற்குப் பிறகு பாலத்தை பழுதுபார்ப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கிய நகராட்சியின் தலைமை அதிகாரி, சீரமைப்புக்கு பொறுப்பான தனியார் நிறுவனம் "எங்களுக்குத் தெரிவிக்காமல் பாலத்தை பார்வையாளர்களுக்குத் திறந்துவிட்டது, எனவே, எங்களால் பாதுகாப்பு சான்றிதழைப் பெற முடியவில்லை" என்றது.[5]

நிகழ்வு தொகு

பாலம் மீண்டும் திறக்கப்பட்ட நான்கு நாட்களில்,[9] 30 அக்டோபர் 2022 அன்று மாலை 6:40 மணியளவில் பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் கண்ணாணிப்பு ஒளிப்படமிக் காட்சிகளில், கட்டமைப்பு வலுவாக அதிர்வதையும், பாலத்தின் இருபுறமும் மக்கள் கம்பிவடங்களையும், வேலிகளைப் பிடித்துக் கொண்டிருப்பதையும் காண முடிந்தது.[7] உயிர் பிழைத்த ஒருவர், பாலத்தில் அதிகமான மக்கள் இருந்ததாகவும், அவர்களால் நகர முடியவில்லை என்றும், விபத்தின்போது சிலர் பாலத்தின் துண்டுகளால் நசுக்கப்பட்டதாகவும் கூறினார்.[7] தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் மீட்புப் பணிகளைத் தொடங்கின.[10] பின்னர் அவர்களுடன் இராணுவம், கடற்படை, வான்படை ஊழியர்கள் இணைந்தனர்.[11] மீட்புப் பணிகளுக்காக காவல்துறை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.[12]

இதில் குறைந்தது 135 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.[7] 180 இற்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.[13] பாதிக்கப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பதின்ம வயதினர், பெண்கள் மற்றும் முதியவர்கள் இருந்தனர்.[7] பலியானவர்களில் 47 குழந்தைகளும் அடங்குவர்.[14]

இந்தியா மற்றும் குஜராத் அரசுகள் இறந்த ஒவ்வொரு நபரின் குடும்பத்தினருக்கு முறையே 2 இலட்சம் (US$2,500) மற்றும் ₹ 4 இலட்சம் (US$5,000) மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 (US$630) வழங்குவதாக அறிவித்தன.[11][15][16]

விசாரணை தொகு

இதற்கான காரணத்தை ஆராய்ந்து கண்டறிய ஐந்து நபர்கள் கொண்ட குழுவை குஜராத் அரசு அமைத்தது.[17][18] இந்த நிகழ்வு தொடர்பாக 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.[19] நிகழ்வுடன் தொடர்புடையதாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.[20]

பாலத்தின் பராமரிப்பு மற்றும் நிர்வாக நிறுவனங்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 304 (கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றம்), 308 (வேண்டுமென்றே மரணத்தை ஏற்படுத்திய செயல்) மற்றும் 114 (குற்றத்துக்கு தூண்டுகோலாக இருத்தல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது.[12][17] இந்த நிகழ்வில் தன் சகோதரி உட்பட பன்னிரண்டு உறவினர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் குந்தாரியா இழந்தார்.[3] இதற்கு காரணம் அளவுக்கு அதிகமான ஆட்கள் பாலத்தில் இருந்ததே என தான் நம்புவதாக கூறினார்.[2]

எதிர்வினை தொகு

தலைமை அமைச்சர் நரேந்திர மோதி [21] மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் சா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.[22]

எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் தலைவர் இராகுல் காந்தி ஆகியோர் கட்சி தொண்டர்கள் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு கோரினர்.[23]

இவற்றையும் பார்க்க தொகு

குறிப்புகள் தொகு

 1. 1.0 1.1 Khanna, Sumit (2022-10-30). "At least 40 killed in India bridge collapse, state minister says" (in en). Reuters. https://www.reuters.com/world/india/suspension-bridge-collapses-india-hundreds-fall-river-officials-2022-10-30/. 
 2. 2.0 2.1 "Recently renovated cable bridge collapses in Gujarat, several injured: Top developments". The Times of India (in ஆங்கிலம்). 30 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
 3. 3.0 3.1 Thomas, Merlyn; Peter, Laurence (2022-10-31). "India bridge collapse: Death toll rises to 141, many still missing". BBC. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.
 4. "Gujarat: Suspension bridge collapses in Morbi, more than 125 dead". The Indian Express. 2022-10-30. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
 5. 5.0 5.1 "Gujarat: Suspension bridge collapses in Morbi, more than 125 dead". The Indian Express. 2022-10-30. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
 6. "5 Facts About Old Bridge In Gujarat That Collapsed". NDTV. 31 October 2022. https://www.ndtv.com/india-news/5-facts-about-old-bridge-in-gujarat-that-collapsed-today-3474913. 
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 "Pedestrian bridge collapses in India, killing at least 132". NBC News (in ஆங்கிலம்). October 31, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.
 8. Ankit, Tyagi (31 October 2022). Ghosh, Deepshikha (ed.). "Exclusive: Gujarat Bridge Reopened Ahead Of Schedule. 141 Dead". NDTV. Archived from the original on 31 October 2022. பார்க்கப்பட்ட நாள் 31 October 2022.
 9. "Hundreds plunge into the river after India bridge collapses". BBC News (BBC). 30 October 2022. https://www.bbc.co.uk/news/world-asia-india-63445154. 
 10. Pandey, Tanushree (31 October 2022). Gauntam, Aditi (ed.). "141 Dead, Gujarat Bridge Was Disaster Waiting To Happen: 10 Points". NDTV. Archived from the original on 31 October 2022. பார்க்கப்பட்ட நாள் 31 October 2022.
 11. 11.0 11.1 "Morbi bridge collapse updates: Army, Air Force and Navy join NDRF for rescue ops". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-10-30. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.
 12. 12.0 12.1 "India bridge collapse: Death toll rises to 132, many still missing". BBC News. 2022-10-30. https://www.bbc.com/news/world-asia-india-63445154. 
 13. "Gujarat Morbi bridge collapse, accident news today: Death toll rises to 135; rescue operation underway". Zee Business. 2022-10-31. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.
 14. "Gujarat Bridge: One Side Collapsed, On Other Side, People Dangled Mid-Air". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.
 15. "Morbi bridge collapse: Toll rises to over 140, probe on". cnbctv18.com. 2022-10-31. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.
 16. "Gujarat bridge collapse live updates: Over 60 dead as recently renovated bridge collapses in Morbi, several feared trapped". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
 17. 17.0 17.1 "Morbi bridge collapse: Toll rises to over 140, probe on". cnbctv18.com (in ஆங்கிலம்). 2022-10-31. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.
 18. "अब तक 132 की मौत, मेंटिनेंस कंपनी के खिलाफ एफआईआर दर्ज, SIT करेगी जांच". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.
 19. "As it happened: India bridge collapse tragedy". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.
 20. Shih, Garry; Masih, Niha; Irfan, Shams (31 October 2022). "Indian police file homicide charges, arrest 9, as bridge toll passes 134" (in en-US). Washington Post. https://www.washingtonpost.com/world/2022/10/31/india-bridge-gujarat-morbi-investigation/. 
 21. "Gujarat Morbi Bridge Collapse LIVE Updates: My heart goes out to Morbi bridge collapse victims, says PM Modi; rescue operations continue". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.
 22. Kumar, Raju (2022-10-31). "Gujarat bridge collapse: How political circle reacted | 'A man-made tragedy', says Congress". www.indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.
 23. PTI (2022-10-30). "Gujarat bridge collapse: Kharge, Rahul ask Cong workers to provide all help in rescue ops". ThePrint. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.