2023 இல் தமிழ்நாடு
2023 நாட்காட்டி ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு.
முக்கிய நிகழ்வுகள்
தொகு- பிப்ரவரி 27 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசுவை சேர்ந்த ஈ. வெ. கி. ச. இளங்கோவன் வெற்றி பெற்றார்.
- டிசம்பர் 3 - மிக்ஜாம் புயல் வலுப்பெற்று 5ம் நாள் நெல்லூர்-மச்சிலிப்பட்டினம் இடையே கரையைக் கடந்தது. இப்புயலால் சென்னை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால், போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டது.
இறப்புகள்
தொகு- சனவரி 4 - ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் காலமானார்[1][2]
- 27 நவம்பர் - நாகசுரம் இசைக்கலைஞர் எம். பி. என். பொன்னுசாமி
- 18 நவம்பர் - இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ச. வெங்கிடரமணன்
- 28 டிசம்பர் - தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனரும், தலைவருமான விசயகாந்து தமது 71வது அகவையில் மறைந்தார்.