2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்

2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல் (2023 Nagaland Legislative Assembly), நாகாலாந்து சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட மார்ச் 2023ல் தேர்தல் நடைபெற உள்ளது.[1][2]

2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்

← 2018 27 பிப்ரவரி 2023
 
கட்சி தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி பாரதிய ஜனதா கட்சி
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி

 
கட்சி நாகாலாந்து மக்கள் முன்னணி ஐக்கிய ஜனதா தளம்
கூட்டணி - -


நடப்பு முதலமைச்சர்

நைபியு ரியோ
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி



பின்னணி தொகு

தற்போதைய நாகாலாந்து சட்டமன்றத்தின் பதவிக்காலம் 12 மார்ச் 2023 அன்றுடன் முடிவடைகிறது.[3] முன்னர் நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல் 2018 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற்று நைபியு ரியோ தலைமையில் ஆட்சி அமைத்தது.[4]

தேர்தல் அட்டவணை தொகு

நிகழ்வு நாள்
வேட்பு மனு தாக்கல் - துவக்கம் சனவரி 31
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள் பிப்ரவரி 7
வேட்பு மனு பரிசீலனை பிப்ரவரி 8
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள் பிப்ரவரி 10
தேர்தல் நாள் 27 பிப்ரவரி 2023
வாக்கு எண்ணிக்கை நாள் 2 மார்ச் 2023

தேர்தல் முடிவுகள் தொகு

மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் 2023 அன்று நடைபெற்றது. ஆளும் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 37 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 25 தொகுதிகளையும்; பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.[5] பாரதிய ஜனதா கட்சி கட்சி கூட்டணியுடன் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நைபியு ரியோ தலைமையிலான அமைச்சரவை 7 மார்ச் 2023 பதவியேற்க உள்ளது.[6]

கூட்டணி கட்சி வாக்குகள் தொகுதிகள்
Votes % ± கூடுதல்/குறைவு போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி +/−
வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 3,68,848 32.22  7.02 40 25  7
பாரதிய ஜனதா கட்சி 2,15,336 18.81  3.51 20 12 -
மொத்தம் 5,84,184 51.03  10.53 60 37  7
கூட்டணி இல்லை தேசியவாத காங்கிரசு கட்சி 1,09,467 9.56  8.50 12 7  7
தேசிய மக்கள் கட்சி (இந்தியா) 66,157 5.76  1.14 12 5  3
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 98,971 8.65  8.65 15 2  2
நாகாலாந்து மக்கள் முன்னணி 81,191 7.09  31.71 22 2  24
இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே) TBD TBD TBD 9 2 -
ஐக்கிய ஜனதா தளம் 37,182 3.25  1.25 7 1 -
இந்திய தேசிய காங்கிரசு 40,650 3.55  1.45 23 0 -
சுயேச்சைகள் TBD TBD TBD 4  3
பிறர் TBD TBD TBD 0 -
நோட்டா 3,508 0.31  0.26
மொத்தம் 100%
செல்லத் தக்க வாக்குகள்
செல்லாத வாக்குகள்
பதிவான வாக்குகள்
புறக்கணிப்புகள்
மொத்த வாக்குகள்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Upcoming Elections in India
  2. 2023ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் பொதுத்தேர்தல்!
  3. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
  4. "Neiphiu Rio takes oath as Nagaland chief minister". mint (in ஆங்கிலம்). 2018-03-08. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
  5. Nagaland Assembly Election Party Wise Result
  6. Neiphiu Rio may take oath as Nagaland CM on March 7