2023 விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுக தீ விபத்து
2023 விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுக தீ விபத்து19 நவம்பர் 2023 அன்று, சுமார் 23:00 ஒ.ச.நே மணிக்கு இந்தியாவின் ஆந்திர பிரேதச மாநிலத்தின் விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் ஏற்பட்டது. இத்தீவிபத்தில் 43 மீன்பிடிப் படகுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. மேலும் 15 படகுகள் பகுதியளவில் சேதமடைந்தன. எந்த மூலத்திலிருந்து தீ ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை (27 நவம்பர் 2023) தெரியவில்லை. மேலும் இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30-35 கோடி (USD 3.6-4.2 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாள் | நவம்பர் 19–20, 2023 |
---|---|
அமைவிடம் | விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம், விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
வகை | துறைமுக தீ விபத்து |
காரணம் | தெரியவில்லை |
இறப்புகள் | எவருமில்லை |
காயமுற்றோர் | எவருமில்லை |
சொத்து சேதம் | இழப்பு ரூ. 30 - 35 கோடி ( 3.6-4.2 மில்லியன் அமெரிக்க டாலர்) |
நவம்பர் 26, 2023 அன்று, தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிந்துள்ளதாக காவல்துறை அறிவித்தது. இச்சம்பவம் தொடர்பாக முதலில் யூடியூபரும் மற்றும் உள்ளூர் மீனவருமான நானி குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். உள்ளூர்வாசிகளான வாசுபள்ளி நானி மற்றும் சத்யம் ஆகியோர் குடிபோதையில், ஒரு சிகரெட்டை படகில் வீசியதால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறி அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.[1] இருப்பினும் ஆரம்பகட்ட விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
சம்பவம்
தொகுநவம்பர் 19, 2023 அன்று 23:00 ஒ.ச.நே க்குப் பிறகு இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்தது. படகுகளில் வைக்கப்பட்டிருந்த எரிபொருள் ஆதாரங்களான திரவ பெட்ரோலிய வாயு உருைளகள் மற்றும் படகின் எரிபொருள் கொள்கலன்கள் பற்றிக் கொண்டதால் பல படகுகளுக்கும் தீ வேகமாகப் பரவியது. தீயணைப்புத் துறையினர் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இறுதியாக நவம்பர் 20 ஆம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது [2]
கடலில் பிடித்துவரப்பட்ட மீன்களுடன் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் எரிந்த நிலையில், ஆரம்பத்தில் சுமார் 25 மீன்பிடி படகுகள் முற்றிலும் அழிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், பின்னர் அரசு அதிகாரிகள் 43 மீன்பிடி படகுகள் முற்றாக அழிக்கப்பட்டதையும் 15 படகுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததைக் கண்டறிந்தனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. [3]
பின்விளைவு
தொகுவிபத்தின் போது மீன்பிடிப் படகுகளில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான மீன், நண்டு உள்ளிட்ட கடல் உணவுயிரிகள் தீயில் நாசமானதால், துறைமுக வளாகத்தில் இயங்கும் மீன்பிடி சந்தை மறுநாள் மூடப்பட்டது. அதிகாரிகள் விபத்து காரணமாக ரூ.30 - 35 கோடி (3.6-4.2மில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டனர். பிரபலமான யூடியூபராக மாறிய உள்ளூர் மீனவர், நானி, துறைமுகத்தில் கேளிக்கை விருந்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நண்பர்கள் குழுவினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகத்தின் கீழ் முதலில் கைது செய்யப்பட்டார். இந்த விபத்தை நேரலையில் படம்பிடித்து யூடியூப்பில் பகிர்ந்த நானி, தீ விபத்திற்கான மூல காரணம் குறித்து தனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். [3] ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு நானி விடுவிக்கப்பட்டார். மேலும் மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி காட்சிகள் நானிக்கு எதிரான சந்தேகத்திற்கு வலு சேர்க்கவில்லை என்று காவல்துறையினர் கூறியதாக செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. [4] [5]
சமீபத்தில் நடந்த தீ விபத்து குறித்து விசாரிக்க ஆந்திர அரசு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை, மீன்வளத்துறை, காவல் துறை அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழு, சம்பவம் தொடர்பான சூழ்நிலைகளை ஆராய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தக் குழுவைத் தவிர, மாநில குற்றப்புலனாய்வு, அதிரடிப்படை மற்றும் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணை அதிகாரிகளைக் கொண்ட ஒரு பிரத்யேக குழுவை ஆந்திரப் பிரதேச மாநில அரசாங்கம் அமைத்துள்ளது. [6]
49 படகுகள் உட்பட சொத்து சேதங்களுக்கு மாநில அரசு ₹7.11 கோடி வழங்கியுள்ளது மேலும் பாதிக்கப்பட்ட படகுகளை வாழ்வாதாரமாகக் கொண்ட 400 தொழிலாளர்களுக்கு தலா ₹10,000 வீதம் வழங்கப்பட்டது. [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "'ఒక్క సిగరెట్ ముక్క 48 బోట్లను తగులబెట్టింది'...విశాఖ హార్బర్ ప్రమాదం కేసును ఛేదించామన్న పోలీసులు" (in தெலுங்கு). 2023-11-25. பார்க்கப்பட்ட நாள் 2023-11-26.
- ↑ Bureau, The Hindu (2023-11-20). "At least 25 mechanised fishing boats reduced to ashes in major fire at Vizag Fishing Harbour" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/at-least-25-mechanised-fishing-boats-reduce-to-ashes-in-major-fire-at-vizag-fishing-harbour/article67553266.ece.
- ↑ 3.0 3.1 "విశాఖ హార్బర్ అగ్నిప్రమాదం: యూట్యూబర్ 'లోకల్ బాయ్ నాని' వల్లే 43 బోట్లు తగులబడ్డాయా?". BBC News Telugu (in தெலுங்கு). 2023-11-20. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
- ↑ "AP NEWS: యూట్యూబర్ లోకల్ బాయ్ నాని హార్బర్ ప్రమాదానికి కారణo కాదని పోలీసుల నిర్ధారణ" (in தெலுங்கு). 2023-11-20. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
- ↑ "Local Boy Nani: యూట్యూబర్ లోకల్ బాయ్ నాని నిర్దోషి.. తేల్చేసిన పోలీసులు.. ?" (in தெலுங்கு). 2023-11-20. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
- ↑ Rao, V. Kamalakara (2023-11-21). "Committee to probe into fire mishap at Vizag fishing harbour" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/committee-to-probe-into-fire-mishap-at-vizag-fishing-harbour/article67555249.ece.
- ↑ Rao. "Vizag fishing harbour fire victims get compensation of ₹7.11 crore". The Hindu. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/vizag-fishing-harbour-fire-victims-get-compensation-of-711-crore/article67565792.ece. பார்த்த நாள்: 2023-11-26.