3-எக்சனால் (3-Hexanol) என்பது C6H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். இதை எக்சேன்-3-ஆல் என்று ஐயுபிஏசி முறையிலும் எத்தில் புரோபைல் கார்பினால் என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கிறார்கள். இச்சேர்மம் அன்னாசி போன்ற தாவரங்களின் சுவையிலும் நறுமணத்திலும் இயற்கையாகவே காணப்படுகிறது. சுவையைச் சேர்க்க உதவும் உணவு சேர்க்கைப் பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது.

3-எக்சனால்
3-Hexanol[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எக்சேன்-3-ஆல்
வேறு பெயர்கள்
3-எக்சனால்
எத்தில் புரோபைல் கார்பினால்
இனங்காட்டிகள்
17015-11-1 N=
ChEBI CHEBI:88653
ChEMBL ChEMBL46678 Y
ChemSpider 11678 Y
InChI
  • InChI=1S/C6H14O/c1-3-5-6(7)4-2/h6-7H,3-5H2,1-2H3 Y
    Key: ZOCHHNOQQHDWHG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H14O/c1-3-5-6(7)4-2/h6-7H,3-5H2,1-2H3
    Key: ZOCHHNOQQHDWHG-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12178
  • CCCC(CC)O
UNII I1ZTO95J84 Y
பண்புகள்
C6H14O
வாய்ப்பாட்டு எடை 102.174 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.819 கி/செ.மீ3
கொதிநிலை 135 °C (275 °F; 408 K)
16 கி/லி
கரைதிறன் டை எத்தில் ஈதர் உடன் கலக்கும்; எத்தனால், அசிட்டோன் போன்றவற்றில் கரையும்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-392.4 கிலோயூல்/மோல்−1 (நீர்மம்)
வெப்பக் கொண்மை, C 286.2 யூல்/மோல்−1•கெல்வின்−1 (நீர்மம்)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

3-எக்சைன் போன்ற நிறைவுறா எக்சேன் சேர்மங்களை ஐதரோபோரேற்றம்-ஆக்சிசனேற்றம் என்ற இரண்டு படிநிலை நீரேற்ற வினைக்கு உட்படுத்தி 3-எக்சனால் தயாரிக்கப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 3–310, 5–47, 8–106, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. Burdock, George A. (2005), Fenaroli's handbook of flavor ingredients, Boca Raton, Fla.: CRC Press, p. 786, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-3034-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-எக்சனால்&oldid=3081833" இலிருந்து மீள்விக்கப்பட்டது