4,4’-பைபீனால்
வேதிச் சேர்மம்
4,4’-பைபீனால் (4,4'-Biphenol) என்பது C12H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். பைபீனைல் சேர்மத்தின் பீனாலிக் வழிப்பொருளாக இச்சேர்மம் கருதப்படுகிறது. தோலின் மீது பட நேர்ந்தால் எரிச்சலையும், கண்களில் எரிச்சலையும், சுவாசிக்க நேர்ந்தால் சுவாசப் பாதையையும் பாதிக்கின்ற நச்சுத்தன்மையை கொண்ட சேர்மமாக 4,4’-பைபீனால் காணப்படுகிறது. ஈத்திரோசன் தன்மையும் செல்நச்சுப் பண்பும் 4,4’-பைபீனாலின் தனிப்பண்புகளாகும்[1]. சிதைவு வினைக்கு உட்படுத்தும்போது கார்பனோராக்சைடு, கார்பனீராக்சைடு போன்ற தீங்கிழைக்கும் வாயுக்களாக மாற்றமைடைகிறது. வலிமையான ஆக்சிசனேற்றிகளுடன் இதை சேமித்து வைக்கக்கூடாது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
[1,1'-பைபீனைல்]-4,4'-டையால் | |
வேறு பெயர்கள்
4,4'-டை ஐதராக்சிபைபீனைல்
4,4'-டைபீனால் | |
இனங்காட்டிகள் | |
92-88-6 | |
ChEBI | CHEBI:34367 |
ChEMBL | ChEMBL76398 |
ChemSpider | 6845 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C14297 |
| |
பண்புகள் | |
C12H10O2 | |
வாய்ப்பாட்டு எடை | 186.21 g·mol−1 |
உருகுநிலை | 284 முதல் 285 °C (543 முதல் 545 °F; 557 முதல் 558 K) |
கொதிநிலை | பதங்கமாகும் |
நீரில் கரையாது எத்தனால் மற்றும் ஈதரில் கரையும் | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | > 93.3 °C (199.9 °F; 366.4 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Murakami, Y.; Ishii, H.; Hoshina, S.; Takada, N.; Ueki, A.; Tanaka, S.; Kadoma, Y.; Ito, S. et al. (2009). "Antioxidant and Cyclooxygenase-2-inhibiting Activity of 4,4'-Biphenol, 2,2'-Biphenol and Phenol" (pdf). Anticancer Research 29 (6): 2403–2410. பப்மெட்:19528508. http://ar.iiarjournals.org/content/29/6/2403.full.pdf.