4-டைமெத்தில் அமினோபீனால்
4-டைமெத்தில் அமினோபீனால் (4-Dimethylaminophenol) என்பது C8H11NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் சேர்மமான இதில் பீனால் மற்றும் அமீன் என்ற இரண்டு செயற்பாட்டுத் தொகுதிகளும் உள்ளன.
இனங்காட்டிகள் | |
---|---|
619-60-3 | |
ChemSpider | 20816 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 22174 |
| |
UNII | X387L5559O |
பண்புகள் | |
C8H11NO | |
வாய்ப்பாட்டு எடை | 137.179 கி/மோல் |
கொதிநிலை | 165 °C (329 °F; 438 K) (0.040 bar) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுசயனைடு நச்சுக்கு ஒரு மாற்று மருந்தாக 4-டைமெத்தில் அமினோபீனால் பயன்படுத்தப்பட்டுகிறது. [1] இதைப்போலவே ஐதரசன் சல்பைடு நச்சு சிகிச்சையிலும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. [2]
மெட்டீமோகுளோபின் என்ற ஈமோகுளோபினை உற்பத்தி செய்வதன் மூலம் 4-டைமெத்தில் அமினோபீனால் செயல்பட்டுகிறது. [3]
அவசர சிகிச்சைக்கு மட்டுமே இது பொருத்தமானதாகும். சிகிச்சையை சோடியம் தயோசல்பேட்டு அல்லது கோபாலமினை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
விலங்கு மாதிரியில் தசைவழியாக கொடுக்கும்போது இது செயல்திறன் மிக்கதாக செயல்படுகிறது. [4] தசை இழைமங்களின் நசிவு நிகழ்தகவு காரணமாக தசைவழி ஊசி தவிர்க்கப்பட வேண்டும். 250 மி.கி அளவிலான நரம்பு ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Survival from a lethal blood concentration of cyanide with associated alcohol intoxication". Anaesthesia 55 (12): 1189–91. December 2000. doi:10.1046/j.1365-2044.2000.01628.x. பப்மெட்:11121929. https://archive.org/details/sim_anaesthesia_2000-12_55_12/page/1189.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Severe hydrogen sulphide poisoning treated with 4-dimethylaminophenol and hyperbaric oxygen". Diving and Hyperbaric Medicine 40 (4): 213–7. December 2010. பப்மெட்:23111938. http://archive.rubicon-foundation.org/10235. பார்த்த நாள்: 2013-06-07.
- ↑ "Effectiveness of intramuscularly administered cyanide antidotes on methemoglobin formation and survival". J Appl Toxicol 16 (6): 509–16. 1996. doi:10.1002/(SICI)1099-1263(199611)16:6<509::AID-JAT382>3.0.CO;2-V. பப்மெட்:8956097. https://zenodo.org/record/1235518.
- ↑ "Treatment of cyanide poisoning". Mil Med 156 (7): 330–9. July 1991. doi:10.1093/milmed/156.7.330. பப்மெட்:1922842. https://archive.org/details/sim_military-medicine_1991-07_156_7/page/330.
- ↑ Federation of American Scientists (1 February 1996). NATO HANDBOOK ON THE MEDICAL ASPECTS OF NBC DEFENSIVE OPERATIONS. pp. 334. https://fas.org/irp/doddir/army/fm8-9.pdf.