7-ஆம் நூற்றாண்டு

(7ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

7ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 601 தொடக்கம் கிபி 699 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.

ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 6-ஆம் நூற்றாண்டு - 7-ஆம் நூற்றாண்டு - 8-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 600கள் 610கள் 620கள் 630கள் 640கள்
650கள் 660கள் 670கள் 680கள் 690கள்
7ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு அரைக்கோளம்
7, நூற்றாண்டின் இறுதியில் கிழக்கு அரைக்கோளம்
கையால் எழுதபட்ட திருக்குரானின் ஒரு அத்தியாயம்
ஆங்கிலோ-சாக்சன்களின் முகமூடி ஒன்று (625)

632 ஆம் ஆண்டில் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் முஸ்லிம்களின் உலக ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது. அராபியக் குடாவுக்கு வெளியே இஸ்லாம் பரவியது. பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றியதை அடுத்து சசானிட் பேரரசு வீழ்ச்சி கண்டது. இந்நூற்றாண்டிலேயே சிரியா, ஆர்மீனியா, எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர்.

கொன்ஸ்டண்டீனப்போல் உலகின் மிகப்பெரியதும், செல்வச் செழிப்பும் கொண்ட நகரமாக இருந்தது. உலகெங்கும் ஜஸ்டீனியக் கொள்ளை நோய் பரவி 100 மில்லியன்களுக்கும் அதிகமானோரைக் கொன்றது. இதனால் ஐரோப்பாவின் மக்கள் தொகை 550-700 ஆம் ஆண்டளவில் 50 விழுக்காடு குறைந்தது[1].

வட இந்தியாவில் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பிளவு பட்டிருந்த பல சிறிய இராச்சியங்களை ஹர்ஷவர்தனர் ஒன்றிணைத்தார். தொண்டை மண்டலத்தில் 575 அளவில் பல்லவரின் ஆட்சியை நிறுவிய சிம்மவிஷ்ணு பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசைச் சேர்ந்த பாண்டியர்களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப் போர்கள் நடந்தன. 7ம் நூற்றாண்டின் காவிரிக் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது.

நிகழ்வுகள் தொகு

கண்டுபிடிப்புகள் தொகு

குறிப்பிடத்தக்கவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "The History of the Bubonic Plague" இம் மூலத்தில் இருந்து 2007-07-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070728234837/http://dpalm.med.uth.tmc.edu/courses/BT2003/BTstudents2003_files/Plague2003.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=7-ஆம்_நூற்றாண்டு&oldid=3540258" இருந்து மீள்விக்கப்பட்டது