ஃபவுசியா சயீத்
ஃபவுசியா சயீத் (Fouzia Saeed பிறப்பு 3 ஜூன் 1959 லாகூரில்) ஒரு பாக்கித்தானிய சமூக ஆர்வலர், பாலின நிபுணர், பயிற்சியாளர்/உதவியாளர், மேம்பாட்டு மேலாளர், நாட்டுப்புற கலாச்சார ஊக்குவிப்பாளர், தொலைக்காட்சி வர்ணனையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவருடைய முதல் நூல் பிராஸ்டிடூசன் இன் பாக்கித்தான்,டேபூ:தி ஹிடன் கல்ச்சர் ஆஃப் எ ரெட் லைட் டிஸ்ட்ரிக்ட் [1][2][3] இவரது இரண்டாவது நூல் ஒர்க்கிங் வித் சார்க்ஸ்:கவுண்டரிங் செக்சுவல் ஹராசுமெண்ட் இன் இவர் லிவ்ஸ் ஆகும்[4]
பாக்கித்தானின் சமூக இயக்கத்தின் செயல்பாட்டாளர்களிடையே சயீத் பரவ்லாக அறியப்பட்டவர்,[5][6] பெண்களின் பிரச்சினைகளில் பல தசாப்தங்களாக பணியாற்றியவர், குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை, விபச்சாரம்,[7] பொழுதுபோக்கு வியாபாரத்தில் பெண்கள், பெண்கள் இயக்கம் மற்றும் பாலியல் துன்புறுத்தல். பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த இவரது பணி 20 ஆண்டுகளுக்கும் மேலானது மற்றும் 1991 இல் பாக்கித்தானில் முதல் பெண் நெருக்கடி மையமான பெடாரியை நிறுவியது ஆகியவற்றில் குறிப்பிடத்தகுந்த பங்கினை அளித்துள்ளார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக,பாலியல் துன்புறுத்தலின் அளவைக் கட்டுப்படுத்துதல் [8] மற்றும் தாக்கம் கொத்தடிமை முறைகளை [9] ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். .
10 மார்ச் 2009 அன்று, பாக்கித்தான் மக்கள் கட்சி பிரதமர் யூசுப் ரசா கிலானி, பெண்களின் நிலை குறித்த தேசிய ஆணையத்தின் 15 உறுப்பினர்களில் ஒருவராக சயீத்தை மூன்று ஆண்டு காலத்திற்கு நியமித்தார்.[10][11] அதைத் தொடர்ந்து, இவர் மே 2010 முதல் மே 2012 வரை பாலியல் துன்புறுத்தல் சட்ட அமலாக்க கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பிப்ரவரி 2015 இல், பாக்கித்தான் முஸ்லீம் லீக் பிரதமர் நவாஸ் ஷெரீப் , சயீத்தை தேசிய நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய நிறுவனமான லோக் வீர்சாவின் நிர்வாக இயக்குநராக நியமித்தார். லோக் வீர்சாவை புத்துயிர் பெறுவதிலும், பாக்கித்தானில் செயல்திறன் கலாச்சாரத்திற்கான இடத்தை விரிவுபடுத்துவதிலும் தனது மகத்தான வெற்றிக்காக பத்திரிகை மற்றும் குடிசார் சமூகத்தின் பாராட்டுதல்களுடன் 9 பிப்ரவரி 2018 அன்று தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.[12][13][14]
2020 ஜனவரியில், பாக்கித்தான் தெஹரீக்-இ-இன்சாப் பிரதமர் இம்ரான் கான் , சயீத்தை பாக்கித்தான் தேசிய கலை சங்கத்தின் தலைமை இயக்குனராக நியமித்தார்.[15] ஜூலை 2021 இல், மத்திய பலுசிஸ்தானுக்கு இளம் கலை திறமைகளை அடையாளம் காண சென்ற ஒரு சாலைப் பயணத்தில், சயீத் சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார்.[16] ஆகஸ்ட் 2021 நடுப்பகுதியில், இவர் மீட்பு முறையில் இருந்தார்.
சயீத் தன்னைப் பற்றி கூறுகையில் "நான் என் திறன்கள், எனது போராட்டங்கள் மற்றும் எனது சாதனைகள் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதல்லாமல், என் பாலினம், எனது பொருளாதார பின்னணி, என் தேசியம் அல்லது எனது நம்பிக்கைகளால் தீர்மானிக்கப்படக் கூடாது அல்லது ஒரே மாதிரியாக வேலைகளைச் செய்யக்கூடியவராகவோ அறியப்படக் கூடாது " என்று கூறுகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசயீத் பாக்கித்தானின் லாகூரில் 3 ஜூன் 1959 இல் பிறந்தார்.இவர் பெசாவரில் தனது பள்ளிக் கல்வி மற்றும் ஆரம்பகால கல்லூரிக் கல்வியினைப் பயின்றார். பெசாவர் பல்கலைக் கழகத்தில் 1979 ஆம் ஆண்டில் மனையியல் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று பட்டம் பெற்றார்.இவருடைய கல்வி சாதனைகளின் விளைவாக, குவைத்-இ-ஆசம் வெளிநாட்டு கல்வி விருதைப் பெற்றார் மற்றும் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் 8 ஆண்டுகள் பயின்றார், அங்கு இவர் வடிவமைப்பில் எம்எஸ் மற்றும் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு அமெரிக்க வீட்டுப் பொருளாதார சங்கத்தின் எத்தேல் எல். பார்க்கர் சர்வதேச பெல்லோஷிப் விருதிலிருந்து பரணிடப்பட்டது 2009-03-08 at the வந்தவழி இயந்திரம் கூடுதல் ஆய்வுதவித் தொகையினைப் பெற்றார்.
சான்றுகள்
தொகு- ↑ Taboo Review Dawn http://www.dawn.com/weekly/books/archive/030216/books6.htm பரணிடப்பட்டது 2019-03-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Taboo interview Sikh Spectrum http://www.sikhspectrum.com/012003/fouzia.htm பரணிடப்பட்டது 9 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Puneites are a very discerning audience", Richa Bansal, The Times of India, Pune, Times City, 26 May 2007
- ↑ (Oxford University Press "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 31 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help), Karachi, 2001, 2nd edition 2011) - ↑ "Is Taboo taboo?" by Shabnam Nasir, Books and Authors, DAWN, 16 February 2003
- ↑ "Breaking Taboos" memoires by Kamil Ali Rextin in The Friday Times, 9–16 October 2009.
- ↑ Men and sexuality http://www.dailytimes.com.pk/default.asp?page=2006%5C06%5C17%5Cstory_17-6-2006_pg3_3
- ↑ AASHA http://www.aasha.org.pk
- ↑ Bonded labor conference http://www.thenews.com.pk/print1.asp?id=178522[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Official GoP list of NCSW membership http://www.ncsw.gov.pk/members.php பரணிடப்பட்டது 2009-08-21 at the வந்தவழி இயந்திரம்
- ↑ NCSW Press Announcement http://www.dailytimes.com.pk/default.asp?page=2009%5C03%5C10%5Cstory_10-3-2009_pg7_46
- ↑ "Lok Virsa: from 'shambles' to a swelling pride - Daily Times". Daily Times. 2018-02-03. https://dailytimes.com.pk/193990/lok-virsa-shambles-swelling-pride/.
- ↑ TNS1 (2018-02-07). "Dr Fouzia Saeed deserves another term for her miraculous performance". TNS World இம் மூலத்தில் இருந்து 2019-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190328062626/https://tns.world/dr-fouzia-saeed-deserves-another-term-for-her-miraculous-performance/.
- ↑ https://tribune.com.pk/story/1631082/1-dr-fouzia-saeeds-tenure-lok-virsa-concludes/
- ↑ "Fouzia Saeed appointed PNCA chief". 2021-01-09. https://www.dawn.com/news/1527193.
- ↑ "PNCA chief Fouzia Saeed critically injured in car accident". 2021-07-05. https://tribune.com.pk/story/2308887/pnca-chief-fouzia-saeed-critically-injured-in-car-accident.