அகமது ஷா மசூத்

அகமது ஷா மசூத் (Ahmad Shah Massoud, 2 செப்டம்பர் 1953 – 9 செப்டம்பர் 2001) ஆப்கானித்தான், பாஞ்சிர் மாகாண அரசியல்வாதியும், வடக்குக் கூட்டணிப் படைத்தலைவரும் ஆவார்.[1] இவர் 1979 - 1989களில் நடைபெற்ற ஆப்கான் சோவியத் போரின் போது, பாஞ்ச்சிர் பள்ளத்தாக்கிலிருந்து கொரில்லாத் தாக்குதல்கள் மூலம் சோவியத் ஒன்றியப் படைகளை விரட்டியடித்தவர்.

அகமது ஷா மசூத்
احمد شاه مسعود
பாதுகாப்பு அமைச்சர், ஆப்கானித்தான்
பதவியில்
சூன் 1992 – 9 செப்டம்பர் 2001
குடியரசுத் தலைவர்புர்கானுத்தீன் ரப்பானி
முன்னையவர்முகமது அஸ்லாம் வத்தாஞ்சார்
பின்னவர்முகமது பாகிம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1953-09-02)செப்டம்பர் 2, 1953
பாசாராக், பாஞ்ச்சிர் மாகாணம், ஆப்கானித்தான்
இறப்புசெப்டம்பர் 9, 2001(2001-09-09) (அகவை 48)
தகார் மாகாணம், ஆப்கானித்தான்
அரசியல் கட்சிஜாமியத் இஸ்லாமி
பிள்ளைகள்அகமது மசூது உள்ளிட்ட 6 பேர்
விருதுகள்ஆப்கானித்தானின் தேசிய நாயகன், பாஞ்ச்சிர் சிங்கம், ஆப்கானித்தானின் நாய்கன்
புனைப்பெயர்பாஞ்ச்சிரின் சிங்கம்
Military service
கிளை/சேவை ஜாமியத் இஸ்லாமி (ஆப்கான் முஜாஹிதீன்களில் ஒரு பிரிவு
ஆப்கான் இராணுவம்
வடக்குக் கூட்டணி
சேவை ஆண்டுகள்1975–2001
தரம்தலைமைப் படைத் தலைவர்
கட்டளைசோவியத்-ஆப்கான் போரில் ஜாமியத் இஸ்லாமி முஜாஹிதீன் படைகளின் தலைமைப் படைத்தலைவர்
ஆப்கான் விடுதலைக்கான ஐக்கிய இசுலாமிய முன்னணி படைகளின் தலைவர்
போர்கள்/யுத்தங்கள்1975 பாஞ்ச்சிர் பள்ளத்தாக்குச் சண்டை, ஆப்கான் உள்நாட்டுப் போரில் (1996–2001) கொல்லப்படல்

தாலிபான்களுக்கு எதிரான அகமது ஷா மசூத், 1992-ஆம் ஆண்டில் ஆப்கானை ஆண்ட அரசில் பாதுகாப்பு அமைச்சராக சூன் 1992 முதல் 9 செப்டம்பர் 2001 வரை இருந்தார்.[2] 9 செப்டம்பர் 2001 அன்று அகமது ஷா மசூத் தாலிபான்கள் அனுப்பிய ஊடகவியவியலாளர்கள் வடிவத்தில் வந்த உளவாளிகளால் கொல்லப்பட்டார்.

அகமது ஷா மசூத் இருந்த போதும், இறந்த போதும், இதுவரை அவரது சொந்த மாகாணமான பாஞ்ச்சிர் மாகாணத்தை தாலிபான்களால் கைப்பற்ற முடியவில்லை. எனவே பாஞ்ச்சிரி மாகாண மக்கள் அகமது ஷா மசூத்தை பாஞ்ச்சிரி சிங்கம் என்றே அழைத்தனர். மேலும் இவரை ஆப்கானித்தானின் நாய்கன் என மக்கள் கொண்டாடினர்.[3]

அகமது ஷா மசூத் வடக்கு ஆப்கானித்தானின் வடக்கில், தஜிகிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த பாஞ்ச்சிர் மாகாணத்தின் தாஜிக் இனக் குழுவைச் சேர்ந்த சன்னி இசுலாமியர் ஆவார்.

இவரது மகன் அகமது மசூத் ஆகஸ்டு, 2021 முதல் ஆப்கானை கைப்பற்றிய தாலிபான்களுக்கு எதிரான தாக்குதல்களை அறிவித்துள்ளார்.[4]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அகமது மசூது
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_ஷா_மசூத்&oldid=3926427" இலிருந்து மீள்விக்கப்பட்டது