பாஞ்ச்சிர் சமவெளி
பாஞ்ச்சிர் சமவெளி அல்லது பாஞ்ச்சிர் பள்ளத்தாக்கு (Panjshir Valley (also spelled Panjsheer or Panjsher) ஆப்கானித்தான் நாட்டின் வடக்கில் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்த பாஞ்ச்சிர் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது காபூல் நகரத்திற்கு வடக்கே 150 கிலோ மீட்டர் தொலைவில் இந்து குஷ் மலைத்டொடருக்கு அருகில் உள்ளது.[1][2] பஞ்ச்சிர் ஆறு இச்சமவெளியில் பாய்கிறது. இச்சமவெளியில் தஜிக் மக்கள் உள்ளிட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.[3]இச்சமவெளி முன்னர் பர்வான் மாகாணத்தில் இருந்தது. 2004-ஆம் ஆண்டில் பர்வான் மாகாணத்தின் பாஞ்ச்சிர் சமவெளியைக் கொண்டு பாஞ்ச்சிர் மாகாணம் நிறுவப்பட்டது.[4]இப்பள்ளத்தாகில் பஞ்ச்சிர் ஆறு உற்பத்தியாகிறது. இச்சமவெளியில் தாஜிக் மொழி மற்றும் பாரசீக மொழிகள் பேசப்படுகிறது. மேலும் இச்சமவெளியில் சுன்னி இசுலாமிய பழங்குடி மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர்.
1980-1989களில் நடைபெற்ற ஆப்கான் சோவியத் போரின் போது பஞ்ச்சிர் சமவெளியில் அகமது ஷா மசூத்[5] தலைமையிலான ஆப்கானியப் போராளிகள், சோவியத் படைகளை தோற்கடித்தது. மீண்டும் இச்சமவெளியில் அகமது ஷா மசூத் தலைமையிலான வடக்குக் கூட்டணி படைகளுக்கும், தாலிபான்களுக்கு இடையே, 1996-2001களில் நடைபெற்ற ஆப்கான் உள்நாட்டுப் போரில் இச்சமவெளியை விட்டு தாலிபான்கள் துரத்தியடிகக்ப்பட்டனர்.[6]இதுவரை தாலிபான்களால் கைப்பற்ற முடியாத பகுதியாக பாஞ்ச்சிர் சமவெளி இருந்தது.[7][8]
பொருளாதாரம் மற்றும் இயற்கை வளங்கள்
தொகுபாஞ்ச்சிர் சமவெளியில் பச்சை மரகதக் கற்கள் கிடைக்கும் பூமியாகும். வரலாற்று ஆசிரியர் மூத்த பிளினி பஞ்ச்சிர் சமவெளியில் கிடைக்கும் நவரத்தின கற்களைக் குறித்து தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[9]
மத்திய காலத்தில் ஆப்கானித்தானை ஆண்ட சபாவித்து பேரரசு மற்றும் சாமனித்து பேரரசு காலத்தில் பஞ்ச்சிர் சமவெளியின் சுரங்கத்தில் கிடைக்கும் வெள்ளி உலோகத்திற்கு பெயர் பெற்றது. [10] 1985-ஆம் ஆண்டில் இச்சமவெளியின் கனிமச் சுரங்கத்தில் 190 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.[9]இச்சமவெளியில் பல நீர்த்தேக்கங்கள் நிறுவி, மின்சார உற்பத்திக்கு பல புனல் மின்நிலையங்கள் அமைத்துள்ளனர். இச்சமவெளியில் செல்லும் 100 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை இந்து குஷ் மலைத்தொடரில் 3,848 மீட்டர் உயரத்தில் அமைந்த காவாக் கணவாயுடன் இணைக்கிறது. இக்கணவாய் ஆப்கானித்தானின் கிழக்கில் உள்ள படாக்சானுடன் இணைக்கிறது. இக்கணவாய் வழியாக பேரரசர் அலெக்சாந்தர் மற்றும் தைமூர் படையெடுத்து ஆப்கானை கைப்பற்றினர். ஏப்ரல் 2008-இல் இச்சமவெளியில் மின் உற்பத்திக்காக 10 காற்றாலை பண்ணைகள் நிறுவப்பட்டது.[11]
புகழ் பெற்றவர்கள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ பாஞ்சிர் பள்ளத்தாக்கின் வரலாறு
- ↑ "Afghanistan gets rid of heavy arms in Panjshir". Xinhua. 2005-03-06 இம் மூலத்தில் இருந்து 2006-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061016052847/http://news.xinhuanet.com/english/2005-03/06/content_2657769.htm.
- ↑ "Afghanistan". Library of Congress Country Studies. Library of Congress. 1997. பார்க்கப்பட்ட நாள் 2006-11-19.
- ↑ American Forces Press Service (5 July 2006). "New Afghan Road Offers Gateway to Optimism". archive.defense.gov (in ஆங்கிலம்). U.S. Department of Defense. Archived from the original on 30 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 16 August 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Ahmad Shah Massoud
- ↑ Junger, Sebastian. "Massoud's Last Conquest". Vanity Fair.
- ↑ "Foreign kayakers surprise Afghans in the Panjshir Valley". The National. August 2, 2016.
- ↑ ஆப்கன் தாலிபான்களுக்கு எதிரான பாஞ்ச்ச்ர் பள்ளத்தாக்கு
- ↑ 9.0 9.1 Bowersox, Gary; Lawrence W. Snee; Eugene E. Foord; Robert R. Seal II (1991). "Emeralds of the Panjshir Valley, Afghanistan". Gems and Gemology (Gemological Society of America) Spring: 26–39.
- ↑ "Pandjhir". Encyclopaedia of Islam (CD-ROM v. 1.0). (1999). Leiden, The Netherlands: Koninklijke Brill NV.
- ↑ Power to the People: Getting 'off the grid'. EcoBob. 2008-07-16. http://www.ecobob.co.nz/EcoArticle/1776/0/Power-to-the-People--Getting-off-the-grid.aspx. பார்த்த நாள்: 2010-01-10.
வெளி இணைப்புகள்
தொகு- Where the Sun Rises: Afghanistan (video Sept. 1, 2017)
- Photographs from the Panjshir Province