அகில இந்திய ஆரோக்கியம் மற்றும் பொதுச் சுகாதாரம் நிறுவனம்

அகில இந்திய ஆரோக்கியம் மற்றும் பொதுச் சுகாதாரம் நிறுவனம் (All India Institute of Hygiene and Public Health), கொல்கத்தாவில் அமைந்துள்ள பொதுச் சுகாதாரம் மற்றும் தொடர்புடைய அறிவியல் ஆராய்ச்சி பயிற்சிக்கான முன்னோடி நிறுவனம் ஆகும். இது 30 டிசம்பர் 1932இல் ராக்பெல்லர் அறக்கட்டளையின் உதவியுடன் நிறுவப்பட்டது. இது புது தில்லி இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்சுகாதார சேவைகள் இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 2003இல் நிறுவப்பட்டது. சிங்கூரில் கிராமப்புற பயிற்சி மையம் மற்றும் செட்லாவில் நகர்ப்புற பயிற்சி மையமும் உள்ளது.[1][2]

அகில இந்திய ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதார நிறுவனம்
சுருக்கம்AIIH&PH
உருவாக்கம்30 திசம்பர் 1932
(91 ஆண்டுகள் முன்னர்)
 (1932-12-30)
வகைஅரசு நிறுவனம்
சட்ட நிலைசெயலில்
நோக்கம்பொது சுகாதாரம்
தலைமையகம்கொல்கத்தா, மேற்கு வங்காளம்
தலைமையகம்
ஆள்கூறுகள்22°34′34″N 88°21′31″E / 22.5761885°N 88.3586926°E / 22.5761885; 88.3586926
சேவை பகுதி
இந்தியா
ஆட்சி மொழி
ஆங்கிலம்
இயக்குநர்
மருத்துவர் யு. கே. சட்டோபாத்தியா
தாய் அமைப்பு
[[ சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)|சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்]] இந்திய அரசு
சார்புகள்மேற்கு வங்க சுகாதரா அறிவியல் பல்கலைக்கழகம்
வலைத்தளம்www.aiihph.gov.in

1943இல் இந்நிறுவனம் ராக்பெல்லர் அறக்கட்டளையுடன் இணைந்து துளை துரப்பணத்துளை கழிவறையினை உருவாக்கியது.[3][4]

வரலாறு

தொகு

ராக்பெல்லர் அறக்கட்டளையின் உதவியுடன் நிறுவப்பட்ட இந்த பொதுச் சுகாதார நிறுவனத்தினை 30 டிசம்பர் 1932இல் வங்காள ஆளுநர் சர் ஜான் ஆண்டர்சன் தொடங்கிவைத்தார்.[5] கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரியாகச் செயல்பட்டது. இந்த கல்லூரி தொடங்கப்பட்டதிலிருந்து, கல்கத்தா வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்தின் ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுகிறது. 1953ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பன்னாட்டுப் பயிற்சி மையமாக அங்கீகாரம் பெற்றது. இந்த நிறுவனம் 1944-1945இல் இந்தியாவில் முதல் கிராம சுகாதார கணக்கெடுப்பை மேற்கொண்டது. இதில் மேற்கு வங்கத்தில் 7000 உறுப்பினர்களைக் கொண்ட கிட்டத்தட்ட 1200 குடும்பங்களின் பொதுச் சுகாதார ஆய்வு செய்யப்பட்டது.[6] சுதந்திரத்திற்குப் பிறகு, 1950 இல் விரிவாக்கத் திட்டங்கள் வரையப்பட்டன. சுமார் 90 இலட்சம் செலவில், நிறுவனத்தில் குழந்தை மற்றும் மகப்பேறு சுகாதாரப் பிரிவை உருவாக்கப்பட்ட செலவினை மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் சமமாகப் பகிரப்பட்டது.[7]

1995 ஆம் ஆண்டில், தர்பார் மகிளா சமன்வயா குழுவின் அகில இந்தியச் சுகாதாரம் மற்றும் பொது நலம் நிறுவன பொதுச் சுகாதார விஞ்ஞானி மருத்துவர் சுமாராஜித் ஜனா 65000 பாலியல் பணியாளர்களிடம் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.[8] 2004ஆம் ஆண்டில், அகில இந்தியச் சுகாதாரம் மற்றும் பொது நலம் நிறுவனம் புதிதாக உருவாக்கப்பட்ட மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

துறைகள்

தொகு

பொதுச் சுகாதார மேலாண்மையில் முதுகலை பட்டயப்படிப்பை வழங்கும் இந்தியாவில் உள்ள ஒன்பது நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.[9] இதனுடைய முதன்மை வளாகம் சித்தரஞ்சன் வளாகத்தில் உள்ளது. 2011 இல் கொல்கத்தாவின் உப்பு ஏரி நகரில் இதன் இரண்டாவது வளாகமும் செயல்படத் தொடங்கியது.

குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள்

தொகு

இதையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. About us பரணிடப்பட்டது 2012-07-30 at the வந்தவழி இயந்திரம்
  2. "All India Institute of Hygiene and Public Health". DGFASLI, Mumbai, Ministry of Labour,Government of India. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 February 2012.
  3. Bindeshwar Pathak (1999). Road to Freedom: A Sociological Study on the Abolition of Scavenging in India. Motilal Banarsidass. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120812581.
  4. B. N. Srivastava (1997). Manual Scavenging in India: A Disgrace to the Country. Concept Publishing Company. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170226390.
  5. "India Opens Health Institute Given by Rockefeller Interests". The New York Times, Page 1. 31 December 1932. 
  6. "First Village Health Survey In India". 3 February 1948. p. 7. https://news.google.com/newspapers?id=4sU-AAAAIBAJ&pg=5810,2902369. 
  7. "90-lakh Plan For Training In Maternity Child Health". Indian Express. 3 May 1950. https://news.google.com/newspapers?id=lrw-AAAAIBAJ&pg=4591,3627737&dq=all+india+institute+of+hygiene+%26+public+health&hl=en. 
  8. "The new rhythms of Sonagachi: As the city's sex workers collective turns 20...". மின்ட். http://www.livemint.com/2012/02/24202846/The-new-rhythms-of-Sonagachi.html. 
  9. "Post-Graduate Diploma In Public Health Management". Ministry of Health & Family Welfare. Archived from the original on 2012-03-07.

வெளி இணைப்புகள்

தொகு