அக்சயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
கோயமுத்தூரில் உள்ள கல்லூரி
அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Akshaya College of Engineering and Technology)
- தமிழ்நாட்டின், கோயமுத்தூர், கிணத்துக்கடவில் உள்ள ஒரு தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒப்புதல் அளித்து, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1]
அக்ஷயா பொறியி தொழில் நுட்பக்கல்லூரி | |
குறிக்கோளுரை | Excellence in Engineering Education |
---|---|
வகை | சுயநிதி |
உருவாக்கம் | 2009 |
தலைவர் | டி. சுப்பிரமணியன் |
முதல்வர் | முனைவர் ஜே. ஜெயா |
பணிப்பாளர் | முனைவர் கே. தணுஷ்கோடி |
அமைவிடம் | கோயம்புத்தூர், கிணத்துக்கடவு , , 10°48′36″N 77°0′40″E / 10.81000°N 77.01111°E |
சுருக்கப் பெயர் | ACET |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | www.acetcbe.edu.in/ |
வரலாறு
தொகுஅக்சயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (ACET) 2009 ஆம் ஆண்டில் அக்சயா அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. [2]
வழங்கப்படும் படிப்புகள்
தொகுஇளநிலைப் படிப்புகள்
தொகு- பி.இ. - குடிசார் பொறியியல்
- பி.இ. - மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
- பி.இ. - இயந்திரப் பொறியியல்
- பி.இ. - மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
- பி.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. - எந்திர மின்னணுவியல்
முதுநிலைப் படிப்புகள்
தொகு- எம்.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எம்.இ. - பேரளவு ஒருங்கிணைச் சுற்று வடிவமைப்பு
- எம்.இ. - கட்டமைப்புப் பொறியியல்
- எம்.இ. - CAD / CAM
நூலகம்
தொகுநூலகத் தொகுப்புகள்:
புத்தகங்கள் | மொத்த தொகுதியின் எண்ணிக்கை | 25300 |
தலைப்புகளின் மொத்த எண்ணிக்கை | 5457 | |
பத்திரிக்கைகள் | தேசிய | 75 |
சர்வதேச | 42 | |
இதழ்கள் | 15 | |
செய்தித்தாள்கள் | 12 | |
குறுவட்டு, டிவிடி | 1080 | |
பழைய இதழ் தொகுதி | 337 | |
திட்ட அறிக்கைகள் | 273 | |
NPTEL | 342 (வலை படிப்புகள்) | |
329 (கானொளி படிப்புகள்) |
வசதிகள்
தொகுவிடுதிகள்
தொகுமாணவர் விடுதி
தொகுமாணவர் விடுதியானது மூன்று தளங்களில் 96 அறைகளைக் கொண்டு, சுமார் 350 மாணவர்கள் தங்கக்கூடியதாக உள்ளது.
போக்குவரத்து
தொகுகல்லூரிக்கு வந்து செல்ல பேருந்து வசதிகளானது, கோயம்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, நெம்மரா, கலியபுரம், தாசர்பட்டி, மேட்டுப்பாளையம், ஆலந்துறை, தளி, கேரளம், வடவள்ளி, வெள்ளலூர், சுண்டக்காமுத்தூர், வாழவாடி, காந்திபுரம், அவிநாசி, பார்லே, எரிசினபட்டி, தேவனூர்புதூர், இளையம்புதூர், கணுவாய், கோவிந்தபுரம், மடத்துக்குளம், வாரப்பட்டி, பிரையாரி போன்ற பகுதிகளிலிருந்து உள்ளன.
குறிப்புகள்
தொகு- ↑ "Akshaya College of Engineering & Technology, Coimbatore - contact address, phone details of Engineering College / Institute of Technology Tamilnadu". Collegesintamilnadu.com. Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
- ↑ "Akshaya College of Engineering & Technology". Acetcbe.edu.in. Archived from the original on 21 July 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
- ↑ "Akshaya College of Engineering & Technology". Acetcbe.edu.in. Archived from the original on 2012-01-23. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.