அசித் சாண்டிலா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அசித் சாண்டிலா (Ajit Chandila, பிறப்பு 5 திசம்பர் 1983) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பரீதாபாத் நகரைச் சேர்ந்த புறச்சுழல் பந்து வீச்சாளர் ஆவார்.[1] முன்பு வட மண்டல துடுப்பாட்ட அணிக்கு விளையாடிய இவர் தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடுகிறார்.[2]

அஜித் சாண்டிலா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஜித் சாண்டிலா
பிறப்பு5 திசம்பர் 1983 (1983-12-05) (அகவை 41)
பரிதாபாது, இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை புறத்திருப்பம்
பங்குஅனைத்து துறையாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010–இன்றளவில்அரியானா
2012–இன்றளவில்ராஜஸ்தான் ராயல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது பஅது இ20
ஆட்டங்கள் 2 6 13
ஓட்டங்கள் 23 26 121
மட்டையாட்ட சராசரி 23.00 6.50 20.16
100கள்/50கள் 0/0 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 12 9 57
வீசிய பந்துகள் 162 247 197
வீழ்த்தல்கள் 3 6 11
பந்துவீச்சு சராசரி 22.66 32.83 18.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/15 3/25 4/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/– 1/– 5/-
மூலம்: கிரிக்கின்ஃபோ, 14 மே 2012

இந்தியன் பிரீமியர் லீக்கில்

தொகு

2011இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2012இல் ஏப்ரல் 23 அன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது முதல் ஆட்டத்தில் பங்கேற்றார். இவருக்கு முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் நரேந்திர ஹிர்வானி பயிற்சியாளராக இருந்துள்ளார். தனது முதல் ஐபிஎல் பருவத்திலேயே மூன்று அடுத்தடுத்த இலக்குகளை [ஆட்ரிக்) எடுத்தார். ஐபிஎல்லின் வரலாற்றில் ஆட்ரிக் எடுத்த ஏழு பந்து வீச்சாளர்களில் ஒருவரானார்[3].

முன்குறித்து நிகழ்த்துதல் குற்றச்சாட்டும் கைதும்

தொகு

மே 16, 2013 அன்று ஐபிஎல் ஆறாம் பருவத்து விளையாட்டில் குறிப்பிட்ட பந்து பரிமாற்றத்தில் முன்கூட்டியே தீர்மானித்தபடி பந்து வீசியதாக குற்றம் சாட்டப்பட்டு இவரையும் இவரது அணித்தோழர்களான சிறிசாந்த் மற்றும் அங்கீத் சவானையும் தில்லி காவல்துறை கைது செய்தது.[4][5]. இவர்கள் மூன்று பேரின் மீதும் இந்தியக் குற்றவியல் சட்டம் 420 மற்றும் 120(பி) கீழ் மும்பை மரைன் டிரைவ் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.[6] சாண்டிலா மே 5, 2013 அன்று புனே வாரியர்சு இந்தியா எதிரான தனது ஆட்டத்தில் முன்குறித்து நிகழ்த்துவதற்காக 20 இலட்சம் (US$25,000) பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.[7] கைதானபிறகு இவர் பணியாற்றும் ஏர் இந்தியா நிறுவனம் இவரை பணியிடைநீக்கம் செய்துள்ளது.[8]

மேற்சான்றுகள்

தொகு
  1. "Hirwani's tips helped me: Chandila". Rediff.com. 13 May 2010. http://www.rediff.com/cricket/report/ipl-5-indian-premier-league-hirwani-tips-helped-ajit-chandila/20120513.htm. பார்த்த நாள்: 14 May 2012. 
  2. "I asked Chandila to restrict Batsmen:Hirwani". Times of India. http://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl-2012/news/I-asked-Ajit-Chandila-to-restrict-batsmen-says-Hirwani/articleshow/13126746.cms. பார்த்த நாள்: 14 May 2012. 
  3. "Ajit Chandila's hat trick sinks listless Pune". Archived from the original on 2012-07-24. பார்க்கப்பட்ட நாள் 2013-05-18.
  4. "Police detain three Rajasthan Royals players". Wisden India. May 16, 2013 இம் மூலத்தில் இருந்து 2013-06-15 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130615100315/http://www.wisdenindia.com/cricket-article/police-detain-rajasthan-royals-players/62510. பார்த்த நாள்: 2013-05-16. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-16. பார்க்கப்பட்ட நாள் 2013-05-18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-16. பார்க்கப்பட்ட நாள் 2013-05-18.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  6. Ajit Chandilia Arrested for Spot Fixing in IPL 2013
  7. "Ajit Chandila was paid Rs 40 lakh for fixing". Business Standard. 2013-05-16. http://www.business-standard.com/article/current-affairs/ajit-chandila-was-paid-rs-20-lakh-for-fixing-113051600520_1.html. பார்த்த நாள்: 2013-05-16. 
  8. "Air India suspends Ankeet Chavan, Ajit Chandila". The Times of India. 2016-05-16. http://timesofindia.indiatimes.com/india/Air-India-suspends-Ankeet-Chavan-Ajit-Chandila/articleshow/20087953.cms. பார்த்த நாள்: 2013-05-16. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசித்_சாண்டிலா&oldid=3791852" இலிருந்து மீள்விக்கப்பட்டது