அசுமத்துல்லா ஒமர்சாய்

அசுமத்துல்லா ஒமர்சாய் (Azmatullah Omarzai, பஷ்தூ மொழி: عظمت الله عمرزی; பிறப்பு: 24 மார்ச் 2000) ஓர் ஆப்கானியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் கிழக்கு ஆப்கானித்தானின் குனர் மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் 2021 சனவரியில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியில் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் சேர்க்கப்பட்டார்.[1]

அசுமத்துல்லா ஒமர்சாய்
Azmatullah Omarzai
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு24 மார்ச்சு 2000 (2000-03-24) (அகவை 24)
நங்கர்கார், ஆப்கானித்தான்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு-நடு வீச்சு
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 49)21 சனவரி 2021 எ. அயர்லாந்து
கடைசி ஒநாப30 அக்டோபர் 2023 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்9
இ20ப அறிமுகம் (தொப்பி 44)3 மார்ச் 2022 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப14 சூலை 2023 எ. வங்காளதேசம்
இ20ப சட்டை எண்9
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017–இன்றுமிசு ஐநாக் பிராந்திய அணி (squad no. 99)
2023பெசாவர் சல்மி அணி (squad no. 100)
2023ராங்பூர் ரைடர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இ20ப
ஆட்டங்கள் 19 24
ஓட்டங்கள் 340 185
மட்டையாட்ட சராசரி 34.00 16.81
100கள்/50கள் 0/3 0/0
அதியுயர் ஓட்டம் 73* 33
வீசிய பந்துகள் 592 315
வீழ்த்தல்கள் 11 11
பந்துவீச்சு சராசரி 50.27 41.36
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/56 3/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 8/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 310 அக்டோபர் 2023

பன்னாட்டுத் துடுப்பாட்டம் தொகு

2017 திசம்பரில், 19-வயதிற்குட்பட்டோருக்கான 2018 உலகக்கிண்ணத் தொடரில் ஆப்கானித்தான் அணியில் சேர்க்கப்பட்டார்.[2] 2018 திசபரில், 23-வயதிற்குட்பட்டோருக்கான 2018 ஏசிசி வளர்ந்துவரும் அணிகளின் ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடினார்.[3] 2019 நவம்பரில், வங்காளதேசத்தில் நடைபெற்ற 2019 ஏசிசி வளர்ந்துவரும் அணிகளின் ஆசியக் கிண்ணத்தில் ஆப்கானித்தான் அணியில் விளையாடினார்.[4] 2020 பெப்ரவரியில், ஆப்கானித்தானின் பன்னாட்டு இருபது20 அணியில் இணைந்து அயர்லாந்துக்கெரிதான தொடரில் விளையாடினார்.[5] 2021 சனவரியில், அயர்லாந்துக்கு எதிரான பன்னாட்டு ஒருநாள் தொடரில் விளையாடினார்.[6][7]

மேற்கோள்கள் தொகு

  1. "Azmatullah Omarzai". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 August 2017.
  2. "Mujeeb Zadran in Afghanistan squad for Under-19 World Cup". ESPN Cricinfo. 7 December 2017. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  3. "Afghanistan Under-23s Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
  4. "Afghanistan Emerging travels to Bangladesh for Asia Cup". Afghanistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 12 November 2019.
  5. "Afghanistan squad announced for series against Ireland". Afghanistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 6 February 2020.
  6. "Afghanistan announce 16-member squad for ODI series against Ireland". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
  7. "1st ODI, Abu Dhabi, Jan 21 2021, Ireland tour of United Arab Emirates". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 January 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுமத்துல்லா_ஒமர்சாய்&oldid=3818792" இலிருந்து மீள்விக்கப்பட்டது