அசென்டாசு
அசென்டாசு நிறுவனம் (அ) பன்னாட்டுத் தொழில்நுட்பப் பூங்கா, சென்னை (Ascendas அல்லது ITPC-International Tech Park, Chennai) என்பது சென்னை, தரமணியில் ராசீவ் காந்தி சாலையில் அமைந்துள்ளது. தென்சென்னை பகுதியில் உலகளாவிய தொழில் நுட்பத்துடன் 25.09.2007 அன்று இது துவக்கி வைக்கப்பட்டது. இதன் அப்போதைய மதிப்பு 200 கோடி இந்திய ரூபாய்களாகும்.[1]
பன்னாட்டுத் தொழில்நுட்பப் பூங்கா | |
---|---|
அசெண்டாசு தொழில்நுட்பப் பூங்கா | |
பொதுவான தகவல்கள் | |
வகை | தகவற் தொழிநுட்பப் பூங்கா |
இடம் | தரமணி, சென்னை, இந்தியா |
முகவரி | இராஜீவ்காந்தி சாலை, தரமணி, சென்னை, தமிழ்நாடு 600 113, இந்தியா |
உரிமையாளர் | அசெண்டாசு |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 2,012,000 sq ft (186,900 m2) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
மேம்பாட்டாளர் | TIDCO and Ascendas |
இதன் உள்ளே உலகத் தரத்தில் பொருள் விற்பனை மையங்கள், வெளிநாட்டு வங்கிகள், 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள், மருந்தகங்கள், உணவு விடுதிகள், பலதரப்பட்ட கேளிக்கை விடுதிகள் உள்ளன. வாகன நிறுத்தும் இடம் தனிக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது 2013 ஆம் ஆண்டிற்கான சிறப்பாளர் விருதினைப் பெற்றுள்ளது.
அசெண்டாசு நிறுவனத்திற்கு சென்னை விமான நிலையத்திலிருந்து 50 நிமிட பயணத்திலும், திருவான்மியூர் பறக்கும் மின் தொடர் வண்டி நிலையத்திலிருந்து 5 நிமிட நடைப்பயணத்திலும் சென்றடையலாம். இதன் அண்மையில், உயிரித் தொழில் நுட்பப் பூங்கா, டைடெல் பூங்கா என பலவும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-11-14. பார்க்கப்பட்ட நாள் 2014-01-31.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.asendas.com பரணிடப்பட்டது 2011-01-28 at the வந்தவழி இயந்திரம்
- http://www.tidco.com/ascendas.html பரணிடப்பட்டது 2009-05-01 at the வந்தவழி இயந்திரம்
- http://www.xklsv.org/viewwiki.php?title=ITPC பரணிடப்பட்டது 2020-08-06 at the வந்தவழி இயந்திரம்
- http://www.business-standard.com/india/storypage.php?autono=222216