அசோக் டிண்டா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அசோக் பீம்சந்திரா டிண்டா (Ashok Bhimchandra Dinda (பிறப்பு :25 மார்ச்,1984) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2005 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2008 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2010 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 115 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1083 ஓட்டங்களையும் , 98 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 327 ஓட்டங்களையும் ,13 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 21 ஓட்டங்களையும் 144 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 109 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

அசோக் டிண்டா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அசோக் பீம்சந்திரா டிண்டா
பிறப்பு25 மார்ச்சு 1984 (1984-03-25) (அகவை 40)
மேதினிபூர், மேற்குவங்காளம். இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்28 மே 2010 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாப11 சனவரி 2013 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்2
இ20ப அறிமுகம் (தொப்பி 24)9 டிசம்பர் 2009 எ. இலங்கை
கடைசி இ20ப27 டிசம்பர் 2012 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2005–2019வங்காளத் துடுப்பாட்ட வாரியம்
2008–2010கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2011டெல்லி டேர்டெவில்ஸ்
2012-2013புனே வாரியர்ஸ் (squad no. 2)
2014-2015பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (squad no. 2)
2016–2017ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் (squad no. 11)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது ப இ20 முதது பஅது
ஆட்டங்கள் 13 9 115 92
ஓட்டங்கள் 21 22 1083 306
மட்டையாட்ட சராசரி 4.20 19.00 10.02 8.50
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 16 19 55* 33
வீசிய பந்துகள் 594 180 22,866 4686
வீழ்த்தல்கள் 12 17 417 141
பந்துவீச்சு சராசரி 51 14.41 28.35 28.47
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 26 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a 5 n/a
சிறந்த பந்துவீச்சு 2/44 4/19 0/811 1/782
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
01/– 1/– 41/– 22/–
மூலம்: ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ, 30 மார்ச் 2019

உள்ளூர் போட்டிகள்

தொகு

முதல் தரத் துடுப்பாட்டம்

தொகு

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரஞ்சிக் கோப்பையில் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.[1][2]

இவர் 2005 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.நவம்பர் 23, புனே துடுப்பாட்ட அரங்கத்தில் மகாராட்டிர துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் வங்காளத் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் கொல்கத்தா துடுப்பாட்ட அரங்கத்தில் பஞ்சாப் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் வங்காளத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

பட்டியல் அ

தொகு

2008 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். அக்டோபர் 25 கட்டாக் துடுப்பாட்ட அரங்கத்தில் இந்தியா புளூ துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இந்தியா கிரீன் துடுப்பாட்ட அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் அக்டோபர் 14 ஜெய்பூர் துடுப்பாட்ட அரங்கத்தில் ரயில்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் வங்காளத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

இருபது20

தொகு

2018 ஆம் ஆண்டில் இவர் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். ஏப்ரல் 18 , பெங்களூர் துடுப்பாட்ட அரங்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் மார்ச் 12, இந்தூர் துடுப்பாட்ட அரங்கத்தில் குஜராத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் வங்காளத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்

தொகு

2010 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். மே 28, புலவாயோ துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். 2013 ஆம் ஆண்டில் ராஜ்கோட் துடுப்பாட்ட அரங்கத்தில் சனவரி 11 அன்று இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.

2009 ஆம் ஆண்டில் இவர் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். டிசம்பர் 9, நாக்பூர் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற பன்னாட்டு இருபது 20 பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். 2012 ஆம் ஆண்டில் அகமதாபாத் துடுப்பாட்ட அரங்கத்தில் டிசம்பர் 28 அன்று பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.[3]

குறிப்புகள்

தொகு
  1. "Ranji Trophy, 2017/18: Bengal batting and bowling averages". ESPN Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/averages/batting_bowling_by_team.html?id=12014;team=1623;type=tournament. பார்த்த நாள்: 3 April 2018. 
  2. "Ranji Trophy, 2018/19 - Bengal: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2019.
  3. "Ashok Dinda". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_டிண்டா&oldid=3992360" இலிருந்து மீள்விக்கப்பட்டது