அசோக் பட்டாச்சார்யா
அசோக் பட்டாச்சார்யா (Ashok Bhattacharya, பிறப்பு: 1 ஏப்ரல்1949) ஓர் இந்திய அரசியல்வாதியும் சிலிகுரி மாநகராட்சியின் முன்னாள் நகர தந்தையும் ஆவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினரான இவர் மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதியில் கட்சியின் முக்கியத் தலைவர் ஆவார். இவர் தொடர்ந்து மூன்று முறை (1996-2011) மேற்கு வங்காள அரசில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி விவகார அமைச்சராக இருந்தார்.
வணக்கத்திற்குரிய அசோக் பட்டாச்சார்யா | |
---|---|
சிலிகுரி நகராட்சியின் மேனாள் நகரத்தந்தை | |
பதவியில் 12 மே 2015 – 21 மார்ச் 2021 | |
முன்னையவர் | கங்கோத்ரி தத்தா |
பின்னவர் | கௌதம் தேவ் நிர்வாகக் குழுவின் தலைவர் |
மேற்கு வங்க நகர்ப்புற வளர்ச்சி, நகராட்சி விவகார அமைச்சர் | |
பதவியில் 1996–2011 | |
முதலமைச்சர் | ஜோதி பாசு புத்ததேவ் பட்டாசார்யா |
முன்னையவர் | பிரசாந்தா சூர் |
பின்னவர் | பாபி ஹக்கிம் |
மேற்கு வங்காள சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2016–2021 | |
முன்னையவர் | ருத்ர நாத் பட்டாச்சார்யா |
பின்னவர் | சங்கர் கோசு |
தொகுதி | சிலிகுரி |
பதவியில் 1991–2011 | |
முன்னையவர் | கௌர் சக்ரவர்த்தி |
பின்னவர் | ருத்ர நாத் பட்டாச்சார்யா |
தொகுதி | சிலிகுரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 ஏப்ரல் 1949 சிலிகுரி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி |
துணைவர் | ரதனா பட்டாச்சார்யா (இறப்பு 2021) |
வாழிடம் | சிலிகுரி |
முன்னாள் கல்லூரி | வடக்கு வங்காள பல்கலைக்கழகம் (இளங்கலை வணிகவியல்) |
தொழில் | அரசியல்வாதி, சமூகப்பணி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் சுதந்திர இந்தியாவில் மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் 1949 இல் பிறந்தார். மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்க பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.
அரசியல் வாழ்க்கை
தொகுஅசோக் பட்டாச்சார்யா சிலிகுரி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 1987 இல் சிலிகுரி நகராட்சியின் தலைவராகவும் ஆனார். மேலும், 1991 வரை தலைவராக இருந்தார். அவர் 1991 இல் முதல் முறையாக இந்தியப் பொதுவுடமைக் கட்சி வேட்பாளராக சிலிகுரி சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்துருந்து மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991, 1996, 2001, 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சிலிகுரி தொகுதியிலிருந்து ஐந்து முறை மேற்கு வங்காள சட்டப் பேரவைக்குத் தேர்தெடுக்கப்பட்டார்.[1] 1996 இல், மேற்கு வங்காளத்தில் முதல்வர் ஜோதி பாசு]வின் கீழ் இடது முன்னணி அரசாங்கத்தில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி விவகாரங்களுக்கான அமைச்சரானார். 2011 ஆம் ஆண்டு வரை இடது முன்னணி அரசாங்கம் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசிடம் அதிகாரத்தை இழந்தது வரை இவர் முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யாவின் கீழ் மாநில அமைச்சராகத் தொடர்ந்தார். 2011 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், சிலிகுரியில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசிடம் வேட்பாளர் ருத்ரநாத் பட்டாச்சார்யாவிடம் தோல்வியடைந்தார். ஆனால் இவர் 2016 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் வேட்பாளரும் இந்திய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் தலைவருமான பாய்ச்சங் பூட்டியாயாவை எதிர்த்து மீண்டும் சிலிகுரியில் வெற்றி பெற்றார்.
நகரத்தந்தை
தொகுமே 2015 இல், சிலிகுரி நகராட்சித் தேர்தலில் இடது முன்னணி வெற்றி பெற்றதை அடுத்து, அசோக் பட்டாச்சார்யா சிலிகுரி மாநகராட்சியின் நகரத்தந்தையானார். அசோக் பட்டாச்ரியா சிலிகுரி மாநகராட்சித் தேர்தல் 2021 இல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் எம்.டி ஆலம் கானிடம் வார்டு எண் 6 இல் தோல்வியடைந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "25 - Siliguri Assembly Constituency". Partywise Comparison Since 1977. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2010-09-25.