அஜந்தா (2012 திரைப்படம்)
அஜந்தா 2012 ஆம் ஆண்டு இளையராஜா இசையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு படமாக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம்[1][2][3][4].
அஜந்தா | |
---|---|
இயக்கம் | ராஜ்பா ரவிசங்கர் |
தயாரிப்பு | ராஜ்பா ரவிசங்கர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரமணா சாய் கிரண் வெங்கடேஷ் வினு மோகன் வந்தனா குப்தா ஹனி ரோஸ் பாண்டியராஜன் மனோபாலா மதன் பாப் ஸ்ரீமன் |
கலையகம் | எல்லோரா மூவி க்ளப் ஐ.என்.சி. |
வெளியீடு | 30 அக்டோபர் 2009(தமிழ்நாடு) 19 சூலை 2012 (கேரளா) |
நாடு | இந்தியா |
மொழி |
|
ராஜ்பா ரவிசங்கர் இப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்[5]. இளவரசு இப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார். இப்படம் 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு மூன்று வருடங்கள் படமாக்கப்பட்டது[6]. இப்படத்தின் தமிழ் பதிப்பு 2012 நவம்பர் 9 அன்று வெளியானது[7]. மலையாளம் மொழியில் 2012 ஜூலை 9 அன்று வெளியானது.
தமிழில் ரமணா கதாநாயகனாக நடித்துள்ளார்[8][9]. மலையாளத்தில் வினு மோகன், தெலுங்கில் சாய் கிரண் மற்றும் கன்னடத்தில் வெங்கடேஷ் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்[10]. தமிழ் மற்றும் தெலுங்கில் வந்தனா குப்தாவும், மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஹனி ரோஸும் கதாநாயகிகளாக நடித்தனர்[10].
கதைச்சுருக்கம்
தொகுஆனந்த் (ரமணா/வினு மோகன்) வளர்ந்துவரும் மேடைப் பாடகன். ஒருநாள் தன் வீட்டுக்குத் திரும்பிவரும் வழியில் தெருவோரத்தில் ஒரு ஓவியன் அற்புதமான ஓவியத்தை வரைந்து கொண்டிருப்பதை பார்க்கிறான். அவனது திறமையை நினைத்து வியக்கிறான். அந்த ஓவியத்தை வேடிக்கை பார்க்கும் மற்றவர்கள் அவனுக்கு சிறு தொகையைக் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். அப்போது மழைபொழியத் துவங்க அங்கு நின்ற அனைவரும் கலைந்து செல்கின்றனர். அந்த ஓவியம் மழைநீரில் அழியத் துவங்குகிறது. அந்தக் கலைஞனின் ஓவியத் திறமைக்கு அவனுக்குக் கிடைத்திருக்கும் தொகை குறைவு என்றெண்ணும் ஆனந்த் அன்று தான் பெற்ற ஊதியத்தை முழுவதும் அவனிடம் கொடுக்கிறான்.
ஆனந்த் ஒரு கிராமத்தில் அஜந்தா (வந்தனா குப்தா) என்ற பாடகியை சந்திக்கிறான். அவளுக்குக் கண் தெரியாது என்று அறிந்து வருத்தப்படுகிறான். அவளுக்குக் கண்பார்வை கிடைக்கத் தான் உதவுவதாக வாக்களித்து சென்னைக்கு அழைத்து வருகிறான். அவளது மருத்துவத்திற்காக பணம் சேர்க்கத் துவங்குகிறான். அஜந்தா அவனைக் காதலிக்கிறாள். திரைப்படங்களில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்து பிரபல பாடகனாக உயர்கிறான். கண் அறுவை சிகிச்சைக்காக அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வெளிநாட்டில் நடக்கும் கலைநிகழ்ச்சியில் பாடுவதற்குச் செல்கிறான். அவன் செல்லும் விமானம் விபத்தில் சிக்குகிறது. அஜந்தாவிற்கு கண்பார்வை கிடைக்கிறது. அவள் பார்வை வந்ததும் முதலில் ஆனந்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாள். அவளிடம் ஆனந்த் இறந்துவிட்டதைச் சொல்ல அதிர்ச்சியடைகிறாள். அவளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். அவளுக்குத் திருமணம் செய்ய முடிவுசெய்கின்றனர். திருமணம் நடைபெறும் நாளன்று இறந்துவிட்டதாக நினைத்த ஆனந்த் மீண்டும் வருகிறான். அதன்பின் அஜந்தா என்ன முடிவெடுத்தாள்? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
தொகுதமிழ்/தெலுங்கு
- ரமணா - ஆனந்த் (தமிழ்)
- சாய்கிரண் - ஆனந்த் (தெலுங்கு)
- வந்தனா குப்தா - அஜந்தா
- ஸ்ரீமன் (தமிழ்)
- ஆனந்த் (தெலுங்கு)
- பாண்டியராஜன்
- மனோபாலா
- மதன் பாப்
- மகாதேவன்
- பாலு ஆனந்த்
- வாஹீதா
- வரலட்சுமி
- முகுந்தன்
- பார்த்தசாரதி
- கிரேன் மனோகர்
- சித்திரம் சீனு
கன்னடம் / மலையாளம்
- வெங்கடேஷ் (கன்னடம்/மலையாளம்)
- வினு மோகன் (கன்னடம்/மலையாளம்)
- ஹனி ரோஸ் (கன்னடம்/மலையாளம்)
- ஹரிஸ்ரீ அசோகன்
- அணியப்பன்
- குண்டரா ஜானி
- பொன்னம்மா பாபு
- சலீம் குமார்
- மம்முக்கோயா
- கலாபவன் சந்தோஷ்
- உஷா
- வரதா
- சுவாதி
- மாதவி
- லலிதாஸ்ரீ
- பத்மினி
இசை
தொகுஇளையராஜா இப்படத்திற்கு 36 பாடல்களைப் பதிவு செய்து சாதனை செய்துள்ளார்[11]. திரைப்படத்தில் சில பாடல்கள் மட்டுமே இடம்பெற்றன. பாடலாசிரியராகள் மு. மேத்தா, பா. விஜய், முத்துலிங்கம், திருமாவளவன் மற்றும் சு. செந்தில்குமார் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். படத்தின் பாடல்கள் 2008 ஆகத்து மாதம் வெளியானது[12]. 2009 ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் மாநில திரைப்பட விருது இப்படத்திற்காக இளையராஜா பெற்றார்[13].
மேற்கோள்கள்
தொகு- ↑ "அஜந்தா". Archived from the original on 2009-08-11. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-08-11. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
- ↑ "அஜந்தா" (PDF).
- ↑ "விமர்சனம்".
- ↑ "அஜந்தா".
- ↑ "அஜந்தா இயக்குனர்".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "3 வருடத் தயாரிப்பு". Archived from the original on 2013-09-04. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
- ↑ "பட வெளியீடு". Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
- ↑ "ரமணா".
- ↑ "ரமணா".
- ↑ 10.0 10.1 "பன்மொழித் திரைப்படம்". Archived from the original on 2008-11-02. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
- ↑ "இளையராஜா 36 பாடல்கள் சாதனை". Archived from the original on 2010-01-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
- ↑ "இசை வெளியீடு". Archived from the original on 2014-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.
- ↑ "மாநில விருது - சிறந்த இசையமைப்பாளர்". Archived from the original on 2009-10-01. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.