அஞ்சனா சின்கா
அஞ்சனா சின்கா (Anjana Sinha) என்பவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியக் காவல் பணியில் 1990-தொகுதி அதிகாரி ஆவார். இவர் தற்போது காவல்துறைத் தலைவராக மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக உள்ளார். மேலும் ஐதராபாத்தில் உள்ள தேசிய தொழிற்சாலை பாதுகாப்பு அகாதமியின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.[1]
அஞ்சனா சின்கா, Anjana Sinha | |
---|---|
இயக்குநர், மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை | |
முன்னையவர் | ஜாபிர் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
வாழிடம்(s) | ஐதராபாத், தெலங்காணா |
முன்னாள் கல்லூரி | லேடி ஸ்ரீ ராம் கல்லூரி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமி |
கல்வி
தொகுசின்கா தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும், பொதுக் கொள்கையில் நிபுணத்துவத்துடன் பெங்களூர், இந்திய மேலாண்மை கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை கல்வியினையும் முடித்தார். இவர் பிராட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அமைதி காத்தல் மற்றும் பன்னாட்டுத் திறன் கட்டமைப்பில் ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தால் நிதியளிக்கப்பட்ட செவனிங் உதவித்தொகையைப் பெற்றார்.[2]
பணி
தொகுகூடுதல் காவல்துறை இயக்குநர் பதவியிலிருந்த சின்கா 2016ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச அரசால் குறிப்பாக மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்டார். சின்கா தனது மாநில தொகுப்பிலிருந்து மத்திய அரசுக்குப் பிரதிநிதித்துவம் பெற இரண்டு முறை விண்ணப்பித்தார், முதலில் 3 சனவரி 2016 அன்றும், மீண்டும் 26 திசம்பர் 2017 அன்றும் விண்ணப்பம் செய்தார். இவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள தேசிய தொழில்துறை பாதுகாப்பு அகாதமியின் இயக்குநராக பணிபுரியும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் மத்திய பிரதிநிதியாக காவல்துறைத் தலைவர் பொறுப்பில் உள்ளார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "CISF Premier Security Force of the Country – Anjana Sinha, Director NISA". Hyderabad: Press Information Bureau. 20 December 2019. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1597114.
- ↑ "Anjana Sinha – 2012 Fall Visiting Scholar". Casi.sas.upenn.edu. Center for the Advanced Study of India, University of Pennsylvania. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
- ↑ "Appointment of Ms. Anjana Sinha, IPS (AP:90) as Inspector General in CISF on deputation basis" (PDF). Ips.gov.in. Ministry of Home Affairs, Govt. of India. 15 February 2018. Archived from the original (PDF) on 18 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 April 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)