அஞ்சலி சர்மா
இந்திய துடுப்பாட்ட வீராங்கனை
அஞ்சலி சர்மா (Anjali Sharma) இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்ட வீராங்கனையாவார். மூன்று ஒருநாள் பன்னாட்ட துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடினார்.[1] 1/32 என்ற சிறந்த பந்துவீச்சு சாதனையுடன் இரண்டு ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.[2]
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அஞ்சலி சர்மா | ||||||||||||||||||||||||||
பிறப்பு | 12 திசம்பர் 1956 புது தில்லி, இந்தியா | ||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 5 அங் (1.65 m) | ||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | ||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை அரை சுழல் | ||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 11) | 1 சனவரி 1978 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 8 சனவரி 1978 எ. ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 4 மே 2020 |
1975-1984 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தில்லி மாநிலத்திற்காக முதல் தர துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடினார். மேலும் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய போட்டிக்கு தலைவராகவும் இருந்தார்.[3]
2020 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இவர் தில்லி மற்றும் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் உயர்மட்ட மன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டார். நவம்பர் 2020 ஆம் ஆண்டில் இவர் 2020-21 ஆம் ஆண்டுக்கான மன்றத்தின் வீரர் நலக் குழுவின் தலைவரானார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "A Sharma". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-10-30.
- ↑ "A Sharma". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-10-30.
- ↑ "ICA 2019 Election – Candidate Information Sheets" (PDF). Indian Cricketers Association. p. 28. Archived from the original (PDF) on 2021-01-10.
- ↑ "DDCA to induct Tilak Raj, Anjali Sharma in Apex Council, Bhardwaj may be removed". The Times of India (in ஆங்கிலம்). June 17, 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.