அஞ்செட்டி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

அஞ்செட்டி, தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி ஆகும்[4][5]

அஞ்செட்டி
—  ஊராட்சி  —
அஞ்செட்டி
இருப்பிடம்: அஞ்செட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°21′12″N 77°43′22″E / 12.3533752°N 77.722703°E / 12.3533752; 77.722703
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ம. சரயு, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இந்த ஊராட்சிப் பகுதியில் எருமுதனப்பள்ளி, தெவன்தொட்டி, பயில்காடு, ஏலுமனை தொட்டி, மாவனட்டி, மரியாலம், பனை, பனை வசதொட்டி, காமாச்சிபுரம், வன்னாத்திபட்டி, தாம்சனப்பள்ளி, சித்தாண்டபுரம், சீங்கோட்டை, புதூர், ஏரிக்கோடி, மிட்டாதாரன் கோட்டாய், ராமர் கோவில் என மொத்தம் 37 கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஊராட்சியின் மக்கள் தொகை 26450 ஆக உள்ளது.

பெயர் வரலாறு தொகு

இவ்வூர் பெயர் குறித்து கெலமங்கலம்-இராயக்கோட்டை சாலையின் மேற்குப் புறத்தில் உள்ளஈர்லு குடில் என்ற இடத்தில் கிடைத்த நடுகல் கல்வெட்டில் குறிக்கபட்டுள்ளது. இது கி.பி. 1040 ஆண்டைச் சேர்ந்த இராசேந்திர சோழனின் 28 ஆவது ஆட்சியாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு ஆகும். இதில் அஞ்சிட்டம் என்று அஞ்செட்டி குறிக்கபட்டுள்ளது. இதில் குறிக்கப்பட்டுள்ள அஞ்சிட்டம் என்பதில் உள்ள இகாரம் எகரமாக திரிந்து நிலையீற்று இறுதி முன் அகரம் இகரமாகி, இறுதி மகரம் கெட்டு அஞ்செட்டி என்று பிற்காலத்தில் மாறியுள்ளது.[6]

சிறப்பு தொகு

இங்கு 10-06-1964 அன்று அப்போதைய சென்னை மாகாண முதல்வர் காமராசரால் அரசு உயர்நிலைப்பள்ளி திறந்து வைக்கப்பட்டது. தற்போது இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. வருடத்திற்கு சுமார் 1300 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். எருமுதனப்பள்ளி வனப்பகுதியில் சுமார் 2000 வருடம் பழமை வாய்ந்த குளம் மற்றும் அக்கால மக்களால் வழிபடப்பட்ட வன தேவதை கோவில்கள் உள்ளன. மேலும் இங்கு மிகப்பழமை வாய்ந்த அக்கால மக்களால் கட்டப்பட்ட கல் வழித்தடங்கள் மற்றும் ஊர் எல்லையை சுற்றிலும் கல்லினால் கட்டப்பட்ட கல் கோட்டைகள் இன்றும் காணக்கிடைக்கின்றன.

சுற்றுலா தலங்கள் தொகு

இப்பகுதியை சுற்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களும், 30க்கும் மேற்பட்ட உயர் மலைகளும் உள்ளன. வளைவான சாலைகளும், மலை கால் வழித்தடங்களும் (எருமுத்தனப்பள்ளி) காணக்கிடைக்கின்றன.

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-07-18.
  6. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 117. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்செட்டி&oldid=3658102" இலிருந்து மீள்விக்கப்பட்டது