அடிமுலப்பு சுரேஷ்
அடிமுலப்பு சுரேஷ் (Audimulapu Suresh) (பிறப்பு: ஏப்ரல் 27, 1964) ஓர் முன்னாள் அரசு ஊழியரும், அரசியல்வாதியும் பதினான்காவது ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள எர்ரகொண்டபாலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராவார். தற்போது, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையில் ஆந்திரப் பிரதேச அரசின் கல்வி அமைச்சராக உள்ளார்.[2][3]
அடிமுலப்பு சுரேஷ் | |
---|---|
ஆந்திரப் பிரதேச அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 ஏப்ரல் 2022 | |
முன்னையவர் | போட்சா சத்யநாராயணா |
ஆந்திரப் பிரதேச அரசின் கல்வித் துறை அமைச்சர்[1] | |
பதவியில் 8 ஜூன் 2019 – 7 ஏப்ரல் 2022 | |
முன்னையவர் | கண்ட சீனிவாசராவ் |
பின்னவர் | போத்சா சத்யநாராயணா |
ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | டேவிட் ராஜு பாலபர்த்தி |
தொகுதி | எர்ரகொண்டபாலம் |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | பி. என். விஜய்குமார் |
பின்னவர் | டி. ஜே. ஆர். சுதாகர் பாபு |
தொகுதி | சந்தனூதலபாடு |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | புதியதாக உருவாக்கப்பட்டது |
பின்னவர் | டேவிட் ராஜு பாலபர்த்தி |
தொகுதி | எர்ரகொண்டபாலம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 ஏப்ரல் 1964 மார்க்கபுரம் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | டி. எச். விசயலட்சுமி |
பிள்ளைகள் | அடிமுலப்பு விசால், அடிமுலப்பு சிருஷ்டி |
பெற்றோர் |
|
வேலை | அரசியல்வாதி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபிரகாசம் மாவட்டத்தின் மர்க்கபூரில் ஜார்ஜ் குழும நிறுவனங்களின் நிறுவனர் அடிமுலப்பு சாமுவேல் ஜார்ஜுக்கு பிறந்தார். இவரது தந்தை பதினோராவது மக்களவை பொதுத் தேர்தலில் ஓங்கோல் தொகுதியில் போட்டியிட்டார். சுரேஷ் 1984 இல் தேசிய தொழில்நுட்பக் கழகதில் குடிசார் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார், பின்னர் கணினி அறிவியல் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[4] இவர் டி. எச். விஜயலட்சுமி என்பவரை மணந்தார். முன்னதாக, சுரேஷ் இந்திய ரயில்வேயில் துணை நிதி அதிகாரி மற்றும் தலைமை கணக்கு அதிகாரியாக பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
தொகு2009 ஆம் ஆண்டு இந்திய இரயில்வேயில் இருந்து அரசு ஊழியர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 மற்றும் 2019 பொதுத் தேர்தர்களில் எர்ரகொண்டபாலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2014 இல் சந்தனூதலபாடு சட்டமன்றத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
ஆண்டு | தொகுதி | அரசியல் கட்சி | விளைவு |
---|---|---|---|
2009 | எர்ரகொண்டபாலம் சட்டமன்றத் தொகுதி | இந்திய தேசிய காங்கிரசு | வெற்றி |
2014 | சந்தனூதலபாடு சட்டமன்றத் தொகுதி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | வெற்றி |
2019 | எர்ரகொண்டபாலம் சட்டமன்றத் தொகுதி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | வெற்றி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Andhra Pradesh Ministers: Portfolios and profiles" (in en-IN). 8 June 2019 இம் மூலத்தில் இருந்து 15 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220415155454/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-ministers-portfolios-and-profiles/article27698301.ece.
- ↑ "AP Cabinet 2019: 25 ministers inducted into Jaganmohan Reddy's Cabinet". Bennett, Coleman & Company. https://timesofindia.indiatimes.com/city/amaravati/andhra-pradesh-cm-ys-jagan-cabinet-ministers-complete-list/articleshow/69699829.cms.
- ↑ "Council of Ministers". Archived from the original on 2020-11-02. பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
- ↑ Staff Reporter. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Ph.D.-awarded-to-MLA/article16136111.ece.
- ↑ "Suresh Audimulapu".