அடூர் பாசி
மலையாளத் திரைப்பட இயக்குநர்
அடூர் பாசி என்று அறியப்படும் கே. பாஸ்கரன் நாயர் [1] (1 மார்ச் 1929 - 29 மார்ச் 1990), கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். 1950 ஆம் ஆண்டு முதல் 1980 வரையான மலையாளத் திரைப்படங்களில், எவர் கிரீன் ஹீரோவான பிரேம் நசீரின் நகைச்சுவைக் காட்சிகளில் இவரது பெருங்களிப்புடைய செயல்களும் பாத்திரங்களும் நகைச்சுவைக் காட்சிகளாக அமைந்தன. இவர் சரளமான ஆங்கிலத்தில் தனது சொற்பொழிவுகளுக்காகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். இவர், 1970களின் பிற்பகுதியில் மூன்று மலையாளப் படங்களை இயக்கினார்.[2] புகழ் பெற்ற மலையாளத் திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர், மலையாளத் திரைப்படங்களில் சிலவற்றில் நடித்தும் பாடியும் உள்ளார்.
அடூர் பாசி (Adoor Bhasi) | |
---|---|
பிறப்பு | பாஸ்கரன் நாயர் 1 மார்ச்சு 1927 திருவனந்தபுரம், திருவாங்கூர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | மார்ச்சு 29, 1990 | (அகவை 63)
மற்ற பெயர்கள் | பாசி |
செயற்பாட்டுக் காலம் | 1953-1990 |
உயரம் | 5'6" |
வாழ்க்கைத் துணை | இல்லை |
இயக்கியவை தொகு
- மாடத்தருவி (1967)
- குடும்பம் (1967)
- ரகுவம்சம் (1978)
நடித்தவை தொகு
|
|
|
விருதுகள் தொகு
கேரள மாநில விருதுகள்
- 1974 சிறந்த நடிகர் – சட்டக்காரி
- 1979 சிறந்த நடிகர்– சிறியசண்டெ க்ரூர க்ரித்யங்கள்
- 1984:– ஏப்ரல் 18
சான்றுகள் தொகு
- ↑ "ഹാസ്യത്തിന്റെ തമ്പുരാന്: അടൂര് ഭാസി". http://malayalam.webdunia.com/entertainment/film/profile/0803/30/1080330025_1.htm.
- ↑ "Manorama Online | Movies | Nostalgia |". http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=13742595&programId=7940855&channelId=-1073750705&BV_ID=@@@&tabId=3.